அழிவின் பாதையில் மனித இனம்

  • By Magazine
  • |

– வீரபாலாஜி

அழிவும் பாதை நடக்கும் மனிதா

விஞ்ஞானி என்பதும் உன் பெயரோ

உண்டி உடை உறையுள் அன்றித்

தேவை ஏதும் உனக்குளதோ

உணவே என்று முன் முதல் தேடல்

உன் உழைப்பு அதற்கே அஃதுண்மை

தட்டின்றி உணவு நீ பெற்றிடவே

பயிர்த்தொழில் ஒன்றே ஒரேவழி

நிலத்தை அகழ நீ துடிப்பதுவோ

ஹட்ரோ கார்பன் தானே உன் ஆசை

பசி தீர்க்க அதை நீ உண்பாயோ

சுட்டெரிக்கும் கதிரவன் நீ அறியாயோ

வெயில் தரும் சக்திக்கு ஏது எல்லை

அதுவே போதுமென்றென்றும் நீ இரு

பஞ்சபூதங்கள் இறைவடிவன்றோ

அதை நீ உணருவது எந்நாளோ

இனியும் நிலத்தை நீ அகழ்ந்திடினே

அந்நிலமே உன்னை அழித்து விடும்

மாந்தர் யாவரும் அழியும் வேளை

நீ மட்டும் தப்பிப் பிழைப்பாயோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *