தலைஞாயிறு
  • By Magazine
  • |
அன்பாதவன் காலையில் எழும்போதே ‘ஜில்’லென்றிருந்தது. இரவு நல்லமழை பெய்து இருந்தது. தலைஞாயிறு கிராமத்தில் இதுதான் பிரச்சனை. எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லாமல் கொள்ளாமல் சூப்பர் ஸ்டார் மாதிரி எப்போது வேண்டுமானாலும் பெய்து தீர்த்துவிடும் மழை…. அதனால் தானோ… ‘தமிழ்நாட்டின் சிரபுஞ்சி’….. பேரு பெத்த பேரு.                 தலைஞாயிறு என்றவுடன் நீங்கள் மாயவரம் அருகிலுள்ள தலைஞாயிறு என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் இருப்பது திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு அஞ்சல்நிலைய முழுப்பெயர்தலை ஞாயிறு அக்ரஹாரம்.                 ரவியும் எழுந்துவிட்டான். […]
Read More
உயிர் நதியின் ஓசை
  • By Magazine
  • |
பொன்.குமார் எழுத்தாளர் குமரி ஆதவன் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையாளராகவும் இயங்கி வருகிறார். குமரி ஆதவன் பல்வேறு சூழல்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிர் நதியின் ஓசை என்னும் கட்டுரைத் தொகுப்பாக்கித் தந்துள்ளார். தலைப்பு ஒரு கவிதைத் தொகுப்புக்கான தலைப்பு போல் உள்ளது.  இயற்கை மனிதனுக்கு தந்திருக்கிற மிகப்பெரிய கொடை நீராதாரம். நீர் ஆதாரங்கள் அதிகமாக அழிக்கப்பட்ட காலம் இந்த நூற்றாண்டுதான். ஏராளம் நதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய் பூமி […]
Read More
மாடல்ல மற்றை யவை
  • By Magazine
  • |
 தலைவாசல் திருவள்ளுவர் உலகப் பொதுமறை  எழுதிய ஒப்புமை மிக்கப் புலவர். திருக்குறள் வெள்ளித்தட்டில் வைத்த தங்க ஆப்பிள்… என்கிறார் மேலைநாட்டறிஞர் ஒருவர். வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுஆதி? ஒருகுலத்துக்கொருநீதி… என்ற  மனோன்மணீயம் சுந்தரனார், மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் (குறள்972)..என்ற குறள் போன்றவற்றை கற்கை நன்றே கற்கை நன்றே                        பிச்சைப்புகினும் கற்கை நன்றே… என்கிறார் அவ்வை. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக […]
Read More
வெள்ளையர் கைப்பற்றிய நாட்டைப் போராடி மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார்
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் இந்திய நாட்டு விடுதலைப்போரில் வெள்ளையரை எதிர்த்து நின்று போரிட்டு, வெற்றி வாகை சூடி, இழந்த நாட்டை வெள்ளையரிடமிருந்து கைபற்றிய ஒரே வீரமங்கை வேலுநாச்சியார். இராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதிக்கும், முத்தம்மாள் நாச்சியாருக்கும் 1730- ஆம் ஆண்டு மகளாக பிறந்த வேலுநாச்சியார். பயமே தெரியாதவர். வீரம் நிறைந்தவர். கணவனைக் கொல்ல வந்த புலியுடன் போராடி அதனைக் கொன்ற வீரமங்கை. வீரத்தோடு விவேகமும் நிறைந்த பேரழகி. வேலுநாச்சியார் தமிழ், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், […]
Read More
மழையின் பெருமை!
