• By Magazine
  • |

உனை

கொன்றொழித்து விட்டுத்தான்

மறுவேலை

ஆம் கொலைக்களத்தை முடிவு செய்துவிட்டேன்

ஆயுதங்கள் தேர்வாகிவிட்டன

உனை கொலை செய்து விடுகிறேன் பார்

விரைவில்

நீயில்லாமல் போவாய்

எனது சொற்களை தின்று

அரித்து விடுகிறாய்

எனது இதயத்திற்குள் புகுந்து

கரண்டுகிறாய்

உனை அழித்தொழித்து விட்டுத்தான்

மறுவேலை

அழிக்க கையெடுக்கும் போதெல்லாம்

எனது நல்ல சொற்களின்

இடுக்குகளில் ஒழிந்து கொள்கிறாய்

ஆம்

நீயொரு பாச்சைதான்

உனை அழிப்பதொன்று

அவ்வளவு சிரமமில்லை

பாச்சை எதிரிதான்

துரோகிகள்

ஒட்டுண்ணியைப் போன்றவர்கள்

நமது

‘மன்னிப்பு’ இடுக்குகளில்

ஒழிந்திருப்பவர்கள்

கொலை அவ்வளவு எளிதானல்ல

துவாரகா சாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *