நல்ல வார்த்தை பேசுங்க
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் நாம் பேசும் வார்த்தைகளுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. எப்போது யாரிடம் எதை பேசினாலும் நல்ல வார்த்தைகளாகவே பேசுங்கள். ஒரு உறவினர் உடம்பு சரியில்லாத ஒரு கவிஞரைப் பார்க்கச் சென்றார். அவரிடம் எங்க தெருவிலும் ஒருவர் இதே போன்று தான் உடம்பு சரியில்லாமல் இருந்தார். எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. ரொம்ப கஷ்டப்படுகிறார். மற்றொரு நாள் ஒரு கிராமத்து நண்பர் வந்து நலம் விசாரித்து விட்டு, இதெல்லாம் சரியாகி விரைவில் குணமாகி விடுவீங்க. உங்கள் நல்ல […]
Read More
அரசு கல்வி நிலையங்களில் பணிநியமனம்
  • By Magazine
  • |
தலையங்கம் – இரா. அரிகரசுதன் அண்ணா பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் குறித்த புதிய முடிவை அறிவித்திருக்கின்றது. அதன்படி உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற நடைமுறையை 20.11.2024 முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருப்பதை அறியமுடிகின்றது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியிருக்கும் இந்த சுற்றறிக்கையின் மூலம் இனிமேல் நிரந்தர உதவிபேராசியர்களோ, அலுவலர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் […]
Read More
வழிகாட்டும் ஒளிவிளக்கு
  • By Magazine
  • |
பேசும்போதே மின்னலாய் உற்சாகத்தைப் பாய்ச்சும் மினிப் பிரியாவின் பேட்டி.       கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மினிப்பிரியா, ஒருதொழில்முனைவர் மட்டுமல்லர். ஏராளமான தொழில் முனைவோரைஉருவாக்கிக் கொண்டிருப்பவர். அறிவியல் படிப்பில் ஆராய்ச்சிப் பட்டத்தகுதி கொண்ட மினிப்பிரியா, தன்னைப் போல பலரும் கல்வியிலும் உயர்ந்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். ‘நான் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பிறந்தேன். எனக்குச் சுமார் 6 வயதாக இருக்கும் போது குழித்துறைக்கு இடம் பெயர்ந்தோம்.      எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவள் தான் நான். […]
Read More
“கனா கண்டேன் தோழி”…
  • By Magazine
  • |
சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த இந்துமதி அம்மாவிற்கு … மனது ஒரு வித குதூகலமாகவே இருந்தது. வழக்கமாக அவள் பயணிக்கும் பயணம் தான் அது. அன்று…. ஏனோ!…. அந்த பயணம் அவளுக்கு ஒரு சுகத்தை குடுத்தது. சொந்த மண்ணின் பாசமோ?… தெரியலையே… அல்லது நேற்று அவள் கண்ட கனவு தான் காரணமா? அவள் கண்ட கனவைப்பற்றி … அவள் கணவனிடம் கூற முயற்சித்த போதல்லா …. அவர் காது குடுக்கவேயில்லை. அவளுக்கும் அது தடையாக படவே… சொல்லவேயில்லை. […]
Read More
அரசு அலுவலகங்களில் தவிக்கும் மக்களுக்காக சமூக சேவகர் ஆனேன்
  • By Magazine
  • |
சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது பேட்டி அரசு அலுவலகங்களில் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் மேல் பரிதாபம் கொண்டு சமூக சேவகர் ஆனேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது. புதிய தென்றலுக்காக அவரை குளச்சலில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் சமூக சேவகர் ஆனது எப்படி? நான் சுமார் 30 ஆண்டுகளாக சமூக சேவை […]
Read More
பிழைப்பு
  • By Magazine
  • |
போதை தலைக்கு ஏறியது… கிரிக்கெட் மட்டை, கம்பு, இரும்புக்கம்பி என்று கையில் எது கிடைத்ததோ எடுத்துக் கொண்டார்கள். பத்துபேர் நான்கு இரு சக்கர வாகனங்களில் கிளம்பினார்கள். சமத்துவ கழகம் கட்சியின் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை நிறுத்திய இளைஞர்கள் கட்டையையும் கம்பியையும் எடுத்துக் கொண்டு வெறித்தனமாய் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். யேய்… யாருப்பா நீங்க… என்ன பண்றீங்க… வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வெள்ளை வேட்டி பெரியவர்கள் வெலவெலத்து போனார்கள். போலீஸ்க்கு போன் போடுங்க… சுந்தரத்துக்கு போன் […]
Read More
சுற்றுச்சூழல் அக்கறையோடு
  • By Magazine
  • |
பண்டிகைகளைக் கொண்டாடுவோம் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உறவுகள் கூடி கொண்டாடுவதற்கானவைதான் பண்டிகைகளும் திருவிழாக்களும். ஆனால் இந்த அவசரகால தொழில்நுட்ப வாழ்வில் தொலைவுகளில் வாழும் நாம் இப்பண்டிகைக் காலங்களில் உறவுகளை சந்தித்து கூடி மகிழ்ந்திருப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நுகர்வுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். சொந்தங்களைச் சந்தி¢த்தல் என்பது சுமூகமான கூட்டுக்குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வாகும். தற்போதைய வாழ்விற்கான பொருளாதாரத் தேடலில் எங்கெங்கோ படிப்பு, பணி என பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உறவு ரீதியாக தொலைவிலிருந்தாலும் கூட்டுக்குடும்ப […]
Read More
மணமூட்டும் புதினா
  • By Magazine
  • |
புதினா நறுமணமிக்கது. இது உணவிற்கு மட்டுமல்லாது, வாய்க்கும் நறுமணத்தை கொடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. புதினா சத்து நிறைந்தது. இதன் பூர்வீகம் ஐரோப்பிய நாடுகளாக இருப்பினும், எல்லா இடங்களிலும் பயிராகிறது. தண்டுபகுதி அல்லது வேர்பகுதியை தொட்டியில் உள்ள மண்ணில் ஊன்றி வீட்டு தோட்டங்களில் வளர்க்கலாம். தண்ணீர் தினம் ஊற்ற வேண்டும்.  இது சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை கடும்பச்சை நிறத்தில் ஓரங்களில் பற்களுடனும், சுருக்கங்கள் நிறைந்தது போன்றும் காணப்படும். புதினா, பற்பசை, வாய் […]
Read More
ஒரு நினைவூட்டல்
  • By Magazine
  • |
“இயற்கை என்னும் இளைய கன்னி” குமரியின் கிழக்கு எல்லையில் தோவாளைக்கும் இராஜாவூருக்கும் இடையலிருக்கும் மலையின் பெயர் கன்யா உச்சி…ஆம் குமரிக்கோடு..(கன்யா_குமரி.உச்சி_கோடு,மலை) ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலம்பின் பாயிரவரிகள்..ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட  மாற்றங்கள் குறித்து பேசுகின்றது. கடுக்கரை என்ற ஊர் வரை குமரிக்கடல்பரந்திருந்து.. அன்றைய கபாடபுரத்தோடு.. இவ்வூரும் கடல்கோளுக் கிரையாகி, கடற்கரை எனும் ஊர் கடல்வற்றி மீண்டும் நிலமாகி இன்றைய நிலம்  கடுக்கரை ஆயிற்று… என்பர்…. ஆம்… இயற்கை […]
Read More
ஆன முதலில் அதிகம் செலவானால்
  • By Magazine
  • |
வரவு எட்டணா செலவு பத்தணா என்றால் அதிகம் இரண்டணா கடனில் போய் தானே முடியும். நம் முன்னோர்களில் பெரும்பான்மையோர் கடன் வாங்குவதை மிகவும் அவமானமாகவே நினைத்து வாழ்ந்தனர். வருவாய்க்கு ஏற்பவே செலவுகளைச் சுருக்கி வருவாய்க்குள் வாழவே முற்பட்டனர். குடும்பத்தில் உள்ள இல்லதரசிகளும் கணவன் உழைத்துப் பொருள் தேடிக்கொண்டு வந்து கொடுப்பதைச் சிக்கனமாகச் செலவிட்டு அதில் சிறு தொகையை (சிறுவாடு) கணவருக்குக் கூட தெரியாமல் சேமித்து வைப்பர். அதனைக் குடும்பத்தின் அவசர அவசியத் தேவைக்குத் தக்க சமயத்தில் கொடுத்துக் […]
Read More