“துடைப்பம்”

  • By Magazine
  • |

கா. திலிபன், தமிழாசிரியர்

தூசுதட்டிய உன்கூந்தல்

உதிரும்போது வருந்துவாயோ?

உன் கரம்பிடித்தே-

வீட்டை வலம் வருவார்!

வாய்ச் சண்டையில் உன்னையே “பிஞ்சிடும்”  என்பார்!

வீட்டைத் தூய்மை செய்யும் நீயோ

இறுதியில் வெளியில் கிடக்கின்றாய்!

உன்னைப் படைத்தவனோ-

உன்னைக்கண்டு ஒருநாளும் வருந்தியதில்லை!

வாய் இருந்தால் கேட்டுவிடு

என்னை வாழவிடு என்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *