முக்கனியின் முத்துக்கள்’ என்ற நூலை படைத்துள்ளார் கவிஞர் இ.க. சுப்பையா கம்பர் அவர்கள்,
இந்நூலில் கம்பனின் பெருமை, கம்பனும் தமிழும், கம்பனின் கவிதை. கம்பனின் எழுத்து. கம்பனின் கவி உலகம். கம்பனின் தமிழ் பெருமை, கம்பனின் சோக பாடல், கம்பனின் கவிநயம், கம்பராமாயணத்தின் சிறப்பம்சம் என்று கம்பனின் பெருமையையும், திருவள்ளுவரின் பெருமை. திருக்குறளின் பெருமை என்று திருவள்ளுவரின் பெருமைகளையும், தமிழ்நாட்டின் பெருமை தமிழ் மொழியின் சிறப்பு தமிழின் பெருமை, கவிதைகளில் நன்மையும் பொய்யும் தமிழ்த்தாயின் பெருமை என்று தமிழின் பெருமைகளையும், பெண்களின் சிறப்பு. தாயின் தாலாட்டு. பெண்களின் வீரம். நீரின் தன்மை. மகளிர் தின விழா என்று பெண்களின் பெருமையை, வெற்றியின் பாதை, காந்தியின் பெருமை வ உ சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமைகளையும் நினைவு படுத்தும் விதமாக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி உளளார்.
கவிஞரின் தமிழ் மொழி மீதான ஆழ்ந்த காதல் ஒவ்வொரு வரியிலும் எதிரொலிக்கிறது. இந்நூல் தமிழ் மொழியின் தொன்மை, அதன் தனிச்சிறப்பு மற்றும் தாய்மொழி மீதான தீராத பற்று ஆகியவற்றை ஆழமாகப் பேசுகின்றன. “தமிழ் எங்கள் உயிர்” போன்ற உணர்ச்சிமயமான வரிகள் வாசிப்பாளருக்கு ஒருவித உத்வேகத்தைக் கொடுக்கின்றன.
‘முக்கனியின் முத்துக்கள்’ என்பது வெறும் கவிதைத் தொகுப்பு அல்ல; அது தமிழ் உணர்வின் ஒரு செழுமையான வெளிப்பாடாகும். தமிழ் இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கும், தனது தாய்மொழி மற்றும் தேசத்தின் பெருமையை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இப்புத்தகம் உதவியாக இருக்கும். ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூலாகும்.
விலை 50 (தபால் செலவு தனி)
பக்கங்கள் : 84
நூல் தொடர்புக்கு
கவிஞர் இ.க. சுப்பையா கம்பர்
15-A, சோலைபுரம் தெற்கு தெரு,
திருநெல்வேலி மாவட்டம் – 627401
செல்: 7358866518
Leave a Reply