பைசல் கவிதைகள்

பைசல் கவிதைகள்

  • By Magazine
  • |

வாப்பாவின் பயம்

அதிகரித்தது..

கண்ணாடியின் முன்

தன்னை புதுப்பிக்க

முயன்றார்

குளிக்கும் போது

 பயத்தை கழுவக்கழுவ அழுக்காக

படிய

 ,சிலநாட்களில் அழுக்கை

உருட்டி பந்தாக

வீடு முழுவதம்

நிறைத்திருப்பார்

அதில் திரியைச்

சொருகி

எரிய வைப்பேன்

இரவில் பாவக்

கவிதைகளைப்

பொழிவார்.

வெம்மை

நிறைந்த

அவரது புல்வெளிக்குள்

 என்னால்

நடக்கமுடியவில்லை

வாஞ்சையோடு

அவரை அணைக்க

ஆசைப்படுகிறேன்

 என்றோ அவர் காலில்

ஒணங்கிப் (காய்ந்து)போன நாய்கடித் தடத்தை

நான் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *