• By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “கைநிறையச் சம்பளம் வருது.. ஆனா நிம்மதி?” – 24 வயது இளம்பெண் ஒருவரின் இந்தக் கதறல்,  சமூக ஊடகங்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.  இக்குரல் நடுத்தர மக்களின் கதவுகளையும் தட்டியிருக்கிறது. ஏசி அறைகள், வார இறுதி விடுமுறைகள், பளபளக்கும் அடையாள அட்டைகள் என வெளியிலிருந்து பார்க்க மினுக்கும் கார்ப்பரேட் வாழ்க்கை, உள்ளே ஒரு தலைமுறையின் ஆன்மாவையே சிதைத்துக் கொண்டிருக்கும் அச்சம் இப்போது மேலெழுந்து நிற்கிறது. வாழ்வின் நோக்கமும் வெற்றி எனும் சொல்லின் பொருளும் […]
Read More
  • By Magazine
  • |
மானுடம் கண்ட அறிவியல் முன்னேற்றங்களும், தொழில்நுட்பப் பாய்ச்சல்களும் நம்மை விண்வெளியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னொரு புறம் நாம் இன்னும் கற்காலத்து வன்முறை மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்பதையே தற்போதைய போர்களும்,  மோதல்களும் பறைசாற்றுகின்றன. இரக்கம் அற்ற இந்தபோர்களைக் கண்ணுறும்போது நாம் நாம் உரக்கச் சொல்ல வேண்டிய ஒற்றைச் சொல்: “யுத்தம் வேண்டாம்!” யுத்தம் என்பது வெறும் நாடுகளுக்கு இடையிலான மோதல் அல்ல; அது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கனவுகளின் மீது ஊற்றப்படும் ரத்தம். பீரங்கி […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கைமுட்டு வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான விசபந்த வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைமுட்டு வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் கைமுட்டின் வெளிப்புறக்குழியில் அமைந்துள்ளது. கைமுட்டி வர்மம், புறமூட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “குணமான கைமுட்டுக் குழியிலப்பா முட்டுவர்மமிதற்கு பேரு”.                                                                                                                 – கலைக்கண்ணாடிச் சூத்திரம் “ஆகுமே முட்டுக்குழி மேல்பக்கத்தில்                 அடிகொண்டால் கை வீங்கும் களைப்புண்டாகும் மட்டறிய காதிரைச்சல் மயக்கம் […]
Read More
வாக்கு என்பது வாழ்வாதாரம்? தமிழகத்தின் தேவை என்ன?
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் தமிழகம் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகி வருகிறது. வீதிகளில் கொடிகளும், காற்றில் வாக்குறுதிகளும் பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், ஆரவாரங்களுக்கு மத்தியில் சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்னவாக இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான திறவுகோல். இன்றைய சூழலில் தமிழக மக்கள் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்கள்: […]
Read More
நான்_ நீ_ நாம்   கொச்சி ஹோர்தூஸ்
  • By Magazine
  • |
நவம்பர்  27_30 ,2025 – கிருஷ்ணகோபால் வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில்தான் கேரளாவுக்கு சுற்றுலாச் செல்வோம். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காலகட்டத்தில் கொச்சியில் நடக்கும்  ஹோர்த்தூஸ் இலக்கிய விழாவுக்கு நண்பர்கள் சென்றோம்.   சென்னை குருவாயூர் இரயிலில் நண்பர்கள் சிலர் திருநெல்வேலியிலிருந்தும் ,சிலர் இரணியலிலிருந்தும் ஏறினர். நான் நாகர்கோவில் டவுனிலிலிருந்து ஏறினேன்.இரயில் ஏறும் போது இரவு பதினொரு மணி.  எப்போதுமில்லாத தோணலாய் இரயில் ஒரு  நடமாடும் கூட்டுக்குடும்பம் போல் தோன்றியது.   இடையிடையே ஒரு […]
Read More
புதிய கண்டுபிடிப்பு
  • By Magazine
  • |
பூமியின் அரிதான தனிமம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி – முனைவர் மோகனா, பழனி ஓர் அரிதான, குறுகிய காலமே இருக்கக்கூடிய தனிமம் ஒன்று மருத்துவத்தின் மிகத் துல்லியமான புற்றுநோய் கொல்லியாக மாறக்கூடும் என அறிஞர்கள் கணித்துள்ளனர். இதற்கான ஆய்வினை டெக்சாஸ் A & M பல்கலைக்கழக சைக்ளோட்ரான் நிறுவனம் செய்துள்ளது. இத்தகவல் 2025, நவம்பர் 11- ஆம் நாள் Science daily-ல் வெளியிடப்பட்டுள்ளது.   அஸ்டட்டின்-211  புற்றுநோய் எதிர்ப்பு   டெக்சாஸ் A & M பல்கலைக்கழக […]
Read More
தமிழரும் பாரம்பரிய மருத்துவமும்
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T.இராஜேந்திரன் M.Sc, MD(Hom),Ph.D., தமிழர்கள் மருத்துவக்கலையில் தலைசிறந்து விளங்கியவர்கள். இதன் உயர்வையும், நன்மதிப்பையும் மருந்துகளின் பெயரிலேயே பல புலவர்களின் பெயர்களும், இலக்கியங்களும் இருப்பதிலிருந்து எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழர் மருத்துவம் உலகில் தமிழர்கள் பரவி வாழ்ந்த அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. எனினும் குமரி மாவட்டம் இன்றும் இதில் தலைசிறந்து விளங்குகின்றது. லெமூரியாக் கண்டம் என நம்மால் கருதப்படும் பகுதியின் எச்சமாகக் கருதப்படும் குமரி மாவட்டத்தில் தமிழரின் பாரம்பரியமிக்க மருத்துவம் பொதுமருத்துவம், சிறப்பு மருத்துவம், கை மருத்துவம், […]
Read More
மன இறுக்கமும் வர்ம மருத்துவமும் பற்றிய கருத்தரங்கம்
  • By Magazine
  • |
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்டிசம் (Autism) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்து, சித்த மற்றும் வர்ம மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மருத்துவப் பயிலரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்தை உலக வர்மா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அக்ஷரா சித்தா வர்மா மெடிக்கல் சென்டர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட சித்தா மற்றும் வர்ம மருத்துவர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் சமூகம் அறிவார்ந்த மேம்பட்ட சமூகமாக மாற வேண்டும் என்றால் அதற்கு இரு துறையினரை முக்கியமாக பொறுப்புமிக்கவர்களாகக் குறிப்பிடுவர்.                 ஒன்று ஆசிரியர்கள் மற்றொன்று ஊடகவியலாளர்கள். இருவரும் சமூகத்தை செம்மையிடுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர்.  ஆசிரியர்கள்  அவர்களிடம் வந்துச் சேரும்    குழந்தைகளை சிறந்த ஆளுமைகளாக, ஆற்றல்கொண்டவர்களாக, தலைவர்களா உருஏற்றி இச்சமூகத்திற்கு  கொடுக்கின்றார்கள்.                 அவ்வாறு உருபெற்றவர்களால் இச்சமூகத்தில் ஒவ்வொரு துறைகளும் இயங்குகின்றது. மேலும் இயக்கவும் படுகின்றது. அவ்வாறு இயங்குகையில் அவர்கள் தவறுகள் செய்வார்களே […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை எனும் செய்திகளை படிக்கும்போது நம்மால் கவலைபடாமல் இருக்க இயலவில்லை.  இதைவிட ஒரு துயரம் வேறு இருக்க முடியாது. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் பல ஆக்கப்பூர்வமான பங்கேற்புகளை வழங்கி சமூகமுன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் இன்று ஊழியர்களுக்கு மாதச் சம்பளம்/ஓய்வூதியம் வழங்கக்கூட அரசைக் கையேந்தும் அவலநிலையில் உள்ளது. சான்றிதழ்களை அச்சிடக்கூடப் பணமின்றித் தவிப்பதை படிக்கையில் துயரம் கௌவுகின்றது.                 “இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான முதன்மைக் காரணம், […]
Read More