கேள்வி பதில்

  • By Magazine
  • |

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

12. காக்கைகள் மின்சார கம்பிகளின் மீது அமரும்போது ஏன் ஷாக் அடிப்பதில்லை?

இயற்பியல் விதி: Potential Difference (மின்னழுத்த வேறுபாடு)

விளக்கம்:

மின்சாரம் பாய வேண்டுமானால் இரண்டு புள்ளிகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாடு இருக்க வேண்டும். காக்கை ஒரே கம்பியில் அமரும்போது அதன் இரு கால்களும் ஒரே மின்னழுத்தத்தில் இருக்கும். எனவே மின்னோட்டம் அதன் உடலில் பாயாது. ஆனால் அது தவறுதலாகப் பக்கத்து கம்பியையோ அல்லது கம்பத்தின் இரும்புப் பகுதியையோ தொட்டால், உயிரிழக்கும். மின்னழுத்த வேறுபாடு ஏற்படாத வரை மின்சாரம் ஒரு முனையில்  இருந்து மறுமுனைக்குப்பாயாது.

13. இருசக்கர வாகனம் 20 கி.மீ வேகத்திற்கு மேல் நிலையாகப் பயணிப்பது ஏன்?

இயற்பியல் விதி: Conservation of Angular Momentum & Gyroscopic Effect.

விளக்கம்:

வேகமாகச் சுழலும் ஒரு சக்கரம் தனது சுழற்சி அச்சின் திசையை மாற்றாமல் இருக்க முயற்சிக்கும் (Gyroscopic stability). சக்கரம் வேகமாகச் சுழலும்போது உருவாகும் கோண உந்தம் (Angular momentum), புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் சாய்வைத் தடுத்து வாகனத்தை நேராக நிறுத்துகிறது. இதனால்தான் மிகவும் குறைவான வேகத்தில் உங்களால் இருசக்கர வாகனத்தை சரியாக இயக்க முடிவதில்லை. குறைந்தபட்சம் 15 கிலோமீட்டர் வேகத்தை அடைந்த பிறகு உங்களால் சரியாக இயக்க முடியும். அதன் பின்பு கால்களை கீழே வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

14. தண்ணீரை ஊற்றினால் நெருப்பு அணைந்து போகிறது! ஏன்?

இயற்பியல் விதி: Heat Absorption & Oxygen Displacement.

விளக்கம்:

அடிப்படையில் வெப்பம் எரிவதற்கு குறைந்தபட்சம் 600 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலை தேவைப்படுகிறது. நீரின் கொதிநிலை வெறும் 100 டிகிரி செல்சியசுதான். இதன் காரணமாகவே முதலில் வெப்பம் எரிவதற்கு தேவையான வெப்பநிலையை குறைக்கின்ற வேலையை சிறப்பாக நீர் செய்கிறது. மேலும், நீரின் Latent heat of vaporization’ மிக அதிகம். இது நெருப்பிலிருந்து பெரும் வெப்பத்தை உறிஞ்சி நீராவியாக மாறுகிறது. இதனால் எரிபொருளின் வெப்பநிலை அதன் ‘Ignition Point’ -க்குக் கீழே குறைகிறது. மேலும், உருவாகும் நீராவி நெருப்பைச் சுற்றிலும் ஒரு போர்வையை உருவாக்கி ஆக்சிஜன் தொடர்பைத் துண்டிக்கிறது.

15. எண்ணெயை ஊற்றினால் நெருப்பு அதிக நேரம் எரிகிறது! ஏன்?

இயற்பியல் விதி: Hydrocarbon Combustion.

விளக்கம்:

எண்ணெய் என்பது ஒரு செறிவூட்டப்பட்ட எரிபொருள். இதில் உள்ள கார்பன் மற்றும் ஹைட்ரஜன் பிணைப்புகள் உடையும்போது அதிகப்படியான ஆற்றல் (Exothermic energy) வெளியாகிறது. இதன் கொதிநிலை நீரை விட அதிகம் என்பதால் இது ஆவியாக நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து எரிகிறது. நீர் செய்த வேலையை தலைகீழாக செய்கிறது .

16. விறகு அடுப்பில் புகை வருகிறது, கேஸ் அடுப்பில் வருவதில்லை! ஏன்?

இயற்பியல் விதி: Complete vs Incomplete Combustion.

விளக்கம்:

விறகு என்பது திண்ம எரிபொருள். இதில் ஆக்சிஜன் சீராகக் கலக்காது, அதனால் கார்பன் துகள்கள் முழுமையாக எரியாமல் புகையாக (Soot) வெளியேறுகின்றன. எரிவாயு (LPG) என்பது முன்கூட்டியே காற்றோடு கலக்கக்கூடிய வாயு என்பதால் அது முழுமையாக எரிந்து நீலநிறச் சுடரைத் தருகிறது. மேலும்  விறகு அடுப்பின் வெப்பநிலை சமையல் எரிவாயு அடுப்பை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும்.

17. கண்ணாடி குப்பி விளக்கில் ஒட்டுமொத்த எண்ணெயும் ஏன் எறிவதில்லை?

இயற்பியல் விதி: Flash Point & Capillary action.

விளக்கம்:

எரிபொருள் திரவ நிலையில் எரியாது, அது ஆவியானால் மட்டுமே எரியும். குப்பிக்குள் இருக்கும் எண்ணெய்க்கு எரியத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. திரியின் முனையில் மட்டுமே எண்ணெய் ஆவியாகி, காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலந்து எரிகிறது. மேலும் அடுத்த வேறுபாட்டின் காரணமாக கீழே இருக்கக்கூடிய எண்ணெய் யானது திரியின் வழியாக மேல் நோக்கி பயணிக்கிறது.

18. வெயில் காலங்களில் மின்சார கட்டணங்கள் அதிகமாக வருவது ஏன்?

இயற்பியல் விதி: Temperature Coefficient of Resistance & Thermodynamics.

விளக்கம்:

மின்கடத்திகளின் வெப்பநிலை உயர்ந்தால் அதன் மின்தடை (Resistance) கூடும். இதனால் மின்கம்பிகளில் ஆற்றல் இழப்பு ஏற்படும். மேலும், வெப்ப இயக்கவியல் விதிகளின்படி, வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது பிரிட்ஜ் மற்றும் ஏசி போன்ற சாதனங்கள் உட்புற வெப்பத்தை வெளியேற்ற அதிக வேலை (Work) செய்ய வேண்டியிருக்கும்.

19. குடைகள் ஏன் பெரும்பாலும் கருப்பு நிறத்தில் உள்ளன?

இயற்பியல் விதி: adiation Absorption.

விளக்கம்:

கருப்பு நிறம் ஒரு ‘Excellent Absorber’. இது சூரியனின் வெப்பக் கதிர்களையும், தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களையும் (UV) முழுமையாகத் தன்னுள் உறிஞ்சிக்கொண்டு உங்களிடம் வராமல் தடுக்கிறது. குடைக்கு அடியில் இருக்கும் காற்றுப் பரிமாற்றம் அந்த வெப்பத்தை உங்களிடம் கடத்தாமல் பாதுகாக்கிறது.

20. இரும்பு கரண்டி சூடாகிறது, மரக்கரண்டி சூடாவதில்லை! ஏன்?

இயற்பியல் விதி: Thermal Conductivity.

விளக்கம்: உலோகங்களில் உள்ள ‘Free electrons’ வெப்ப ஆற்றலை மிக வேகமாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குக் கடத்துகின்றன (Conduction).ஆனால் மரத்தில் இத்தகைய கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லாததால் அது ஒரு வெப்பக் கடத்தாப் பொருளாக (Insulator) செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *