சீனிவாசன்

சீனிவாசன்

  • By Magazine
  • |

– பைசல்

நான் ஒரு தேநீர் கடையில் தேனீர் குடிக்கும் போது ஒரு முதிர்ந்த கண்கள் என்னை கூர்ந்து நோக்கியது. என்ன காரணம் என்பது தெரியவில்லை திரும்பவும் கூர்ந்து நோக்கினார். நான் கண்களின் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியதாயிருந்தது. அப்படியான கண்களுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் சீனிவாசன் சமூகத்தை உற்று நோக்கி விமர்சிக்கும் பகடி செய்யும் கலையறிந்தவர் பல வேளைகளில் அவரையே அவர் பகடி செய்து கொள்வார். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு கலையை கற்றவர் அந்த கல்லூரியில் தான் சிவாஜி ராவும் படித்தார். அந்த கல்லூரி ஆறு வருடங்கள் தான் இயங்கியது.  அதன் பின் தான் சீனிவாசனின் திரைப்படம் சார்ந்த பயணம் தொடங்கியது. அவர் பிரியதர்ஷனை சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்கும் போது மறுநாள் படப்பிடிப்பு திரைக்கதை மட்டும் இல்லை என்பதை அறிந்து அதில் அவர் சேர்ந்து திரைக்கதை எழுதுகிறார் . அதன் பின் இயக்குனர் அந்த சத்தியன் அந்திக்காடு அவர்களுடன் பல படங்களில் சேர்ந்து திரைக்கதை எழுதுகிறார். அதே போல் இரண்டு படங்கள் இவர் இயக்குகிறார். எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து செல்லும் மனம் அவரிடம் இருந்தது. மரணத்தைக் கூட எளிதாக புரிந்துக் கொண்டவர். அவருடைய திருமண வாழ்வை குறித்து சொல்லும்போது மனைவியை திருமணம் செய்ய அவரிடம் பணமில்லை, அந்த நேரம் நடிகர் இன்னசெண்ட் தன் மனைவி ஆலீஸின் வளையலை அடகு கடையில் வைத்து  400 ரூபாய் கொடுக்கிறார். சீனிவாசனின் அம்மா தாலி கட்டியே ஆகணும் என்று நிர்பந்தம் பிடிக்க  மம்மூட்டியிடம்சென்று  2000 ரூபாய் வாங்கி தனது கல்யாணத்தை முடிக்கிறார் .அதை ஒரு மத நல்லிணக்க தன்மையாக பல மேடைகளில் சொல்கிறார். ஒரு கிறித்தவர் கொடுத்த 400 ரூபாயிம், ஒரு முஸ்லிம் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயும்தான் தன் வாழ்வின் தொடக்கப் புள்ளியை துவங்கி வைத்தது என்று. அவருக்கு சாதி மேலும் கடுமையான விமர்சனம் இருந்தது. விவேகானந்தர் சொன்ன அந்த பிராந்தாலயம் என்ற சொல்லாடல் ஓடு ஒப்பிட்டு விமர்சிக்கிறார்.அதேபோல் கடவுள் நம்பிக்கை அற்றவராகவும் அவருடைய கார் ஓட்டுனருக்கு ஒரு அழகிய வீடை கட்டிக் கொடுத்தவராகவும் அறியப்படுகிறார். நடிகர் என்ற நிலையில் திரைக்கதை ஆசிரியர் என்ற நிலையிலும் தன் திறனை திரைப்படங்களில் நிரூபித்தவர் .                 ஆனால் உயரங்களை அடைந்த பிறகும் நல்ல மனிதனாக இருப்பது சீனிவாசனின் சிறப்பு பார்த்திபனின் வரவு இன்னும் சீனிவாசனின் வாழ்வில் எண்ணங்களை நமக்கு விசாலப்படுத்தியது. தமிழர்கள் குறித்த சீனிவாசனின் நல்ல எண்ணங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது . அவருடைய மகன்களை முழுமையாக விமர்சித்தார்.ஒருமுறை விவசாயிகளுக்கு நடவு விதைகள் கொடுத்துவிட்டு, இதை தந்ததற்காக நாள் உங்களிடம் எந்த பலனும் எதிர்பார்த்து வரமாட்டேன் என்று இயல்பாக சொல்லிவிட்டார். அவருடைய நகைச்சுவை கதாபாத்திரங்கள் என்றும் நிலை நிற்கக்கூடியதாக தன்மை கொண்டது . எதையும் அந்த இடத்தில் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *