சீனிவாசன்
  • By Magazine
  • |
– பைசல் நான் ஒரு தேநீர் கடையில் தேனீர் குடிக்கும் போது ஒரு முதிர்ந்த கண்கள் என்னை கூர்ந்து நோக்கியது. என்ன காரணம் என்பது தெரியவில்லை திரும்பவும் கூர்ந்து நோக்கினார். நான் கண்களின் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியதாயிருந்தது. அப்படியான கண்களுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் சீனிவாசன் சமூகத்தை உற்று நோக்கி விமர்சிக்கும் பகடி செய்யும் கலையறிந்தவர் பல வேளைகளில் அவரையே அவர் பகடி செய்து கொள்வார். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு கலையை கற்றவர் அந்த […]
Read More
புத்தாண்டின் நம்பிக்கை
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஒவ்வொரு புத்தாண்டும் வருகையிலும் மனிதர்கள் இந்த ஆண்டு நாம் பெற்ற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து அடுத்த ஆண்டில் நல்ல விஷயங்கள் நடக்காதா? என்கின்ற எதிர்பார்ப்புகளை சுமந்து புத்தாண்டுகளை எதிர்கொள்கிறார்கள். மனித மனம் அன்றாடங்களில் உள்ள சிக்கல்களின் வழியாக பெற்ற அனுபவங்களின் மூலம் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைத் தவிற வேறு என்ன வைக்க இயலும் என்கின்ற அடிப்படையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.      மனிதர்களுக்கு ஒன்று முடிந்து இன்னொன்று துவங்க வேண்டும் என்கின்ற வாழ்வின் […]
Read More
டீக்கடை
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காலை மணி ஒன்பது எப் எம்மில் வானொலி திரைப்பட பாடல்கள் நேயர் விருப்பம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த டீக்கடையின் வெளியில் உள்ள பெஞ்சில் ஒருவர் தினத்தந்தி நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்,”அண்ணே ஒரு டீ போடுங்க” என்றபடி. நான் எத்தனை தடவை சார் சொல்றேன். நான் உங்களை விட சின்னவன், “தம்பின்னு சொல்லுங்க சார்” என்றார் டீக்கடை முதலாளி ராஜா. புன்சிரிப்போடு நானும் சரி தம்பின்னு சொல்லிக்கிட்டு கடையில் கூட்டமில்லாததால் குடும்பத்தைப் பற்றி கேட்டேன். […]
Read More
? ? ? அன்றாட  வாழ்வின் கேள்விகள்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் 1. கார் மற்றும் பைக் இஞ்சின்களை சிசி (CC) எனும் அளவீட்டில் குறிப்பிடுகிறார்களே அப்படி என்றால் என்ன? CC என்பது Cubic Centimeter (கன சென்டிமீட்டர்) என்பதன் சுருக்கம். இது என்ஜினின் சிலிண்டருக்குள் பிஸ்டன் (Piston) நகரும்போது ஏற்படும் இடத்தின் மொத்த கன அளவைக் குறிக்கிறது. அதிக சிசி இருந்தால், அதிக எரிபொருள் எரிக்கப்பட்டு அதிக ஆற்றல் (Power) உருவாகும். அதனால்தான் இருசக்கர வாகனங்களுக்கு குறைந்த சிசி அளவிலான என்ஜின் வழங்கபடுகிறது 2. மின்னல் […]
Read More
“பல்பு திருடன்”
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மாலை மயங்கும் நேரம்…. கடையின் வாசல் விளக்கை எரியவிட பொத்தானைஅழுத்தினார் மெடிக்கல் நம்பி… விளக்கு வெளிச்சமில்லை…. “மின்வெட்டுப் போலிருக்கிறது…. பூசைப்பட விளக்கு எரிகிறதே…அது மின்சேமிப்பானிலுள்ள (வீஸீஸ்மீக்ஷீtஷீக்ஷீ) மின்சார மோ…. இல்லையே… மின்சேமிப்பானுடன் பூசைப்பட விளக்குக்குத்  தொடர்பில்லையே ….” தனக்குள் பேசிக்கொண்டே வாசலில்  மேலே பார்த்தார்…  பல்பைக் காணவில்லை…  எதிர்த்த பலசரக்குக் கடை,  தங்கண்ணன், “தம்பியோ என்னத்தத் தேடுக…. கரண்ட காணல்லியா…?” என கிண்டலுடன் விசாரித்தார்.  “இல்லண்ணே கரண்டுல்லாம் இருக்கு பல்பத்தான்…காணல்ல…”என்றார் மெடிக்கல்க்காரர்.  “உங்க […]
