சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர்  பி. விஜயகுமார்

பெண் என்றாலும் இதுவும் கூட பாலியல் தான்

தற்போது உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இது. சொந்த தாய் தனது 18 வயது நிரம்பாத மகளை ஜெம் வீரமணி போன்ற ஒரு காமவெறியன் பாலியல் செயலுக்கு உட்படுத்தி அதற்கு உடந்தையாக இருந்தாள். இது வழக்காகி அந்த ஜெம் வீரமணி போன்ற நபருடன் வழக்கில் அந்தத் தாயும் சேர்க்கப்பட்டாள். வழக்கு புதிய பாரத நியாயச் சட்டம் பிரிவு 70 படி பதியப்பட்டது. இப்பிரிவு கூட்டு (Gang Rape) பற்றி விளக்குகிறது.

பெண்ணின் தாயாரோ நீதிமன்றத்தில் மேற்படி பிரிவு 70 ஆண்களுக்கு மட்டும்தான் வரும், பெண்களுக்கு பொருந்தாது என்று வாதிட்டாள். ஆதலால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என வாதிட்டாள். ஆனால், நீதிமன்றமோ இப்பிரிவில் “Persons” என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. “Persons” என்றால் ஆண்களையும் குறிக்கும், பெண்களையும் குறிக்கும் என அர்த்தம் என்று நீதிமன்றம் சொன்னது. இந்த பிரிவு Gender Neutral என நீதிமன்றம் சொன்னது.

பிறகு தாய் நான் ஒன்றும் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லையே, பிறகு ஏன் என் மீது வழக்கு? என்று வாதிட்டாள். அதற்கு நீதிமன்றம் உனக்கு கூட்டு எண்ணம் (Common Intention) இருந்திருக்கிறதே, அது இவ்வழக்கில் உன்னை சேர்க்க போதுமானது என்றது. மேலும் நீதிமன்றம் ஒரு தெளிவான உதாரணத்தையும் சுட்டிக்காட்டியது. திருடப்போனவன் ஏணி ஏறி வீட்டிற்குள் சென்று திருடினான். அங்கு இன்னொருவன் திருடனுக்கு உதவியாக ஏணியைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே நின்றான். இத்தருணத்தில் வீட்டிற்குள் சென்று திருடியவனுக்கும், வீட்டின் வெளியே நின்று ஏணியைப் பிடித்தவனுக்கும் ஒரே தண்டனை தான் வரும் என்று நீதிமன்றம் சொன்னது. அதே கதைதான் இவ்வழக்கில் உனக்கும் நேர்ந்துள்ளது என்றனர்.

சம்பவம் உண்மையென நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் ஜெம் வீரமணி போன்றவனுக்கும், தாய்க்கும் அதிகபட்சம் சாகும்வரை ஜெயிலில் இருக்கவேண்டும் என்று ஆயுட்கால தண்டனையை வழங்கலாம். இவ்வழக்கில் போக்சோ பிரிவு 6-ம் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் கீழ் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வரை கொடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக “Digital Rape”-க்குரிய சட்டமும் நமது நாட்டில் இயற்ற உள்ளனர். “Digital Rape”-என்றால் உண்மையாகவோ அல்லது நேரிடையாகவோ ஒரு பெண்ணை பாலியலுக்கு உட்படுத்தாமல் அவள் உருவத்தை “Deep Fake”-செயலி மூலம் திரையில் கொண்டுவந்து அவளை 4 பேர் கூட்டு பாலியல் செய்வதாக காண்பிப்பர். பிறகு அதை பல வலைத்தளங்களிலும் பரப்பி பெண்ணை அவமானப்படுத்துவர். லண்டனில் இப்போது இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்தது. இதற்கு உடனே U.K. அரசாங்கம் சட்டம் இயற்றி “Digital Rape”-ம் உண்மையான “Rape”-க்கு சமம் தான் எனக்கூறி அந்த 4 பேருக்கும் ஆயுள்தண்டனை கொடுத்தது. “Digital”-உலகம் வாரத்துக்கு வாரம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு கொடுக்கிறது. எலான்மஸ்க்கின் “ஸ்டார் லிங்க்” கண்டுபிடிப்பு இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் பகையை வளர்த்துவிட்டுள்ளது. “ஸ்டார் லிங்க்” மூலம் உலகத்தில் நீங்கள் எந்த சந்துபொந்துக்குள் இருந்தாலும் உங்களுக்கு “Net”-வசதி கிடைக்கும். இதை இந்தியாவில் பயன்படுத்த எலான் மஸ்க்-க்கும் அம்பானிக்குமிடையே போட்டி நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *