நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
வளவன் ஒரு வெற்றியாளன் என்ற நாவலை எழுதியுள்ளார் முனைவர். செந்துறை சி.தங்கராசு அவர்கள்.பொதுவாக மதங்களின் மீதும், ஜாதிகளின் மீதும் உள்ள வெறியில் பல நேரங்களில் சக மனிதர்கள் ஒதுக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் நடைபெறுகிறது. மட்டுமின்றி வேறு நாடுகளில் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் பேரிலும் சகமனிதர்களை ஆறறிவு நிறைந்த மிருகங்கள் வேட்டையாடுவது நாம் அறிந்ததே. நம் நாட்டிலும் ஜாதி, மதம் ஆகியவற்றை மீறி திருமணம் செய்பவர்கள் கவுரவக்கொலை என்ற பெயரில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இன்றைய […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
இரண்டு கரைகளும் நிறைந்து வழியும் அளவிற்கு மண்ணியாற்றில் வருகிறது தண்ணீர். வழக்கத்தை விட சற்று அதிகம் தான். அந்த தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல தெரிகிறது மூங்கில் தட்டிப்பாலம். ஆற்றை வேடிக்கைப் பார்த்தபடி அப்பாலத்தில் நின்று கொண்டிருக்கிறான் வீரா. வீரா ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தானிபுரம் தான் அவனது ஊர்.அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்து தினமும் பேருந்துக்கு ஆத்தியூர் வந்து விடுவான் காலை எட்டு மணிக்கு வரும் பேருந்தில் பள்ளிக்கூடம் செல்வதற்காக, ஏழரை மணிக்கெல்லாம் வந்து […]
Read More
ஊழ்வினை
  • By Magazine
  • |
நம்மிடையே பாயும் நதிக்கு பெயரில்லை அப்படியே ஏதோவொரு பெயர் வைத்து அழைத்தாலும் அதற்கு பொருந்தவில்லை இதுவரையான வாழ்வின் அத்தனை இன்ப துன்பங்களையும் யாதொரு புகார்களும் இன்றி ஏற்றுக் கொண்டு ஆத்தோடு அதன் போக்கில் போகும் குணம் நமது விட்ட குறை தொட்ட குறையாக விடுபட்ட ஏதோவொரு கணக்கை சமன் செய்ய வந்திருக்கிறாய் திணை திரிந்து தரிசாய்க் கிடந்த நிலத்தில் ஏரோட்டி பிரதி பலன் பாராது விதைக்கிறாய் அன்பெனும் பெரு வித்தை வளர்ந்து பல்கிப் பெருகி நிற்கும் அதன் […]
Read More
இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
  • By Magazine
  • |
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட வாழ்வை பற்றிய கவலை. வாழ்கிறாய் என்றால் பயமில்லையே. வாழ்வில் நிறைவேற்றம் இருக்குமானால் பயமே இருக்காது. வாழ்வை இனுபவித்திருந்தால், வாழ்வின் உச்சத்தில் என்னென்ன கிடைக்குமோ அதையெல்லாம் பெற்றுக் கொண்டிருந்தால்,  வாழ்வே ஒரு பரவசமாக இருந்திருக்குமானால். ஆழ்ந்த ஒரு கவிதையாக இருந்திருக்குமானால், உனக்குள் துடிக்கும் ஒரு கீதமாக இருந்திருக்குமானால், ஒரு கொண்டாட்டமாக […]
Read More
அன்பென்னும் வீடு..
  • By Magazine
  • |
அன்பென்னும் செங்கல்லை ஊன்றி அன்பென்னும் சுவரைக்கட்டி அன்பென்னும் மேற்கூரையை வேய்ந்து அன்பென்னும் வண்ணமும் பூசி எளிதாகவே கட்டி முடிக்கப்படுகிறது அன்பென்னும் வீடு விரிசல் எதுவும் விழாமல் பார்த்துக்கொள்வது தான் பெரும் போராட்டமாக இருக்கிறது. – கூடல் தாரிக்
Read More
தோற்றமயக்கம்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மயினியோ, ஆத்தடிமாடங்கோயில்ல? ஒரு அதிசயத்தைக் கேட்டேளா? சொல்லுவுளே, சொன்னாத்தானே தெரியும். அதயேங் கேக்கயோ ஆத்தடிமாடன் சொள்ளமாடனுக்கு கண்ணு  மூடிமூடித் தொறக்காம….கேக்கயில                                                   புல்லரிச்சுற்று..படபடப்புடன் சொல்லி முடிக்குமுன் தெவுங்கிவிட்டாள் தெக்கூட்டு விசியா . எவ சொன்னாவுளே நீ நேருல பாத்தியா? நம்பமறுத்த தொனியில் கேட்டாள் கவுசல்யா. நேருல பாத்தியா தேருல பாத்தியான்னு விண்ணாணம்லாம் பேசாதிங்யொ இப்பதான் கோரசேரி மயினி சொன்னா. பாத்துக்கிடுங்கோ. அவளுக்கும் வேலையில்ல உனக்கும் சோலியில்ல. உடுத்த சீலைய நம்பமாட்டேளா? நீங்யொ இருந்திருந்து வொங்கள்ட்டவந்து […]
Read More
உலகின் முதல் எழுத்தாளர்
  • By Magazine
  • |
ஆதிகால சுமேரியாவும், பாபிலோனும்தான் நாகரிகம், மற்றும் எழுத்துக்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது.   யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளுக்கிடையே இருந்த, பண்டைய மெசபடோமியாவின்  ஒரு நகரம்தான் பாபிலோன். மெசபடோமியாதான் மனித நாகரிகத்தின் தொட்டில் என்றும், வளமான பிறைநிலம் (Fertile Crescent)  என்றும் போற்றப்படுகிறது.  அந்த காலம், கற்காலத்தின் முடிவாகவும், பித்தளை/உலோக காலத்தின் துவக்க காலமும் கூட. அப்போதுதான்  எழுத்து துவங்கியதும் கூட.  பழங்கால சுமேரியர்கள் கல்வியில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். எதனையும் பதிவு செய்வது அங்கே முக்கியமாக கருதப்பட்டது. தமது […]
Read More
தமிழ் நாடகத்தந்தை சங்கரதாசு சாமிகள்
  • By Magazine
  • |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால், ‘நாடக உலகின் இமயமலை’ என்று புகழப்பெற்ற சங்கரதாசுசாமிகள் தமிழ் நாடகத்தந்தை என்றும் போற்றப்படுகிறார். புதுநெறிஇவர் நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கும்இசைதமிழுக்கும் புதுநெறி வகுத்தவர். கூத்துமரபில் இருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடகத்தை அரங்கமரபிற்கு ஏற்ப முறைகளை உருவாக்கியதோடு மட்டுமின்றி தெருக்கூத்துகளையும் புதுப்பித்தவர். தமிழ் நாடக வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப்பயிற்சி அளித்தார்.சங்கரதாசுசாமிகள், தூத்துக்குடியில் தமிழ்ப் புலமைமிக்க தாமோதரன்-பேச்சியம்மா தம்பதியருக்கு மகனாக 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி […]
Read More
மக்கள் கவிஞர் தமிழ் ஒளி
  • By Magazine
  • |
_ பூ.வ. தமிழ்க்கனல் “வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா – எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா !” ஆம். இந்த வரிகளை எழுதிய காலனை வென்று வாழும் கவிதைகளை இயற்றிய மகத்தான மக்கள் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நூறாண்டு விழா ஆண்டு இது.  பாரதிதாசனுக்கு 33 வயது இளையோன். கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924 செப்டம்பர் 21 ஆம் தேதியாகும். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் […]
Read More
பரிமாணங்களைக் கண்ணுறுதல்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் வீட்டில் பல்லியைப் புகைப்படம் எடுத்தான் மகன். நான் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்தேன், இரண்டு பல்லிகளுமே குட்டிப் பல்லிகள். நான் எடுத்தப் புகைப்படத்தில் பல்லிக்குட்டியின் உள்ளுறுப்புகள் வண்ண நிழலாகத் தெரிகின்றது, அடிவயிற்றோடு சில உறுப்புகளும் தெரிகின்றன, குடல், ஈரல், மண்ணீரல் என அவை இருக்கலாம். மகன் ஒருநாள் முன்னரே அந்தப் புகைப்படத்தை எடுத்துவிட்டான். அடுத்தநாள் தூக்கத்திற்காக படுக்கையைத் தட்டும்போதுதான் சொன்னான். “அப்பா… அப்பா…. உங்க செல்பேசியில் ஒரு புகைப்படம் எடுத்தேன், பாருங்க..” “எந்த இடத்தில் […]
Read More