சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA-வின் 291-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், திரு.கே.செல்வநாதன் ஆசான், மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 06.09.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் சர்க்கரை நோய், உடல் மெலிவு, மூலநோய் இவற்றுக்கு தேற்றான்கொட்டை லேகியம் செய்முறையை தெளிவாகக் கூறினா£.

மரு.ஷேக் முகமது வாதவலிகள், மூட்டு வீக்கம் இவற்றுக்கு தைலம் செய்முறையையும் உடல் பருமன், உயர் கொழுப்பு, வாயுப்பிடிப்பு இவற்றை குணப்படுத்தும் எளிய சூரணம் செய்முறையையும் கூறினார்.

திரு.கே.செல்வநாதன் ஆசான் விக்கல், வாந்தி, பித்தம் இவற்றுக்கு அதிமதுர சூரணம் செய்முறையை கூறினார்.

திரு.அருள்செல்வன் அவர்கள் வாய்வு, மலச்சிக்கல், குடல் கிருமி இவற்றுக்கு சுகபேதி லேகியம் செய்முறையை கூறினார்.

திரு.ஜெபமணி ஆசான் ஒருதலைக்குத்து, பீனிசம், சிரநோய்கள், தலைவலி, நாசி நீர்வடிதல் இவற்றுக்கு சிரரோக தைலம் செய்முறையை கூறினார்.

மரு.கமலக்கண்ணன் நரம்புத்தளர்ச்சி, பெண்மலடு, உடல் ஆரோக்கியத்துக்கான மாத்திரை செய்முறையையும், மூச்சு வாங்குதல், கருப்பை தசைநார் கட்டி, விரைவாதம், புற்றுநோய் கட்டிகளுக்கு கௌமதி சூரணம் செய்முறையை கூறினார்.

திரு.பாலதிருமால் பித்தநோய்கள், தூக்கமின்மை, கண்ணில் நீர்வடிதல், வாய்நீர் ஊறல், இரத்த அழுத்தம், புளித்த ஏப்பம், அஜீரணம், குடல் எரிவு, நெஞ்செரிச்சல், தொண்டைபுண், தைராய்டு இவற்றுக்கு மல்லி சூரணம் செய்முறையை கூறினார்.

திரு.சுப்பிரமணியன் வர்மங்கள் தீர சூரணம் மற்றும் குழந்தைகளுக்கு உடல் பலம் பெற எளிய மருந்தினையும் கூறினார்.

திரு.ஜெகஜீவன் ஆசான் முதுகுத்தண்டு வலி, வெரிக்கோஸ் வெயின் இவற்றை குணப்படுத்தும் தைலம் செய்முறையை கூறினார்.

மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் Mylopathy  குறித்து விளக்கி பேசியதோடு, அதற்கான வர்மப் புள்ளிகளையும், முதுகுவலி, கழுத்துவலிக்கான வர்மப் புள்ளிகளையும் தெளிவாகக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *