உயிரற்றவைகளின் உரையாடல்கள்
  • By Magazine
  • |
சிவ. விஜயபாரதி தாகத்திற்கு இறைஞ்சுகிறது பாவப்பட்ட உயிர். கைககளை அகல விரிக்கின்றன ஞானமிகு பழைமைகள். தற்காலிக கதையொன்றினை அளந்து ஒருக்களித்து நகர்கிறார்கள் நிலைமை உணர்ந்த யாவரும். குரல்வளை நெறிக்கின்றன கையளிக்கப்பட்ட நீரினை கேட்டு வரும் அலையழைப்புகள் . வற்றும் முன் வழிந்தோடிய உப்பு நீர்த்தடங்கள் குறித்து அதன் சிற்றுயிர்கள் எழுப்பும் வினாவிற்கு உயிர்ப்பற்ற புன்னகையைப் பதிலெனக் கொடுப்பதற்குள் விளையாட்டு பொம்மைகள் கேட்டு அழ மலங்க மலங்க விழிக்கிறதந்த உயிர் மங்கும் விழிகளோடு மரங்களிடம் இறைஞ்ச அசைந்து அது […]
Read More
உடல் உஷ்ணமகற்றும் “முள் இலவு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் இலவு மரம், ஏரிக்கரை ஓரம், தரிசு நிலம், சாலை ஓரங்கள் மற்றும் மலைசார்ந்த நிலங்களில் தானாகவே வறட்சியை தாக்கு பிடித்து வளரும் மரவகை ஆகும். இதனை விதை மூலம் நடவு செய்யலாம். 3 முதல் 5 வருடங்களில் காய்கள் உண்டாகி பலன் கொடுக்கும். வறட்சி மற்றும் பூச்சி தொல்லைகளை தாக்கு பிடித்து பராமரிப்பு செலவு இன்றி வளர்கிறது. இம்மரம் நேராக சுமார் 70 அடி வரை வளரும். முள் இலவு மரத்தின் தண்டில் […]
Read More
உலகின் தங்க பெட்டகம் – நியூயார்க், பெடரல் பேங்க்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அட தங்கமே…யாரறிவார் உந்தன் அரியாசனம் ..? வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்வு/ செயல்பாடுகளில் தங்கத்தை போட்டிருப்பீர்கள்.   அல்லது யாருக்காவது தங்கம் வாங்கிக் கொடுக்கும்படி நேர்ந்திருக்கும். அந்த தங்கத்துக்கு எங்கு விலை, யாரால் நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? அதன் தரத்தை நிர்ணயம் செய்வது யார்? எங்கே? இதெல்லாம் என்றைக்காவது நினைத்துக்கூட பார்த்திருப்போமா? இப்பவும் கூட நம்மில் நிறைய பேருக்கு இது  தெரியாது. கண்டுபிடித்தது எப்படி?      மனிதன் எப்போது தங்கத்தைப் பயன்படுத்தினான், எப்படி கண்டுபிடித்தான், […]
Read More
என்னுடைய பயணத்தில் புகைவண்டிகள்
  • By Magazine
  • |
எம்.முகுந்தன். மலையாள நாவலாசிரியர். தமிழில் :கிருஷ்ணகோபால் இரயில் ஒரு வாகனம் மட்டுமல்ல அனுபவம் கூட தான். பல வேளைகளிலும் அது வீட்டு நினைவுகளும் நிறைந்ததே… என்னுடைய வாழ்க்கையில் இரயில் பயணத்திற்கென தனியொரு இடம் உண்டு. அரை நூற்றாண்டிற்கும் மேலாக நான் தொடர்ந்து இரயிலில் பயணம் செய்திருக்கிறேன்.அந்த அலைச்சலைக் குறித்து ஒர்மை வரும் போது சென்னை நகரத்தைக்  குறித்து சொல்லாமல் கடந்துச் செல்ல இயலாது. மய்யழியில் புகைவண்டி நிலையத்தை அடுத்துத்தான் என்னுடைய பழைய காலத்து  வீடு. அன்று  அது […]
Read More
சுற்றுச்சூழல் அக்கறையோடு
  • By Magazine
  • |
பண்டிகைகளைக் கொண்டாடுவோம் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உறவுகள் கூடி கொண்டாடுவதற்கானவைதான் பண்டிகைகளும் திருவிழாக்களும். ஆனால் இந்த அவசரகால தொழில்நுட்ப வாழ்வில் தொலைவுகளில் வாழும் நாம் இப்பண்டிகைக் காலங்களில் உறவுகளை சந்தித்து கூடி மகிழ்ந்திருப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நுகர்வுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். சொந்தங்களைச் சந்தி¢த்தல் என்பது சுமூகமான கூட்டுக்குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வாகும். தற்போதைய வாழ்விற்கான பொருளாதாரத் தேடலில் எங்கெங்கோ படிப்பு, பணி என பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உறவு ரீதியாக தொலைவிலிருந்தாலும் கூட்டுக்குடும்ப […]
