விவசாயம் ஒரு தொழில் அல்ல   அது வாழ்க்கையே
  • By Magazine
  • |
– பசுமை சாம்பியன் விருதுபெற்ற அக்ரி.ஒய்.ராஜகுமார் உணவு இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது அத்தகைய உணவு கிடைப்பதற்கு விவசாயிகள் உயிர்நாடியாக செயல்படுகிறார்கள் விவசாயம் இல்லாவிட்டால் மக்கள் பட்டினியால் உயிர் இழக்க வேண்டிய நிலை வரும் ஆனால் அந்த விவசாயிகளை கவுரவிக்கவோ பாராட்டவோ யாரும் முன்வருவதில்லை மட்டுமல்ல இன்றைய தலைமுறையினர் யாரும் விவசாயத்தை விரும்பவில்லை என்பதுடன் விவசாயம் செய்வது இன்று கேலிக்குரிய தொழிலாக மாறியிருக்கும் சூழலில் விவசாயிகளை ஊக்குவித்து கவுரவித்து  விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விதைத்து ஏற்படுத்தி […]
Read More
போதைப் பழக்கத்தால்   மதியிழந்த மனிதர்கள்
  • By Magazine
  • |
C. முருகன் மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்சனை போதைப்பழக்கம் ஆகும். வயது வித்தியாசம் இன்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் வேரூன்றி உள்ளது என்பது கவலைக்குரியது ஆகும். போதைப்பழக்கத்தை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்பழக்கம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்தும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நோய்களும், தற்கொலைகளும் போதை […]
Read More
வெறுப்பின் கொற்றம் வீழ்க
  • By Magazine
  • |
– குமரி எழிலன் வெறுப்பின் கொற்றம் வீழ்த்துவோம் வெற்றுக் குரல்களை நீக்குவோம் இருளின் கொடுமையை மாற்றுவோம் கருணை ஒளியை ஏற்றுவோம்… அன்பே அறமென எழுவோம்… அனைவரும் ஒன்றென முழங்குவோம் அத்தனையும் இனி உலகில் அனைவர்க்கு மென்றே வழங்குவோம் கண்முன் அனைவரும் சமமே.. இதை கருத்திலும் விதைப்போம் தினமே இருப்பது  பொதுவாய்ப் போனா.. இனி அறமே வெல்லும் தானா.. வளமையென்பது இயற்கை வறுமை என்பது செயற்கை இயற்கையைத் தொடர்ந்தால் இன்பம் செயற்கையைத் தொடர்ந்தால் துன்பம் அறஞ்செய விரும்பினாள் அவ்வை […]
Read More
அண்ணலின்  அழுகை அறிந்தார் யார்?
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் அண்ணலார் அமரராகி ஆண்டுகள் எழுபத்தேழும் மண்ணிதில் மறைந்து போச்சு; மகானையே மறந்து மாச்சு; உண்மையே உரைத்தோன் நாட்டில் ஊழலும் பெருகிப் போச்சு; பெண்மையை மதித்தோன் நாட்டில் பெண்மைவன் முறையுமாச்சு; கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடமையாய்க் கொண்டோன் மண்ணில் பண்ணிடும் பாதகங்கள் பலப்பல பெருகியாச்சு; அண்டியோர் தம்மை அன்பாய் ஆதரித்தோனின் மண்ணில் எண்ணிலாக் கலவரங்கள் எனதினம் ஆகியாச்சு; உண்ணுதல் உடுத்தல் தம்மில் உயரிய எளிமை கண்ட கண்ணிய காந்தி மண்ணில் கருநிதி பெருகியாச்சு; புண்ணியன் வாழ்ந்திம் மண்தான் புதுமைகள் […]
Read More
  • By Magazine
  • |
C. சுந்தரி சொக்கலிங்கம் அனைவரின் ஆனந்தம் ஆனந்த தேனூற்று சங்கமத்தின் சங்கீதம் குடும்பத்தின் குதூகலம் திகட்டாத தித்திப்பு மாசில்லா மரகதம் சொக்கவைக்கும் சொர்க்கம் வீணையின் நாதம் மொத்தத்தில் இது ஓர் பேரானந்தம்.
