வருணின்  சாகசம்

வருணின்  சாகசம்

  • By Magazine
  • |

– காளீஸ்வர்

அன்றைக்கு ராத்திரி 10 மணி ஆனதுக்கு அப்புறம் கூட வரும் டிவிய அணைக்காம கார்ட்டூன்ஸ் பார்த்துகிட்டே இருந்தான். அம்மா அவன திட்டி நாளைக்கு திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போகணும் போய் சீக்கிரம் தூங்குற வேலைய பாரு அப்படின்னு பெட்ரூமுக்கு விரட்டி விட்டாங்க. போகும்போதுதான் அருணுக்கு நாளைக்கு டீச்சர் கொடுத்த ஹோம் ஒர்க் ஞாபகத்துக்கு வந்தது. வழக்கமா ஏதாவது அஞ்சு பக்கம் எழுதணும் அப்படின்னா கூட, அம்மா அப்பா கிட்ட கேட்டு எதையாவது எழுதி கொடுத்துவிடுவான். இந்த ஹோம் வொர்க் கொஞ்சம் கஷ்டமானது தான், புதுசா ஒரு சயின்டிஃபிக் கதையை எல்லார் முன்னாடியும் சொல்லணும். எல்லா ஸ்டுடென்ட்ஸும் மூணு நிமிஷம் இந்த கதையை சொல்லணும். இந்த ஹோம் ஒர்க் எல்லாம் இப்பதான் ஞாபகத்துக்கு வரணுமா? நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தா இன்னைக்கு நைட்டு தூக்கமும் வராது.

நாளைக்கு அந்த இங்கிலீஷ் மிஸ் வேற என்னலாம் திட்ட போறாங்களோ தெரியல. போன தடவை இங்கிலீஷ்ல ஒரு ஸ்டோரி சொல்லுங்க அப்படின்னு சொன்னதுக்கு, நம்ம கண்ட கண்ட கதையை சொன்னோம்னு 100 டைம்ஸ் அப்பாலஜி எழுத சொல்லிட்டாங்க. இந்த ஹோம் ஒர்க் ஒழுங்கா பண்ணலைன்னா அடுத்த பேரன்ஸ் மீட்டிங்ல போட்டு வேற விட்டுடுவாங்க. அப்புறம் அப்பாகிட்ட ஆசையா வாங்கி கேட்டிருக்கக்கூடிய கிரிக்கெட் பேட்டும் கிடைக்காமல் போய்விடும். இப்ப என்ன பண்றது?? என்ன கதைய சொல்றது ?? பேசாம இந்த கார்ட்டூன்ல பார்த்த கதைய சொல்லிடுவோமா!! ஏற்கனவே பொம்மை படம் ஓவரா பார்க்காதன்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க இத பொய் சொன்னவுடனே தோலை உரிச்சிடுவாங்களே..

படுக்கையில் படுத்த அருணுக்கு அடுத்த பத்து நிமிஷத்துக்கு தூக்கமே வரவில்லை. கொஞ்சம் தண்ணீரை குடித்துப் பார்த்தான், சீலிங் ஃபேன் ஐந்தாம் நம்பரில் வைத்தான். என்ன செய்தாலும் தூக்கம் மட்டும் வரவில்லை. நாளைக்கு எப்படி டீச்சரை சமாளிப்பது என்பது மட்டும் தான் அவனுடைய மனசில் ஓடிக்கொண்டிருந்தது. ஏதாவது தப்பான பதில் சொன்னால் ஒட்டுமொத்த கிளாசும் இவனை தான் பார்த்து சிரிக்கும். என்ன செய்வது என புலம்பிக்கொண்டே இருந்தவன் அவனுக்கே தெரியாமல் உறங்கிப் போனான்.

திடீரென அவன் பெட்ஷீட் மீது ஏதோ வந்து மோதுவது போல அவனுக்கு தோன்றியது. எப்படியும் பக்கத்து வீட்டு பூனை தான் என நினைத்துக் கொண்டு கண் விழித்து பார்த்தான். ஆனால் பார்த்தவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது, ஏதோ கொசு பத்தி யிலிருந்து புகை வருவது போல வந்து கொண்டிருந்தது. பெட்ஷீட் மடிப்புகளுக்கு இடையே, ஏதோ சிக்கிக் கொண்டிருந்தது. என்னடா இது புதுசா இருக்குது. புகை எல்லாம் வேற அதுல இருந்து வருது. ஒருவேளை எவனாவது ராக்கெட் பொருத்தி நம்ம ரூமுக்குள்ள போட்டுட்டானோ!! என அவன் யோசித்துக் கொண்டே பெட்சீட்டை விளக்கிப் பார்த்தால் மிகப்பெரிய அதிர்ச்சி.