Read More
கோகுல்
  • By Magazine
  • |
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….பீப்பீ….டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… மிக அனாயசயமாக வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. புகை கக்காத பைக் வண்டி. நேராக ஓடிக்கொண்டிருக்கும் அந்த வண்டி சட்டென்று ஒரு ட வளைவில் திரும்பி மேல் நோக்கி விரைகிறது. இரண்டடி உயரத்திற்கு பயணித்த அது சடாரென திரும்பி கீழ் நோக்கி வருகிறது. மறுபடியும் அதே ட வளைவுக்கு உடன்பட்டு தரைக்கு வந்து சேர்கிறது. இப்போது அது எல்லா இடங்களிலும் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டு ஓடுகிறது. அல்லது அதன் சக்கரங்கள் போகும் வழியெல்லாம் பாதையாகிவிடுகிறது. டுர் டுர் சத்தமும், […]
Read More
ஒரு நினைவூட்டல்
  • By Magazine
  • |
“இயற்கை என்னும் இளைய கன்னி” குமரியின் கிழக்கு எல்லையில் தோவாளைக்கும் இராஜாவூருக்கும் இடையலிருக்கும் மலையின் பெயர் கன்யா உச்சி…ஆம் குமரிக்கோடு..(கன்யா_குமரி.உச்சி_கோடு,மலை) ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலம்பின் பாயிரவரிகள்..ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட  மாற்றங்கள் குறித்து பேசுகின்றது. கடுக்கரை என்ற ஊர் வரை குமரிக்கடல்பரந்திருந்து.. அன்றைய கபாடபுரத்தோடு.. இவ்வூரும் கடல்கோளுக் கிரையாகி, கடற்கரை எனும் ஊர் கடல்வற்றி மீண்டும் நிலமாகி இன்றைய நிலம்  கடுக்கரை ஆயிற்று… என்பர்…. ஆம்… இயற்கை […]
Read More
ஆலயங்களிலிருந்து வெளியேறுதல்
  • By Magazine
  • |
நூற்றாண்டுகளுக்குப்பின் அங்கு செல்ல முடிந்த நான் அதன் இறுகித் திரண்டெழுந்து நிற்கும் கனத்த பெரிய கதவம் காண்கிறேன் சட்டை களைய வைக்கப்பட்டேன் வெற்று மார்போடு எனக்கான தேவதைகளைக் கண்டு குறைதீர்க்க வேண்டுமென்று சோதிடம் வழி உள்ளேறினேன் கருங்கல் பாவிய பிரகாரம் முழுதும் புறக்கணிப்பின் கூக்குரலால் நிறைந்திருப்பதை உணரத் தொடங்கியபோது பதற்றமுற அவசரமானேன் யாழிகளின் கோரைப் பற்களில் மனித சதைத் துணுக்குகள் சிற்பங்களின் அழகில் வடிகிறது செங்குருதி எனக்கெதிரே இன்னொரு மொழியில் யாரோ தீர்மானஞ்சொல்ல கலவரமடைந்தேன் வெளியேறும் திசைகளில் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
யானையொன்றை விழுங்குவதுபோல் நான் கண்ட கனவு விடிகாலையின் பாயில் சுருட்ட முடியாமலிருந்தது. யானையாகக் கண்டது எனது காலத்தையா கற்பனையையா என்னையா நானொரு கோயில் யானையிடம் நாலைந்து நாள் பேசிப்பார்த்தேன் யானை என்னிடம் பேசிய மொழி தமிழைப்போல் எனக்குப் புரிந்தது சாலையோரத்தில் வாகனங்களின் சக்கரங்கள் காறித்துப்பும் மழை வெளியில் எனது முகம் போய் அலைகிறது. யானை போல்  ஊர்திகள் சாலையை நிரப்புகின்றன எதுவும் சொல்வதற்கில்லை அனாதைக் கனவாய் திசைகளில் அடித்துச் செல்லப்படுகிறது பெருஞ்செவிகள். ஒருமுறை வானவில்லில் எனது நிறத்தையும் […]
Read More
ஆன முதலில் அதிகம் செலவானால்
  • By Magazine
  • |
வரவு எட்டணா செலவு பத்தணா என்றால் அதிகம் இரண்டணா கடனில் போய் தானே முடியும். நம் முன்னோர்களில் பெரும்பான்மையோர் கடன் வாங்குவதை மிகவும் அவமானமாகவே நினைத்து வாழ்ந்தனர். வருவாய்க்கு ஏற்பவே செலவுகளைச் சுருக்கி வருவாய்க்குள் வாழவே முற்பட்டனர். குடும்பத்தில் உள்ள இல்லதரசிகளும் கணவன் உழைத்துப் பொருள் தேடிக்கொண்டு வந்து கொடுப்பதைச் சிக்கனமாகச் செலவிட்டு அதில் சிறு தொகையை (சிறுவாடு) கணவருக்குக் கூட தெரியாமல் சேமித்து வைப்பர். அதனைக் குடும்பத்தின் அவசர அவசியத் தேவைக்குத் தக்க சமயத்தில் கொடுத்துக் […]
Read More