நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம்
  • By Magazine
  • |
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம்   நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல். இராஜேந்திரா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் வைத்து நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கத்தில் வர்ம மருத்துவ மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.  இராஜேந்திரன் அவர்கள் வர்ம மருத்துவத்தில் நீரழிவு நோயின் வரலாறு , வர்ம மருத்துவத்தின் மூலம் நீரிழிவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நீரிழிவும் […]
Read More
விரோதிகள் இறப்பது உனக்கு இழப்பு
  • By Magazine
  • |
ஏதாவது ஒன்று இனிப்பாக இருக்கிறது என்றால் இன்னொன்று கசப்பாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று நன்றாக இருக்கிறது என்றால் இன்னொன்று மோசமானதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று தெய்வீகமாக இருக்க வேண்டும் என்றால் இன்னொன்று அசுரத்தனமாக இருக்க வேண்டும். ஞானிகளின் புகழ்மிக்க கட்டளை நமக்குத் தெரியும். விரோதியிடமும் அன்போடிரு. லாவோத் சூ அதைவிட ஆழமாகப் போகிறார். வெறுப்புக்கு நல்லியல்பே பதிலாகட்டும் என்கிறார். இதற்கு வெகு ஆழமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக ஞானிகள் விரோதியிடம் அன்பாயிரு என்று சொல்லும் […]
Read More
பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு
  • By Magazine
  • |
மக்கள் சமுதாயத்தில் கருத்துப் பரிமாற்றத்துக்கு நூல்களும் செய்திப் பரிமாற்றத்துக்கு நாளிதழ்களும் துணை புரிகின்றன. வானொலி, தொலைக்காட்சி, மடிக்கணிணி, கைபேசி போன்ற ஊடகச் சாதனங்கள் மிகுதியாக இருந்தாலும், செய்தி பத்திரிக்கைகளின் பரவலாக வளர்ச்சியை அவை தடுக்க முடியவில்லை. ஏராளமான நாட்டு நடப்புச் செய்திகளையும், வணிகம், தொழில் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் அரசியல் கருத்துக்களையும் நாளிதழ் தருவதால் அவற்றின் முக்கியத்துவம் குறையவில்லை. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, யுனைட்டெட் பிரஸ் போன்ற பெரும் செய்தி நிறுவனங்கள் கொடுக்கும் செய்திகளைத் […]
Read More
உத்திரத்தில் நிற்கின்றது பண்டிகை
  • By Magazine
  • |
பண்டிகைநாளின் முந்தைய நாட்களிலான முடிவிலா நகமென நீளும் முள்படுக்கையின் மீது நடந்து கடக்க முயலுகிறான் ஒரு அப்பன் மகனோ மகளோ ஆசைபட்டதை வாங்கவில்லை எனும் கோபத்தோடும் அழுகையோடும் பலூன்களாய் மிதக்கிறார்கள் வீட்டிற்குள் அவ்வப்போது வந்து மோதவும் செய்கிறார்கள் இல்லத்தரசியோ அடுக்கி வைத்திருக்கும் கையாலாகாததை வாரிவாரி அறைகிறாள் அவள் அவ்வாறு அறைவது பண்டிகையின் வெளியிரைச்சலையும் தாண்டி வெடித்து பறக்கிறது எருக்கம்பஞ்சின் தன்மையோடு புரளும் குடும்பவன்முறையின் குலுக்காம்பெட்டிக்குள் சேர்ந்து குலுங்குகிறார்கள் பண்டிகையும் அப்பனும் தூரத்திலிருக்கும் அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள் “இந்த […]
Read More
அருகிலிருக்கும் அன்பு
  • By Magazine
  • |
பக்கத்திலிருப்போரின் அன்பைத் தக்க வைக்க ஏதாவது செய்துவிடுங்கள் அதாவது என்ன வேண்டும் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களை வெட்டித் தின்றுக்கொண்டிருப்பதை நீங்கள் மனம் உவந்து ஏற்றுக் கொள்ளக்கூடாது தெரியாததாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரியப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் அதாவது அது ஒரு தொடர் செயல்பாடாகும் சீராய் துடித்துக்கொண்டிருக்கும் இதய முள்ளின் இசை இரவின் அதிர்விலும் வெளிப்படும் அல்லவா அந்த நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் யாமத்திற்கும் வைகறைக்கும் இடையில் எழும்பும் அருகில் துயிலும் […]
Read More
  • By Magazine
  • |
காதல் இயற்கையானது தினம்தினம் புதிது புதிதாய் பூப்பூப்பதுபோல் பூக்கும் காதல் இயற்கையானது.. அதனை தியதிச் சிமிழுக்குள் சிறைவைக்க நினைத்தது யார்? எங்கோ யாரோ ஒருவரின் காதல் வென்ற தினமாம்.. தினம்தினம் வெல்லும் காதல்பூக்கள் சிலபூக்கள் புயல் வேகத்தில் பறந்திடுதல் உண்டுதான்.. ஆனாலும் தினம்தினம் காதல் தினமே.. பெப்ருவரி 14 அவர்களுக்கு. இனி காதலர்களைச் சேர்த்துவைக்க தாலியும் கையுமாய் அலையும் கூட்டத்துக்கு தினம்தினம் வேலை வைப்போம் வெல்க காதல் காதல் இயற்கையானது தியதிச்சிமிழ்கள் இனி அவர்களுக்கு மட்டும்..  – […]
Read More
இதயத்தை பாதுகாக்கும் மாதுளை!
  • By Magazine
  • |
தினமும் வெறும் வயிற்றில் 1 மாதுளையை சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் உடலில் உள்ள வீக்கம் குறைவதாக சுகாதார நிபுணர்களின் கூறுகிறார்கள். மாதுளை இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.      மாதுளையில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மாதுளை இதய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. மாதுளை சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் அளவு […]
Read More
கடிதம் கண்டீரா?
  • By Magazine
  • |
மதிப்பிற்குரிய ஆசிரியர் பெரும்தகை அவர்களே ஒருவர் எதைக் கற்றுக் கொள்ளவில்லையோ அதை பயிற்றுவிப்பது மட்டும் கல்வி அல்ல. நாம் எப்படி இல்லையோ அப்படி மாற்றுவது தான் கல்வி என்பதை நீங்கள் உணர்வீர்கள். பாடநூலை மட்டும் கற்றுத்தரும் இயந்திரமாக செயல்படாதீர்கள். மாறாக வாழ்க்கை கல்வி வாழ்க்கை மூலம் மற்றும் வாழ்க்கை முழுவதும் கல்வி என்னும் நுணுக்கங்களை கற்றுத்தாருங்கள். ஒரு பறவைக்கு வேண்டிய தீனியை அதை பார்த்து எறிந்தால் அந்த பறவை பறந்து போவதில்லை மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து அந்த […]
Read More
ஆண்களை விட பெண்களின்ஆயுட்காலம் அதிகம்… உண்மையா…?
  • By Magazine
  • |
அதிக  ஆயுள்  உள்ள  பெண்கள்.. பெண்கள் ஆண்களை விட பலவீனமானவர்கள். நீண்ட காலம் வாழ்வதில்லை இப்படி ஒரு பொதுக்கருத்து நிலவி வருகிறது இது உண்மையா? இல்லை. உண்மையே இல்லை. பெண்களுக்கு மெதுவாக வயதாகிறதா?  ஆம் என்பதே உண்மை. ஆனால் ஒவ்வொரு வயதிலும் அவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள். இதனை விட முரண்பாடாக  பெண்களுக்கு இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், ஆண்களை விட ஒட்டுமொத்த உடல் நோய்களின் விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களின் வாழ்நாள்… மனிதனின் வாழ்நாளைக் கணக்கிட்டால், […]
Read More
மக்களின் பயத்தை போக்குவதற்காக பஜனை பாடினேன்
  • By Magazine
  • |
ஆசான் கோலப்பன் அவர்கள் பேட்டி கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மத்திகோடு பகுதியில் வாழ்ந்து வருபவர் கோலப்பன் ஆசான் அவர்கள். புதிய தென்றலுக்காக அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் தனது விவசாயத் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தோட்டத்தில் சுறுசுறுப்பாக இளைஞரை போல வேலை செய்து கொண்டிருந்த சிலம்ப ஆசான் கோலப்பன் அவர்களை சந்தித்தோம். அப்போது அவர் தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் […]
Read More