– குமரி எழிலன்
வெறுப்பின் கொற்றம் வீழ்த்துவோம்
வெற்றுக் குரல்களை நீக்குவோம்
இருளின் கொடுமையை
மாற்றுவோம்
கருணை ஒளியை ஏற்றுவோம்…
அன்பே அறமென எழுவோம்…
அனைவரும் ஒன்றென முழங்குவோம்
அத்தனையும் இனி உலகில்
அனைவர்க்கு மென்றே வழங்குவோம்
கண்முன் அனைவரும் சமமே.. இதை
கருத்திலும் விதைப்போம் தினமே
இருப்பது பொதுவாய்ப் போனா.. இனி
அறமே வெல்லும் தானா..
வளமையென்பது இயற்கை
வறுமை என்பது செயற்கை
இயற்கையைத் தொடர்ந்தால் இன்பம்
செயற்கையைத் தொடர்ந்தால் துன்பம்
அறஞ்செய விரும்பினாள் அவ்வை
அதையே தொடர்ந்தார் அய்யன்
அவர்களைத் தொடர்ந்தான் பாரதி
இவர்களே நாமக்கு சாரதி
ஏட்டில் சொன்னது பாதி
பாட்டில் சொன்னது மீதி
நாடினோம் மக்கள்வீதி..
கூடியே சொன்னோம் நீதி
Leave a Reply