  • By Magazine
  • |
கருமேகம் சூழ்கையிலே கழனிமகன் உள்ளம்      கதிரோனைக் கண்டலரும் கமலம்போல் துள்ளும் ; தருக்களுடன் தரைவாழும் இன்னுயிர்கள் யாவும்      தமை மறந்த மகிழ்வாலே தாமாகக் கூவும் ; ஒருதுளிதான் விசும்பின் நீர் வீழ்ந்திட்ட போதில்      உலர்ந்திட்ட பாறையிலும் உயரும்புல் காடு ; நெருப்பெனவே வெய்யோனால் வெந்திட்ட மண்ணும்      நிமிடத்துள் தான் குளிர்ந்து சுகமுண்டு பண்ணும்! அருமகிழ்தாய் மன்னுயிரை வாழ்விக்கும் மாரி      அகத்துனவும் அரும்தாக நீருமென ஆகி கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட வாழ்வைக் […]
Read More
தேவை
  • By Magazine
  • |
செந்நிற கதிர்கள் பரவ புலரத் தொடங்கியது காலை மணற்பரப்பில் நிரம்பிய காலடித் தடங்களுடன் சிதறி கிடக்கின்றன தீர்ந்துபோன மதுபோத்தல்கள் படகுகள் அருகில் வலையில் சிக்கிய மீன்கள் ஒவ்வொன்றாய் எடுத்த பரதவர்கள் விரிக்கப்பட்ட படுத்தாக்களில் வீசி கொண்டிருக்கின்றனர் நெகிழிப்பைகளில் ஆளுக்கொரு கூறுகளாய் அள்ளி நிரப்பினர் விலை முடிக்கப்பட்ட மீனின் வலியை துள்ளிக்கொண்டிருந்த மீனைப்பார்த்த நிகரன் “உசுரோடருக்குப்பா! இத நம்ம வளக்குலாம்பா? என்றதும் உறைந்திருந்த அம்மீனின் கண்களில் விழுந்தது எங்கிருந்தோ பறந்து வந்த இதய வடிவிலான இலை. அலையின் சாரலோடு […]
Read More
குடல் நோய்களுக்கு சிறந்த “புடல்”
  • By Magazine
  • |
இது ஒரு வெள்ளரி குடும்பத்தை சார்ந்த கொடிவகை. காய்கள் பச்சை நிறத்துடன் வெண்ணிற மேல்படிவத்தைக் கொண்டு நீண்டு நுனியில் வளைந்து தொங்கும். பார்ப்பதற்கு பாம்பு போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இதனை Snake gourd என்பர். புடல் வகைகளில் கொத்துபுடல், நாய்புடல், பன்றிபுடல், பேய்புடல் என பல வகைகளுண்டு. இவைகளில் கொத்துபுடல், நாய்புடல் இவ்விரண்டும் குத்து செடியாக வளரும். பன்றிபுடல் செடியாக இருந்து அதன்காய் நீளம் குறுகியதாக இருக்கும். பேய்புடல் மிகவும் கசப்புடையது. இதனை உணவாக உண்பதில்லை. உணவாக […]
Read More
டங்ஸ்டன் சுரங்கமும் தமிழின அழிப்புகளும்
  • By Magazine
  • |
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டிப் பகுதியில் டங்ஸ்டன் என்ற கனிமத்தை எடுக்க 07.11.2024 அன்று ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலப் பகுதிக்குள்ளாக  அரிட்டாப்பட்டி என்ற ஊரை உள்ளடக்கிய ‘மாநிலத்தின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம்” அமைந்துள்ளதால், வேதாந்தா என்ற தனியாருக்கு ஏலம் விட்ட ஒன்றிய அரசுக்கெதிராக உள்ளுர் மக்களின், சுற்றுச்சூழல் அமைப்புகளின் பலத்த எதிர்ப்பு வீரியம் கொண்டு வருகிறது. சுரங்கம் தோண்டஏலம் விடப்பட்ட இடம் தமிழ்நாடு அரசு 2002 -ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின் கீழ், […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  283-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு. கமலகண்ணன், மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.01.2025 மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.      கூட்டத்தில் மரு.கமலக்கண்ணன் மதிமயக்கி மூலிகை சேர்ந்தாடும் பாவை மூலிகைகளை காண்பித்து மருத்துவ பயன்களை கூறினார். மேலும் நீரழிவு புண், எல்லாவித புண்கள் குணமாகுவதற்கான களிம்பு செய்முறையை கூறினார். மேலும் இருமல், சளி, ஆஸ்துமாவிற்கு மருந்து செய்முறையை கூறினார். […]
Read More
ஆதிக்கம்
  • By Magazine
  • |
கா கீ கூ கட்சியின் முதல் மாநில மாநாடு… அழைக்கிறார் காவலர் கோபால சமுத்திரம் அப்போது தான் வாங்கி வந்த சுவரொட்டியை தரையில் விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சிங்கராயன். சுவரொட்டியின் மேல் பகுதியில் வரிசையாய் சாதிக்காக பாடுபட்டவர்களின் புகைப்படங்கள்… கீழே இடப்பக்கம் பெரிதாய் சிரித்தபடி கோபால சமுத்திரம் படம்… வலப்பக்கம் கொஞ்சம் சிறியதாய் சிங்கராயனின் படம்.. கீழ் வரிசையில் சிறிது சிறிதாக நிறைய புகைப்படங்கள்… கைபேசியை எடுத்து அச்சக உரிமையாளரை அழைத்தான். “அண்ணே… சூப்பரா இருக்குண்ணே… […]
Read More