சின்னதாக ஏதோ முட்டை வடிவத்தில் உருண்டையாக இருந்தது. அதுக்கு உள்ள இருந்து தான் பத்தியை கொளுத்தி வைத்தது போல கொஞ்சம் புகையும் வந்து கொண்டிருந்தது. அவன் அந்த பொருளை கவனமாக பார்த்தான். அவனுக்கு அது என்னவென்று புரியவில்லை. என்னடா இது எவனாச்சும் புதுசா ரிமோட் கண்ட்ரோல் பொம்மை எதுவும் வாங்கி வைத்திருக்கிறானா. ஒருவேளை இது கல்யாண வீட்டுல பறக்க விடுற ட்ரோனா இருக்குமோ. சரி என்னன்னு பாத்துருவோம் அப்படின்னு ரூமின் லைட்டை போட்டான் வருண். அப்போதுதான் அந்த பொருளுக்குள் இருந்து ஏதோ சிறிய அசைவு தெரிவது போல அவனுக்கு தோன்றியது.

அப்புறம் இந்த விஷயத்தை அவன் எங்கோ பார்த்து இருக்கிறான் என்பது போல தோன்றியது. உடனே பெட்டுக்கு பக்கத்துல இருக்கக்கூடிய தன்னுடைய நோட்டை எடுத்து, கிளாசில் அவனுடைய நண்பன் கணேஷ் வரைந்து கொடுத்த ஏலியன் ஸ்பேஸ் ஷிப்பின் படத்தை பார்த்தான். என்னடா இது கணேஷ் வரைந்து கொடுத்தது போலவே இதுவும் இருக்குது. உள்ள வேற ஏதோ சத்தம் லா வருது. ஒருவேளை இதுக்குள்ள இருந்து ஒரு ஆபத்தான ஏலியன் வந்து நம்ம ஒட்டு மொத்த உலகத்தையும் அழிச்சிருமோ!!!

வருண் இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த குட்டியான உருளை வடிவமைப்புக்குள் இருந்து வெளிச்சம் வந்தது. ஒரு செகண்டுக்குள் அந்த வெளிச்சம் ஒட்டுமொத்த ரூமிற்குள்ளும் பரவியது. திடீரென அதிலிருந்து வரும் புகையும் அதிகமானது.

அம்மா மா என சத்தம் போட்டபடி பெட்டுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டான். அவ்வளவுதான் நம்ம கதை முடிஞ்சு போச்சு.. நம்ம உலகத்தை யாராலும் காப்பாத்த முடியாது. இந்த ஏலியன் நம்ம எல்லாரையும் அழித்துவிடும். அப்படின்னு அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஏதோ ஒரு உருவம் மெல்ல மெல்ல அவனை நோக்கி வருவது தெரிந்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பெட்சீட்டை தூக்கி பார்த்தான். பார்த்தால் அவனுடைய பெரு விரல் அளவுக்கு இருக்கக்கூடிய சிறிய உருவம் அவன் கண்களின் முன் தெரிந்தது.

நீ யாரு? ஏலியனா? என பயந்த குரலில் அழுதபடியே கேட்டான் வருண். அந்த சிறிய உருவம் தன் கையை அசைத்ததும் மறுபடியும் ஒருமுறை அம்மா என சத்தம் போட்டு விட்டான். ஆனால் இவன் சத்தம் போட்டதில் அது சிறிய உருவமும் பயந்து தான் வந்த ஸ்பேஸ் ஷிப் உள்ளே போய் ஒளிந்து கொண்டது. ஐந்து நிமிடம் இருவர் தரப்பிலிருந்தும் எந்த சத்தமும் இல்லை, பிறகு ரெண்டு பேரும் கொஞ்சம் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்.

பார்ப்பதற்கு குட்டியாக பிரவுன் நிறத்தில், வித்தியாசமான உடை அணிந்து கொண்டு கொஞ்சம் முட்டை வடிவத்தில் தலையோடு இருந்தது அந்த ஏலியன். நீ ஏலியன் தான?? ஆமா நானும் ஏலியன் தான். ஏன் நீ கூட தான் ஏலியன்.

இல்லை இல்லை நான் ஏலியன் கிடையாது என் பேரு வருண். அப்படியா!! என் பேரு வாட். நானும் ஒன்னும் ஏலியன் எல்லாம் கிடையாது. உங்க பூமி இருக்கிறது போல பக்கத்தில் இருக்கிற ஒரு கிரகத்திலிருந்து தான் நானும் வந்திருக்கிறேன். எங்க போறதுன்னு தெரியாம சுத்திட்டு இருந்தேன் தெரியாம உன் ரூமுக்குள்ள வந்துட்டேன்.

அப்படியா ஆமா நீ ஏன் இவ்வளவு குட்டியா இருக்க. எங்க கிரகத்துல எல்லாருமே குட்டியா தான் இருப்போம். உங்க கிரகத்துல வந்து பார்த்தா எல்லாரும் இவ்ளோ பெருசா இருக்கீங்க. நான் என்னப்பா பண்ண முடியும்

ஆமா உன் கிரகம் எவ்வளவு தூரத்தில இருக்கு. என்னுடைய கிரகம் இங்க இருந்து சுமாரா ஏழு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்குது. அது என்னப்பா ஒளியாண்டுனா என்னது.

ஒளி ஆண்டு அப்படின்னா நீ உன் வீட்ல லைட் சுவிட்ச் போடுற இல்ல. பல்பு எரிய ஆரம்பிச்சதும் அந்த வெளிச்சம் இந்த விண்வெளியை நோக்கி பயணிக்க தொடங்கும். இந்த லைட் வெளிச்சத்தால ஒரு செகண்டுக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் போக முடியும். இந்த லைட் வெளிச்சம் ஏழு வருஷத்துல எவ்வளவு தூரம் போகுதோ அவ்வளவு தூரத்தில் இருந்து தான் நான் வாரேன். எப்படிப்பா சொல்ற.. எங்க ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்கு போகணும் அப்படின்னாலே ரெண்டு மணி நேரம் ஆகும். நீ அவ்வளவு தூரத்தில் இருந்து வரதுக்கு எவ்வளவு வருஷம் ஆச்சு

என்கிட்ட இருக்க கூடிய ஸ்பேஸ் ஷிப் மூலமா வெறும் பத்து நிமிஷத்துல இங்க வந்து சேர்ந்திட முடியும். அந்த அளவுக்கு நாங்க ஸ்பீடா டிராவல் பண்ணி வந்துருவோம். சரி நான் போர்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்.  நீ எந்த ஸ்டாண்டர்ட் படிக்கிற?

நீ போர்த் ஸ்டாண்டர்டா நானும் fourth ஸ்டாண்டர்ட் தான் படிக்கிறேன். எங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க் கொடுத்திருக்காங்க. பக்கத்துல இருக்கிற ஒரு கிரகத்துக்கு போயி அங்கு இருக்க விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டு வந்து கிளாஸ்ல கதையா சொல்லணும் அதுக்காக தான் சுத்திக்கிட்டு இருந்தேன் தெரியாம உங்க கிரகத்துக்கு வந்துட்டேன்.

என்னப்பா இது உங்க கிரகத்திலேயேயும்மா ஹோம் ஒர்க் எல்லாம் கொடுக்கிறாங்க. இங்கதான் எங்களுக்கு ஹோம் வொர்க் குடுத்து டார்ச்சர் பண்றாங்கன்னு பார்த்தா உங்க கிரகத்திலேயே அந்த தொல்லை எல்லாம் உண்டுமா?

ஆமப்பா எங்க கிரகத்திலேயே அதெல்லாம் உண்டு. பூமிங்கிற உங்கள் கிரகத்துல நிறைய பிரச்சனைகள் இருப்பதா நீங்க கிரகத்தில் இருக்கக்கூடிய டீச்சர் சொல்லி இருக்காரு. அத பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக தான் இங்க வந்திருக்கேன்.

அப்படி என்னப்பா எங்க கிரகத்தில் பிரச்சனை இருக்குது? எனக்கு எதுவும் தெரியாது. என்கிட்ட கேக்க போனா ஹோம் ஒர்க் வேணா எங்க கிரகத்தில் ஒரு பெரிய பிரச்சனையா சொல்லணும்.

ஐயோ வருண் ஹோம் ஒர்க் பிரச்சனையை விடு. உங்க பூமியிலே இன்னும் தீக்க வேண்டிய எவ்வளவோ பிரச்சனைகள் இருக்குது. அப்படி என்ன பிரச்சனை இருக்குது எனக்கும் கொஞ்சம் சொல்லு.

சொல்றது என்ன பா என்னோட ஸ்பேஸ் ஷிப்ல கூட்டிட்டு போய் காட்டிட்டே வந்துடுறேன்.

ஆமா நீயே என் பெரு விரல் சைசுக்கு தான் இருக்கிற. நீ வந்திருக்கிற ஸ்பேஸ் ஷிப் உள்ள என்ன வச்சு கூட்டிட்டு போகப் போறியா. சும்மா கதை விடாத

வருண் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏலியன் காட் தன்னுடைய கையில் இருந்த டார்ச்சை அடித்து வருணையும் அவனுடைய சைசுக்கு மாற்றியது.

ஏய் என்ன பண்ண நான் எதோ எறும்பு சைசுக்கு மாறிட்டேன். இதை எப்படி நாம் ஸ்கூலுக்கு எல்லாம் போக முடியும். சும்மாவே நான் கட்டையா இருக்கேன்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. இதுல இந்த சைஸ்ல இருந்த நான் எறும்பு நசுக்கி போடுற மாதிரி போட்டுக்குவாங்க.

அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் உன்னை மறுபடியும் பழைய சைசுக்கு கொண்டு வந்துடறேன். வா முதல்ல ஊரை சுத்தி பாக்கலாம். இருவரும் ஸ்பே சிப்பில் எல்லா இடங்களும் சுற்றி பார்த்தார்கள். வினாடிப் பொழுதில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை போய் வந்தார்கள். சரி காட் ஏதோ எங்க பூமியில் பிரச்சனை இருக்குன்னு சொன்னியே அதை மட்டும் காட்டவே இல்ல பத்தியா? என் அப்பாவியாக கேட்டான் வருண்.

அப்படியா அது கீழ பாரு.. என்னப்பா இது இங்க இருந்த காட்டுல கொஞ்சம் இடத்தை காணல.

ஆமா வருண். நம்ம இருக்கக்கூடிய இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் அரிதான பொருள் அப்படினா இந்த மரங்கள் தான். இந்த மரங்களை வளக்கறதுக்கு எங்க கிரகத்தில் இருக்கக்கூடிய விஞ்ஞானிகள் எவ்வளவோ கஷ்டப்படுறாங்க. ஆனா அவங்களால இது செய்ய முடியல. இந்த மரம் நம்ம எல்லாம் சுவாசிக்கிறதுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்கக் கூடியது. மரங்கள் இருந்தது அப்படினாலே இயற்கையா மழை பொழியும் தண்ணீரும் கிடைக்கும்.

ஆனா உங்க பூமியிலே ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மரங்களை வெட்டி வீணாக்கிக்கிட்டு இருக்காங்க. இப்படி காடுகளை அழிக்கிறதுனால நாளைக்கு நீ பெரியவனா வளர்ந்ததுக்கு அப்புறம் ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கும் வருண். ஓ அப்படியெல்லாம் பிரச்சனை வருமா? இது சரி பண்ண என்ன பண்ணலாம்?

உங்களால முடிஞ்ச அளவுக்கு அதிகமான மரங்களை இனிமேல் வளர்க்க ஆரம்பிக்கணும். மரங்களை தேவையில்லாம வெட்றத தடுக்குறதுக்கு எல்லாருக்கும் எடுத்து சொல்லணும். அப்புறம் வீட்டுக்கு வீடு என்ன வாங்குறமோ இல்லையோ குறைஞ்சபட்சம் மரம் செடி கொடிகளை வளர்க்கறதுக்கு ஏற்பாடு பண்ணனும்.

சரிப்பா ஊர சுத்தி காட்டுனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சீக்கிரமா என்னை எங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போ அப்படின்னு சொன்னான் வருண்.

சரிப்பா உன் கூட சுத்துனதுல என் நானும் நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டேன். அப்படின்னு சொன்ன காட் வருணுக்கு பரிசா கையில ஒரு மாமரத்தின் விதையை கொடுத்தது.

அத வாங்கினதும் ஸ்பேசிப் ரொம்ப வேகமா புறப்பட்டது.

டேய் வருண் ஸ்கூலுக்கு டைம் ஆச்சு சீக்கிரமா எழும்பு என அம்மா சொல்வது கேட்டது.

ஓ இது எல்லாமே கனவா என வருண் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கைகளில் ஏலியன் காட் கொடுத்த மாமர விதை இருந்தது.

சரி இன்னைக்கு ஸ்கூல்ல போய் இதே கதைய சொல்லி இருக்கலாம் அப்படின்னு நினைத்த அவன், எல்லா மாணவர்கள் முன்னாடியும் நேற்று நடந்த விஷயங்களை சொன்னான்.

இவன் யாருடா பைத்தியக்காரன் இவனை தேடி மட்டும் ஏலியன் வந்துச்சா, ஊர் உலகத்தை எல்லாம் சுத்தி காட்டிக்கிட்டு போயிடுச்சா. என அவனது கிளாஸ்மிட்ஸ் கிண்டல் செய்ய. சைலன்ஸ் என சொன்ன இங்கிலீஷ் டீச்சர். வருண் நீ சொன்ன கதை உண்மையிலேயே நல்லாதான் இருந்தது. வருண் சொன்ன கதையை நீங்க நம்புறீங்களோ இல்லையோ அவன் சொல்லக்கூடிய பிரச்சனை உண்மைதான். உலகத்திலே மரங்களை வெட்டுவதை நம்ம நிறுத்தினால் தான் சுத்தமான காற்று சுவாசிக்க முடியும். அப்படின்னு பலவித விளக்கங்களை இங்கிலீஷ் டீச்சர் கொடுத்தாங்க. வருண் ஏலியன் கொடுத்த மாமர விதையை பள்ளிக்கூட கேம்பஸ்ல் நட்டு வச்சான். நீங்களும் மரத்தை வளர்ப்பீங்க தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *