• By Magazine
  • |
– எம்.எம்.பைசல் ஒரு தேநீர்க் கடையில் நானும் அவளும் ஒற்றைத் தேநீர் எங்கள் முன் அவளும் குடிக்கிறாள் அடிக்கடி என் கண்களைப் பார்கிறாள் நானும் அதுவே வார்த்தை இறுத்து பேசுகிறோம் நானும் குடிக்கிறேன் திரும்பத் திரும்ப குடிக்கிறோம் தீராத( அன்பை) தேநீரை
Read More
  • By Magazine
  • |
கைபேசி கையடக்க கைபேசி கையில் வைத்து பேசுவதினால் கைபேசி வாஞ்சையுடன் அன்பை பகிர்ந்திட கைபேசி வகைவாயாய் வர்த்தகம் செய்ய கைபேசி தபால் தந்தி காணாமல் போகச் செய்த கைப்பேசி காலையில் எழுந்திட அலாரமான கைபேசி ஊரிலிருந்து கொண்டே வேறு ஊரில் இருக்கிறேன் என்று பொய் பேசி நாடகமாட கைபேசி நன்மைகள் நடக்க உடனடி தகவல் தர கைபேசி உள்ளங்கையில் உலகை காட்டும் கைபேசி வங்கிக்கடன் பரிமாற்றத்துக்கு கைபேசி வழிதுணையாக நண்பன் போலான கைபேசி கர்ணன் கவச குண்டலம் […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் காற்றுக் கூட சிலநேரம் மூங்கிலைத் தேடும் இசையாகத் தன் குரலை கேட்க… நாற்றுக் கூட சிலநேரம் தென்றலைத் தேடும் தன் பச்சை பட்டாடையை ஸ்பரிசித்துப் பார்க்க.. அலைகள் கூட சிலநேரம் படகினைத் தேடும் தன் முகடுகளின் உதடுகளில் முத்தமிட்டுச் செல்ல.. முகத்தை மலரும் மலரென்றோ அகத்தை ஒளிரும் நிலவென்றோ வர்ணனை கேட்க சில வயது அகங்களும் காத்திருக்கும்… பேராசைகளும் பெரும் ஓசைகளும் அல்ல.. சின்னச் சின்ன ஆசைகளும் சன்னமான ஒசைகளுமே இதயப் பூட்டினை […]
Read More
உழவனை வாழ்த்து !
  • By Magazine
  • |
– கே. பி. பத்மநாபன் கோழி கூவும் நேரத்தில்      குடிசை வீட்டில் எழுந்திடுவான்; மேழி தன்னை எடுத்திடுவான்;      மேட்டு வரப்பில் நடந்திடுவான்; ஆழி சூழ்ந்த உலகினிலே      அனைத்து மாந்தர் பசியாற நாழி உணவைப் பெறுதற்காய்      நன்றாய் நிலத்தை உழுதிடுவான்; தாழி தன்னில் கொண்டு வந்த      தண்ணீர் மோரும் கலந்திட்ட கூழினையே குடித்திடுவான்;       கொதிக்கும் வெயிலில் உழைத்திடுவான்; கீழிருக்கும் ஆழ்மண்ணைக்      கீழ் மேலாக ஆக்கிடுவான்; பூழிச்சேற்றில் காலூன்றிப்      […]
Read More
நெஞ்சு நிறை வாழ்த்து மடல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி சித்த மருத்துவச் சிந்தனைக் குறிப்புடன் வர்ம அறிவியல் வண்டமிழ் வளமொடு சிறுகதை கட்டுரை சிறப்பொடு திகழும் குமரியின் தென்றல் குன்றாது வாழியவே! அரசியல் சூழல் அணுகிட விடாமல் நேர்மை நெறிநின்று வாய்மை வழி நடந்து சட்டங்கள் வழிகாட்டிச் சரித்திரம் படைத்திடும் தென்குமரித் தென்றல் திசையெங்கும் வாழியவே! சுற்றுச்சூழலொடு அறிவியல் கருத்துக்கள் வரலாறு புதினம் வளமான கவிதையொடு திங்களில் வீசிடும் தங்கத்தமி¢ழ்த் தென்றல் பொங்கிடும் புத்துணர்வாய் பொன்றாது வாழியவே! அனைவர்க்கும் பயன்தரும் அருங்கலைப்பெட்டகமாய் கலைக்களஞ்சியம் இதுவென […]
Read More
உயிரற்றவைகளின் உரையாடல்கள்
  • By Magazine
  • |
சிவ. விஜயபாரதி தாகத்திற்கு இறைஞ்சுகிறது பாவப்பட்ட உயிர். கைககளை அகல விரிக்கின்றன ஞானமிகு பழைமைகள். தற்காலிக கதையொன்றினை அளந்து ஒருக்களித்து நகர்கிறார்கள் நிலைமை உணர்ந்த யாவரும். குரல்வளை நெறிக்கின்றன கையளிக்கப்பட்ட நீரினை கேட்டு வரும் அலையழைப்புகள் . வற்றும் முன் வழிந்தோடிய உப்பு நீர்த்தடங்கள் குறித்து அதன் சிற்றுயிர்கள் எழுப்பும் வினாவிற்கு உயிர்ப்பற்ற புன்னகையைப் பதிலெனக் கொடுப்பதற்குள் விளையாட்டு பொம்மைகள் கேட்டு அழ மலங்க மலங்க விழிக்கிறதந்த உயிர் மங்கும் விழிகளோடு மரங்களிடம் இறைஞ்ச அசைந்து அது […]
Read More
ஆலயங்களிலிருந்து வெளியேறுதல்
  • By Magazine
  • |
நூற்றாண்டுகளுக்குப்பின் அங்கு செல்ல முடிந்த நான் அதன் இறுகித் திரண்டெழுந்து நிற்கும் கனத்த பெரிய கதவம் காண்கிறேன் சட்டை களைய வைக்கப்பட்டேன் வெற்று மார்போடு எனக்கான தேவதைகளைக் கண்டு குறைதீர்க்க வேண்டுமென்று சோதிடம் வழி உள்ளேறினேன் கருங்கல் பாவிய பிரகாரம் முழுதும் புறக்கணிப்பின் கூக்குரலால் நிறைந்திருப்பதை உணரத் தொடங்கியபோது பதற்றமுற அவசரமானேன் யாழிகளின் கோரைப் பற்களில் மனித சதைத் துணுக்குகள் சிற்பங்களின் அழகில் வடிகிறது செங்குருதி எனக்கெதிரே இன்னொரு மொழியில் யாரோ தீர்மானஞ்சொல்ல கலவரமடைந்தேன் வெளியேறும் திசைகளில் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
யானையொன்றை விழுங்குவதுபோல் நான் கண்ட கனவு விடிகாலையின் பாயில் சுருட்ட முடியாமலிருந்தது. யானையாகக் கண்டது எனது காலத்தையா கற்பனையையா என்னையா நானொரு கோயில் யானையிடம் நாலைந்து நாள் பேசிப்பார்த்தேன் யானை என்னிடம் பேசிய மொழி தமிழைப்போல் எனக்குப் புரிந்தது சாலையோரத்தில் வாகனங்களின் சக்கரங்கள் காறித்துப்பும் மழை வெளியில் எனது முகம் போய் அலைகிறது. யானை போல்  ஊர்திகள் சாலையை நிரப்புகின்றன எதுவும் சொல்வதற்கில்லை அனாதைக் கனவாய் திசைகளில் அடித்துச் செல்லப்படுகிறது பெருஞ்செவிகள். ஒருமுறை வானவில்லில் எனது நிறத்தையும் […]
Read More
ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான்
  • By Magazine
  • |
சிரிப்புகள் ஒன்றை ஒன்று முட்டிப் திரியும் வகுப்பறைக்குள்ளே ஆசிரியை சொல்லிக்கொண்டிருந்தார் “குழந்தைகளே உங்களை யாராவது விரும்பத் தகாத வழியில் தொட அனுமதிக்கக் கூடாது” உடலின் குறிப்பிட்டப் பாகங்களை சுட்டிக் காட்டினார். கிச்சுகிச்சு மூட்டிய உணர்வோடான சிரிப்பில் குழந்தை முகங்கள் “அவ்வாறானசூழலில் என்ன செய்வீர்?” ஆசிரியையின் கேள்வியில் வகுப்பறை அமைதியாயிற்று. கிணற்றுள் கல்லெறியும் தொனியில் ஒரு குழந்தை “அவங்களுக்கு டிஸ்யும் டிஸ்யும்தான் ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான் அப்படியே காலி பண்ணிருவேன்” குழந்தையின் அடவுகளில் கராத்தேவின்  மஞ்சள் […]
Read More
கதவுக்குள்ளிருந்து கிரீச்சிடுவது ஒரு வட்டமே
  • By Magazine
  • |
இருபக்கங்களிலும் ஒவ்வாமையை வளர்த்தியிருக்கிறது கதவு உளுத்துபோன மரத்தால் ஆகியிருக்கின்றது கதவின் மனம் சிலுவை என அடிக்கப்பட்டிருக்கும் நிலையின் கண்ணி விடுவதாயில்லை கதவை அதன் கனத்தையும் தாண்டி புலம்பலை ஒரு சாபமென துப்பிக்கொண்டிருக்கின்றது கதவு இருபக்கங்களிலும் அங்கிருக்கும் இருபக்கங்களும் தனக்கான இருபக்கங்களை உற்பத்தி திறன்கொண்டு வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன அவ்வாறே கதவுகளும் பக்கங்களும் பக்கங்களும் கதவுகளும் என சுழலும் ஒரு வட்டம் தன்னுள் ஒளி பொருந்தியதாய் தன்னை நினைத்துக் கொள்கிறது பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் தன்கை ஓட்டுச்சில்லால் அடிக்கின்றான் சில்லு சில்லாகும் […]
Read More