Read More
நான்_ நீ_ நாம்   கொச்சி ஹோர்தூஸ்
  • By Magazine
  • |
நவம்பர்  27_30 ,2025 – கிருஷ்ணகோபால் வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில்தான் கேரளாவுக்கு சுற்றுலாச் செல்வோம். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காலகட்டத்தில் கொச்சியில் நடக்கும்  ஹோர்த்தூஸ் இலக்கிய விழாவுக்கு நண்பர்கள் சென்றோம்.   சென்னை குருவாயூர் இரயிலில் நண்பர்கள் சிலர் திருநெல்வேலியிலிருந்தும் ,சிலர் இரணியலிலிருந்தும் ஏறினர். நான் நாகர்கோவில் டவுனிலிலிருந்து ஏறினேன்.இரயில் ஏறும் போது இரவு பதினொரு மணி.  எப்போதுமில்லாத தோணலாய் இரயில் ஒரு  நடமாடும் கூட்டுக்குடும்பம் போல் தோன்றியது.   இடையிடையே ஒரு […]
Read More
காந்திவழி நடப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சத்திய சோதனையில் சாத்தியம் வெற்றி என்றே நித்திய வாழ்வில் காட்டி நீண்டநாள் வாழ்ந்தார் காந்தி புத்தியை வாய்மை ஆள                 புலன்களை அகிம்சை ஆள கத்தியின் குருதியின்றிக்                 களத்தினில் வென்றார் காந்தி எத்தனை இடர்வந்தாலும்                 எதிர்ப்பவர் நாணும் வண்ணம் சத்தமாய் பேசிடாமல்                 சாந்தமாய் வென்றார் காந்தி நித்தமும் ராட்டை சுற்றி                 நெய்தநல் கதராடைதான் ஒத்தது நம்நாட்டுக்கென்று                 உரைத்தயல் உடை நீக்கிட்டார். இத்தரை போற்றும் வண்ணம்                 எளிமையின் […]
Read More
புதிய கண்டுபிடிப்பு
  • By Magazine
  • |
பூமியின் அரிதான தனிமம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி – முனைவர் மோகனா, பழனி ஓர் அரிதான, குறுகிய காலமே இருக்கக்கூடிய தனிமம் ஒன்று மருத்துவத்தின் மிகத் துல்லியமான புற்றுநோய் கொல்லியாக மாறக்கூடும் என அறிஞர்கள் கணித்துள்ளனர். இதற்கான ஆய்வினை டெக்சாஸ் A & M பல்கலைக்கழக சைக்ளோட்ரான் நிறுவனம் செய்துள்ளது. இத்தகவல் 2025, நவம்பர் 11- ஆம் நாள் Science daily-ல் வெளியிடப்பட்டுள்ளது.   அஸ்டட்டின்-211  புற்றுநோய் எதிர்ப்பு   டெக்சாஸ் A & M பல்கலைக்கழக […]
Read More
ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து தற்காப்பு கலை படித்தேன்முருகன் ஆசான் பேட்டி
  • By Magazine
  • |
தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்து தற்காப்பு கலை கற்றுக் கொண்டேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே உள்ள முருகன் ஆசான் பூவங்கா பரம்பு என்ற பகுதியை சேர்ந்த சித்த வர்ம வைத்தியரும், களரி கராத்தே பயிற்சியாளருமான திரு. முருகன் ஆசான் அவர்களை புதிய தென்றலுக்காக சந்தித்தோம். நீங்கள் யாரிடமிருந்து களரி தற்காப்பு கலை கற்றுக் கொண்டீர்கள் ? நான் பாரம்பரியமாக களரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ மக்கள் பலர் ஒளியைப் பற்றி சிந்திக்கும் போது இருட்டைப் பற்றிக் கவலைப்படத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையை பற்றி நினைக்கும் போது, சாவை எதிர்த்து சண்டைப் போடத் தொடங்குகிறார்கள். அதனால் தான் கடவுள் இருள், ஒளி இரண்டும் சேர்ந்தவர் தான் என்று சொல்லும் ஐதிகம் உலகில் இன்று வரை இல்லை. ஒரு ஐதிகம் கடவுள் ஒளியானவர், இருள் அற்றவர் என்று சொல்லுகிறது. கடவுள் ஒளி மயமானவர் என்று நம்பும் மக்கள் அவர் இருளே அற்றவர் என்று நினைப்பார்கள். […]
Read More