ஓஷோ
குழப்பத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுபடுவதற்கான வழி ஒன்றுமில்லாத பூமியில் தாவோவுடன் வாழ்வதாகும்.
எவன் மற்றவர்களை அடக்கி ஆள்கிறானோ அவன் துன்பத்தில் வாழ்கிறான்.
நீங்கள் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் போது குழப்பத்தில் வாழ்வீர்கள், அதே போல் மற்றவர்கள் உங்கள் மீது அதிகாரம் செலுத்த அனுமதிக்கும் போதும் நீங்கள் துன்பத்தில் வாழ்கின்றீர்கள். ஏனெனில் ஒரு அடிமை பேரானந்தத்தில் இருக்க முடியாது.
சீன மதமான தாவோ வேண்டுவது என்னவெனில் யாரையும் வசப்படுத்த வேண்டாம். யாராலும் வசப்பட வேண்டாம்; நீங்கள் ஒருவரையும் உங்களுக்கு இணக்கமாக இருக்க, வசப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம். அதேபோல் நீங்கள் யாரினாலாவது வசத்தப்படுத்தப்படாமல் இருப்பதில் உஷாராக இருங்கள். தன்முனைப்பு இவை இரண்டையும் செய்யக் கூடியது. தன்முனைப்பு இதன் மையமான நிலையில் நிற்க முடியாது. தன்முனைப்பு மற்றவர்களை வசப்படுத்த முயற்சிக்கும் வசப்படுத்தியவுடன் தன்முனைப்பு மற்றவர்களால் வசப்படுத்தப்படும் போது பெருமிதம் கொள்ளும். தலைவர்கள் மிகப் பெருமிதம் கொள்ளுவார்கள், ஏனெனில் இவ்வளவு அடிமைகளை அதிகாரம் செலுத்துவதால் அடிமைகளும் பெருமிதம் கொள்வார்கள். அவர்கள் அதிகாரம் செய்யப்படுவதால் உலகில் இரண்டு வகையான மனம் உள்ளது. மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய மனம் – ஆண் மனம், மற்றவர் அதிகாரம் செய்வதை விரும்பும் மனம்-பெண் மனம். பெண் ஆண் என்று சொல்லுவதால் நான் பெண்டிரையோ அல்லது ஆடவரையோ பாகுபடுத்திய அர்த்தத்தில் கூறவில்லை. ஆண் மனம் கொண்ட பெண்களும், பெண் மனம் கொண்ட ஆடவர்களும் இருக்கிறார்கள். எப்பொழுதுமே ஆடவர்கள் ஆண் மனதுடனும், பெண்டிர் பெண் மனத்துடனும் இருப்பதில்லை. இப்படி இரண்டு விதமான மனங்கள் உள்ளன. அதிகாரம் செய்ய விரும்பும் மனம் ஒன்று, அதிகாரம் செய்யப்படுவதை விரும்பும் மனம் மற்றொன்று. இந்த இரண்டு வழிகளிலும் தன் முனைப்பு நிறைவடைகிறது. ஏனெனில் நீங்கள் அதிகாரம் செய்தாலும் அல்லது அதிகாரம் செய்யப்பட்டாலும் நீங்கள் தான் முக்கியம். மற்றவர்கள் உங்களை அதிகாரம் செய்தால் அப்போதும் நீங்கள் தான் முக்கியமானவர். ஏனெனில் மற்றவரின் அதிகாரம் உங்களைச் சார்ந்து இருக்கிறது. நீங்கள் இல்லாவிடின் அவர் ஒன்றுமே இல்லை. நீங்கள் இல்லாமல் அவர் யாரை அதிகாரம் செய்ய முடியும்? நீங்கள் இல்லாவிடின் அவர் ஒன்றும் இல்லாதவராகி விடுவார்.
இவ்விரண்டின் எல்லைகளிலே தன்முனைப்பு திருப்தியடைகிறது. இவை இரண்டிற்கும் இடையிலான நிலையில் தன்முனைப்பு இறந்து விடுகிறது. யாரையும் அதிகாரம் செய்யாதீர்கள். யாரும் உங்களை அதிகாரம் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சற்று நினைத்துப் பாருங்கள்; உங்களுக்கு என்ன நிகழும் என்று நீங்கள் எந்த வகையிலும் முக்கியமானவராக இருக்க மாட்டீர்கள். குறிப்பிடப்படும் படியானவராக இருக்க மாட்டீர்கள், ஆள்பவனாகவும் இல்லாமல் அடிமையாகவும் இல்லாமல், தலைவர்கள், தொண்டர்கள் இல்லாமல் வாழ முடியாது; தொண்டர்கள் தலைவர் இல்லாமல் வாழ முடியாது. அவர்கள் ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறார்கள், ஒரு ஆணுக்கு ஒரு பெண் தேவைப்படுவதைப் போல் அவருடைய நிறைவுக்கு மற்றவர் தேவைப்படுகிறார்.
இவர்கள் இருவராகவும் இருக்காதீர்கள். பிறகு நீங்கள் யார்? திடீரென்று நீங்கள் மறைந்து போய் விடுகின்றீர்கள். ஏனெனில் நீங்கள் மிகவும் முக்கியமானவராக குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவராக இல்லை. ஒருவரும் உங்களை நம்பி இருக்கவில்லை. நீங்கள் யாருக்கும் தேவைப்படவில்லை.
யாருக்காவது தேவைப்பட வேண்டுமென்று ஒரு பெரிய தேவை உள்ளது. ஞாபகத்தில் கொள்ளுங்கள், நீங்கள் யாருக்கேனும் தேவைப்படுவதாக உணர்ந்தால், நீங்கள் மிகவும் பெருமையுடன் இருப்பீர்கள். சில சமயங்களில் அது உங்களுக்கு சற்று துன்பத்தைத் தருவதாக இருந்தாலும், நீங்கள் மற்றவருக்கு தேவைப்படுவதை நேசிப்பீர்கள்.
நீங்கள் யாருக்கும் தேவைப்படவில்லை என்றால் நீங்கள் யார்? நீங்கள் யாருக்கேனும் தேவைப்படும் படியான தேவையை உருவாக்குகின்றீர்கள். அடிமைகள் கூட தேவைப்படுகிறார்கள். நீங்கள் இருந்தாலும், இல்லாதது போல் இருக்கின்றீர்கள். நீங்கள் மிக முக்கியமானவராக, குறிப்பிடக் கூடியவராக இல்லாதவரை தன்முனைப்பு அங்கு இருக்காது. இதனால் தான் எந்த வழியிலாவது முக்கியமானவராக, குறிப்பிடக் கூடியவராக ஆக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றீர்கள். நீங்கள் எப்பொழுது எல்லாம் மற்றவர்களுக்குத் தேவைப்படுவதாக உணர்கிறீர்களோ, அப்பொழுது உங்களைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொள்ளுவீர்கள். ஆனால் இதுதான் உங்கள் துன்பம், உங்கள் குழப்பம் இதுதான் உங்கள் நரகத்தின் அடிப்படை.
Leave a Reply