Read More
  • By Magazine
  • |
 ஓஷோ குழப்பத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுபடுவதற்கான வழி ஒன்றுமில்லாத பூமியில் தாவோவுடன் வாழ்வதாகும். எவன் மற்றவர்களை அடக்கி ஆள்கிறானோ அவன் துன்பத்தில் வாழ்கிறான். நீங்கள் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் போது குழப்பத்தில் வாழ்வீர்கள், அதே போல் மற்றவர்கள் உங்கள் மீது அதிகாரம் செலுத்த அனுமதிக்கும் போதும் நீங்கள் துன்பத்தில் வாழ்கின்றீர்கள். ஏனெனில் ஒரு அடிமை பேரானந்தத்தில் இருக்க முடியாது. சீன மதமான தாவோ வேண்டுவது என்னவெனில் யாரையும் வசப்படுத்த வேண்டாம். யாராலும் வசப்பட வேண்டாம்; நீங்கள் ஒருவரையும் […]
Read More
  • By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் தூசுதட்டிய உன்கூந்தல் உதிரும்போது வருந்துவாயோ? உன் கரம்பிடித்தே- வீட்டை வலம் வருவார்! வாய்ச் சண்டையில் உன்னையே “பிஞ்சிடும்”  என்பார்! வீட்டைத் தூய்மை செய்யும் நீயோ இறுதியில் வெளியில் கிடக்கின்றாய்! உன்னைப் படைத்தவனோ- உன்னைக்கண்டு ஒருநாளும் வருந்தியதில்லை! வாய் இருந்தால் கேட்டுவிடு என்னை வாழவிடு என்று!
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் உருவாகிறதோ புதியதாக ஒரு வேறுபட்ட உலகம் லஞ்சம்- ஊழல் நிறைந்தாக..? காண சகிக்கவில்லை எங்கும் பரந்து நிகழும் பாலியல் – வன்முறை கொடுமை! மக்களிடமிருந்து விடைபெற்று காணாமல் போய் கொண்டிருக்கிறது பண்பாடும்- கலாச்சாரமும் எங்கு தேடியும் காண முடியாமல் உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே மனிதநேயமும் – அன்பு தழுவலும் பணமே பிரதானமாக மாறிக் கொண்டிருக்கிறது உறவிலும்- பாசத்திலும் அவசரத்திற்கு உதவுவாரும் ஆபத்தில் காப்பவரும் காணா தேசமாய் மாறுதே கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் முதியோர்களைப் பேணுவதும் குறைந்து – […]
Read More
மாலிப்டினம் சுரங்கத்திட்டம்
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் பேராபத்து ஒன்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க ஒன்றியஅரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அப்பகுதிமக்களைத் தூக்கமிழக்கச் செய்துள்ளது.                 திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 400 சதுரகிலோமீட்டர் (சுமார் 1 லட்சம் ஏக்கர்) பரப்பளவில் மாலிப்டினம் எனும் அரியவகைத் தனிமம் இருப்பதாகவும் அதனை வெட்டி எடுக்க ஒன்றியஅரசு முடிவு செய்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாலிப்டினம் தனிமம் எடுப்பதற்காக, பழநி வட்டத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை […]
Read More
மின்னணுவியலின் கதை
  • By Magazine
  • |
 – காளீஸ்வர் நமது நவீன உலகின் அடித்தளமாக விளங்கும் மின்னணுவியல், ஒரே இரவில் தோன்றிய மாயாஜாலம் அல்ல. இது படிப்படியாக, பல கண்டுபிடிப்பாளர்களின் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உருவான பிரம்மாண்ட அறிவியல் பயணம். எலெக்ட்ரான்கள் பற்றிய புரிதல் ஏற்பட்ட பின்னர்தான் ‘மின்னணுவியல்’ என்ற தனித் துறையே உருவானது.  எலெக்ட்ரானின் பிறப்பு மின்னணுவியலின் தொடக்க புள்ளியானது, ஜே.ஜே. தாம்சன் (J.J.Thomson) என்ற ஆங்கில இயற்பியலாளரின் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில்தான் இருக்கிறது. 1897 ஆம் ஆண்டில், கேத்தோடு கதிர்க் குழாய்கள் (Cathode […]
Read More