– குமரி எழிலன்
மாலை மயங்கும் நேரம்….
கடையின் வாசல் விளக்கை எரியவிட பொத்தானைஅழுத்தினார் மெடிக்கல் நம்பி…
விளக்கு வெளிச்சமில்லை….
“மின்வெட்டுப் போலிருக்கிறது….
பூசைப்பட விளக்கு எரிகிறதே…அது மின்சேமிப்பானிலுள்ள (வீஸீஸ்மீக்ஷீtஷீக்ஷீ) மின்சார மோ….
இல்லையே… மின்சேமிப்பானுடன் பூசைப்பட விளக்குக்குத் தொடர்பில்லையே ….” தனக்குள் பேசிக்கொண்டே வாசலில் மேலே பார்த்தார்… பல்பைக் காணவில்லை…
எதிர்த்த பலசரக்குக் கடை, தங்கண்ணன், “தம்பியோ என்னத்தத் தேடுக…. கரண்ட காணல்லியா…?” என கிண்டலுடன் விசாரித்தார்.
“இல்லண்ணே கரண்டுல்லாம் இருக்கு பல்பத்தான்…காணல்ல…”என்றார் மெடிக்கல்க்காரர்.
“உங்க கடையிலையுமா?”….என்றார் தங்கண்ணன்.
ஆம் அவர் பேச்சில் அவரது கடைவாசல் பல்பையும் காணவில்லை என்பது தொக்கிநின்றது.
அந்த ஒரு பர்லாங்குச் சாலைமுழுக்க இரு பக்கத்துக் கடைகளில் உள்ள அத்தனைக் கடைகளிலுமிருந்த சிறிய பெரிய வாசல்பல்புகள் எதுவுமில்லை…என்பது சிறிது நேரத்தில் வெளிச்சத்துக்கு வந்தது….
நல்ல வேளை, காவல் நிலையம் என்று மதில் சுவரில் பதியப்பட்டிருந்ததால் காவல் நிலைய பல்பு மட்டும் தப்பித்தது….
காவலர்கள் வந்தார்கள் காட்சி காமிராக்கள் மூலம் கண்டறிந்த உண்மை கசிந்தது. இரவு 2.30 மணிக்கு ஒரு டெம்போவில் வந்து, டெம்போவின் மீது நின்று அத்தனை பல்புகளையும் கழற்றியிருக்கிறான் ஒரு கறுப்பு பனியன்காரன்…வண்டி எண் சரியாகத் தெரியவில்லை…
“விசித்திர கள்ளனா இருக்கானே…சில கள்ளமாரு அடுக்களைல எறங்கி கஞ்சியக் களவாண்டு தின்னுக்கிட்டு,சட்டிய கழுவி கமுத்தி வச்சிடுவான்களாம்”என்று பிரசங்கித்தார் தங்கு.
“அவன் பசித் திருடன்.. .இவன் பல்புத்திருடன் போலிருக்கு..”கிண்டினார் மெடிக்கல்…
“இதக் களவாண்டுட்டுப் போயி என்ன செய்வான்”…மெடிக்கல்கடைக்கரர் அலுத்துக்கொண்டார்…..
Leave a Reply