• By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் பெண் என்றாலும் இதுவும் கூட பாலியல் தான் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இது. சொந்த தாய் தனது 18 வயது நிரம்பாத மகளை ஜெம் வீரமணி போன்ற ஒரு காமவெறியன் பாலியல் செயலுக்கு உட்படுத்தி அதற்கு உடந்தையாக இருந்தாள். இது வழக்காகி அந்த ஜெம் வீரமணி போன்ற நபருடன் வழக்கில் அந்தத் தாயும் சேர்க்கப்பட்டாள். வழக்கு புதிய பாரத நியாயச் சட்டம் பிரிவு 70 படி பதியப்பட்டது. இப்பிரிவு கூட்டு […]
Read More
  • By Magazine
  • |
கே.பி.பதமநாபன் நீரிழிவு நோயிந்த நீணிலத்தில் நிறையத்தான் பேர்க்கிங்கே இருத்தல் உண்மை ; பேரிழிவு இஃதென்றே எண்ண வேண்டாம் ; பெருங்கவலை என்றிதனைக் கொள்ள வேண்டாம் ; சீரியநல் உணவோடே உடற்பயிற்சி சீராக இல்லாத இந்நாள் வாழ்வே பாரிலிந்த பிணிக்கிங்கே காரணம் காண்; படைப்பியற்கை யோடொத்து வாழ்ந்தால் தீரும் ! மாரியின் பின் உழுகின்ற உழவன் நாளும் மண்பானைக் கூழருந்தி விடியல் வேளை சூரியனும் உதிக்கும் முன் தானெழுந்து சுறுசுறுப்பாய் உழைப்பதனால் அவன்தன் மேனி நீரிழிவால் துயர்கண்ட வரலாறில்லை; […]
Read More
மாறுமிந்த மானிடமே!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… சேற்றுக்குள் கால் பதித்து சோற்றுக்கு வழிவகுத்த வீட்டுக்குள் தென்றல் வீசும் என்று காத்திருந்தால் சூறாவளி மழையாய் சுட்டதடா… வட்டிக்கடன் வங்கியின் வேட்டைக்குள் வெட்கித் தலைகுனிந்து வேதனையில் தொங்கிய தலை இன்னும் நிமிரவில்லை… தோள்தட்டிக் கொடுக்கின்றார் கோடிகளை கொள்ளை செய்தார் தமை கையசைத்து வெளிநாடு போவதற்கு வழிசெய்து விடுகின்றார் இந்நாட்டுக்குழைத்தார்க்குப் போட்டு வைத்த விதிபோலே… தனித்தனியாய் சட்டங்கள்… அணியணியாய் அவலங்கள்… பல்லாண்டு சென்றாலும் பலன் கிடைக்குமென்றெண்ணி காத்திருந்த மக்களுக்கு அரசாலே வந்ததெல்லாம் இடிபோன்ற சட்டங்கள்… நெஞ்சங்கள் […]
Read More
தேசிய தன்னார்வ இரத்ததான நாள் – பாராட்டு
  • By Magazine
  • |
தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு, 05.10.2026 அன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் இரத்த மையம், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற விழாவில், அதிக அளவில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து, குருதிக்கொடை வழங்கச்செய்து சிறப்பாகப் பங்களித்த கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம், விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த இயற்பியல் துறைத்தலைவர் மற்றும் தேசிய மாணவர் கடற்படை (NCC) அதிகாரி S/Lt. Dr. ஆ. பிரபுமாறச்சன் அவர்களைப் பாராட்டி […]
Read More
பெண்ணடிமை கொள்ளோம்
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வீரமென்ன வீரமடா பெண்டிரைப் போட்டுதைக்கும் வீரமென்ன வீரமடா தீரன் என்று நீயிருந்தால் திறமையொன்று கொள்ளடா ஆருமின்றி ஆட்டினைப்போல் அடிமையாக்கிப் பெண்களை கூட்டிலிட்டுக் குதறும் கொடிய மிருகம்போல கூடும் புத்தி மாற்றடா தேடும் சொத்து சுகமெல்லாம் சுற்றி நின்று அழுமடா செத்த சவம்மீதிலே மெத்தசுகம் ஏதடா? பெற்ற தாயும் பெண்ணடா சற்று நின்று கேளடா உற்றுணர்ந்து பார்த்தால் உன்னுயிரும் தானடா?
Read More
  • By Magazine
  • |
உதிரும் வண்ணங்கள் – கவிதைநூல் அறிமுகம் – பொன்குமார் “பார்வைக்கும் புரிதலுக்கும் இடையில் எப்போதும் ஒரு இருண்ட வெளி இருக்கிறது. அந்த வெளியில்தான் இக்கவிதைகள் தங்கள் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. விஜயபாரதி வாழ்வின் நுண்ணிய அதிர்வுகளையும் சமூகத்தின் ஆழ்மனக்காயங்களையும் ஒரே நேரத்தில் மொழியாக்குகிறார். அன்றாடத்தின் எளிய காட்சிகள் இங்கு புதிய அர்த்தங்களை உற்பத்தி செய்யும் பன்முகப்பிரதிகளாக மாறுகின்றன. சாதி சாம்பலாக உதிர்கிறது. வன்முறை நிழலாக நகர்கிறது. அன்பு ஒரு ஒளிக்கீற்றாய் இருளைத் துளைக்கிறது. சொல்லப்படாதவற்றின் சத்தத்தையும் மறைக்கப்பட்டவர்களின் வரலாறுகளையும் […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… 8. மனித இனத்தோற்ற வரலாறு 8.1 மனித இனத்தோற்ற கோட்பாடுகள் மனித இனத்தோற்றம் பற்றி உலகியல் ஆய்வாளர்களில் பெரும்பாலோர் ஒத்த கருத்துடன் ஆப்பிரிக்காவில் தான் மனிதஇனம் தோன்றியதாக குறிப்பிடுகின்றனர். இன்னும் பலர் மனிதஇனம் லெமூரியா கண்டம் அல்லது குமரிக்கண்டத்தில் தோன்றியதாகவும், சிலர் ஐரோப்பிய நாட்டில் அட்லாண்டிஸ் எனும் பகுதியில் தோன்றியதாகவும் குறிப்பிடுகின்றனர். இக்கருத்துக்கள் அனைத்தும் வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரும் இன்னும் […]
Read More
  • By Magazine
  • |
ஸ்ரீ காளீஸ்வரர் செ, 12. காக்கைகள் மின்சார கம்பிகளின் மீது அமரும்போது ஏன் ஷாக் அடிப்பதில்லை? இயற்பியல் விதி: Potential Difference (மின்னழுத்த வேறுபாடு) விளக்கம்: மின்சாரம் பாய வேண்டுமானால் இரண்டு புள்ளிகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாடு இருக்க வேண்டும். காக்கை ஒரே கம்பியில் அமரும்போது அதன் இரு கால்களும் ஒரே மின்னழுத்தத்தில் இருக்கும். எனவே மின்னோட்டம் அதன் உடலில் பாயாது. ஆனால் அது தவறுதலாகப் பக்கத்து கம்பியையோ அல்லது கம்பத்தின் இரும்புப் பகுதியையோ தொட்டால், உயிரிழக்கும். […]
Read More
வெண்தீட்டு
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) நம் உடலில் நோய் தொற்று ஏற்படாவண்ணம் பாதுகாக்க பல அம்சங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் பெண்களின் பிறப்புறுப்பு பாதைவழியாக நோய் தொற்று உட்செல்லாமல் பாதுகாக்கும் அம்சமாக அதன் pH மதிப்பு 3.8 முதல் 4.5 ஆக அமைந்துள்ளது. இது அமிலத்தன்மை பொருந்தியதாக இருப்பதால் எளிதில் நோய்தொற்று கிருமிகள் உட்செல்ல முடிவதில்லை. ஆனால் நமது பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள் மற்றும் பலவிதமான செயல்பாடுகள் மற்றும் பெண் பிறப்புறுப்பு சார்ந்த நோயின் காரணமாக யோனியின் […]
Read More
நோட்டு
  • By Magazine
  • |
– பாஸ்கர் கோபால் உப்.. உவுப்.. ஊதிக்கொண்டே ஆவி பறக்கும் கொதிக்கும் சோற்றுப் பானையை வடித்தாள் பூமாலை. தூக்கச் சட்டியில் பழைய சோறையும், சின்ன கிண்ணத்தில் பழைய வெஞ்சன குழம்பையும் எடுத்து வைத்தாள்.  “அம்மா இன்னைக்காச்சும் நோட்டு வாங்கித்தாமா” என்று செல்லமாரி சொல்லுவதை  காதில் வாங்காதவளாய்  வேலைக்கு பரபரப்பாக கிளம்பி கொண்டே இருந்தாள் பூமாலை. “அம்மா… அம்மா”… என்ற குரல் மட்டும் நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒல்லியான மெலிந்த தேகத்தை கசங்கிய சீலையைக் கொண்டு மறைத்திருந்தாள். […]
Read More