இரா.சிவானந்தம்
உருவாகிறதோ புதியதாக
ஒரு வேறுபட்ட உலகம்
லஞ்சம்- ஊழல் நிறைந்தாக..?
காண சகிக்கவில்லை
எங்கும் பரந்து நிகழும்
பாலியல் – வன்முறை கொடுமை!
மக்களிடமிருந்து விடைபெற்று
காணாமல் போய் கொண்டிருக்கிறது
பண்பாடும்- கலாச்சாரமும்
எங்கு தேடியும் காண முடியாமல்
உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே
மனிதநேயமும் – அன்பு தழுவலும்
பணமே பிரதானமாக
மாறிக் கொண்டிருக்கிறது
உறவிலும்- பாசத்திலும்
அவசரத்திற்கு உதவுவாரும்
ஆபத்தில் காப்பவரும்
காணா தேசமாய் மாறுதே
கூட்டுக்குடும்ப வாழ்க்கையும்
முதியோர்களைப் பேணுவதும்
குறைந்து – பெருகிவிட்டன முதியோர் இல்லங்கள்
தொலைக்காட்சியிலும்- கைபேசியிலும்
தொலைகிறது பலரது வாழ்க்கை
திருந்துமா என்பது கேள்விக்குறியே
தட்டிக் கேட்பாரில்லை
வழி நடத்துவாருமில்லை
திசை மாறி போகுது வாழ்க்கை
எவர் சொல்லி
எவர் கேட்பார்
என்னும் நிலை மாறுமோ?
விடிவு வரும்
நலம் திகழும்
என்றே நம்புவோம்!
Leave a Reply