• By Magazine
  • |
 ஓஷோ வார்த்தைகளை உண்மையிலிருந்து பிரிக்க முயற்சியுங்கள். உங்களின் அன்றாட வாழ்க்கையில் யாராவது நான் உன்னை வெறுக்கிறேன் என்று சொன்னால் அந்த வார்த்தையை நம்பி விடாதீர்கள். அது ஒரு கணத்தில் தோன்றியதாக இருக்கலாம். அது ஒரு அம்சமாக இருக்கலாம், வார்த்தைகளோடு செல்லாதீர்கள். இல்லையெனில் நீங்கள் வாழ்க்கைக்கே எதிரியாக விடுவீர்கள். வார்த்தைகளால் நண்பர்களை உருவாக்கிக் கொண்டது போல், வார்த்தைகளால் எதிரிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். வார்த்தைகளுக்காகச் செல்லாதீர்கள். அந்த மனிதனுக்குள் பாருங்கள், கண்களுக்குள் பாருங்கள், முழுமையை உணருங்கள் அது ஒரு கணத்தின் […]
Read More
  • By Magazine
  • |
மானுடம் கண்ட அறிவியல் முன்னேற்றங்களும், தொழில்நுட்பப் பாய்ச்சல்களும் நம்மை விண்வெளியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னொரு புறம் நாம் இன்னும் கற்காலத்து வன்முறை மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்பதையே தற்போதைய போர்களும்,  மோதல்களும் பறைசாற்றுகின்றன. இரக்கம் அற்ற இந்தபோர்களைக் கண்ணுறும்போது நாம் நாம் உரக்கச் சொல்ல வேண்டிய ஒற்றைச் சொல்: “யுத்தம் வேண்டாம்!” யுத்தம் என்பது வெறும் நாடுகளுக்கு இடையிலான மோதல் அல்ல; அது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கனவுகளின் மீது ஊற்றப்படும் ரத்தம். பீரங்கி […]
Read More
பெண்ணடிமை கொள்ளோம்
  • By Magazine
  • |
வீரமென்ன வீரமடா பெண்டிரைப் போட்டுதைக்கும் வீரமென்ன வீரமடா தீரன் என்று நீயிருந்தால் திறமையொன்று கொள்ளடா ஆருமின்றி ஆட்டினைப்போல் அடிமையாக்கிப் பெண்களை கூட்டிலிட்டுக் குதறும் கொடிய மிருகம்போல கூடும் புத்தி மாற்றடா தேடும் சொத்து சுகமெல்லாம் சுற்றி நின்று அழுமடா செத்த சவம்மீதிலே மெத்தசுகம் ஏதடா? பெற்ற தாயும் பெண்ணடா சற்று நின்று கேளடா உற்றுணர்ந்து பார்த்தால் உன்னுயிரும் தானடா? முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…                          
Read More
மறதி-மூளையின் அமைதியான அறிவியல் புரட்சி
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி “நினைவுகள் நம்மை உருவாக்குகின்றன. மறதிகள் நம்மை பாதுகாக்கின்றன.” மரணிப்பு.. வேதனை -துக்கம் – மறதி! நமது நெருங்கிய நண்பர்/ உறவினர் ஒருவர் மரணித்துவிட்டால், நாம் வேதனைப்பட்டு துடிதுடித்துப் போகிறோம். துக்கம் நெஞ்சை அடைக்கிறது. அழுது புலம்புகிறோம். அல்லது ஒரு விபத்தைப் பார்த்தாலோ/ கேள்விப்பட்டாலோ, அதே போல மனம் கலங்குகிறது. ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போகிறோம். ஆனால் நாளாக, நாளாக இது குறைகிறது. அல்லது அதனை கொஞ்சம் கொஞ்சமாக மறக்காது துவங்குகிறோம்.இது ஏன்? […]
Read More
விளம்பரம்
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால் அவன்   கருப்பு கலர் கால் குழாய் அணிந்துக் கொண்டு  தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வெள்ளை நிறமாகத் தோன்றும் இளம் மஞ்சள் நிற பாலிஸ்டர் சர்ட்டுமாக ஒரு வக்கீலின் தோற்றத்தோடும்; அரசியல் கட்சியின் இளம் பிரமுகர் ஒருவரைபோலும்   பேருந்து நிலைய சுரங்க வாசலின்  வலது ஓரமாக  நின்றுக் கொண்டிருப்பதைப் பார்பவர்களுக்கு கல்லூரி விட்டு வரும் மாணவிகளை சைட் அடிப்பதற்காக  நிற்பதாகத்தான் தோன்றும் . பள்ளி மாணவ மாணவிகள் கும்பலாக பேருந்து நிலையத்துக்குள் நுழையும்  சுரங்கப் பாதை அருகே […]
Read More
  • By Magazine
  • |
S. அபுல் கலாம் ஆசாத். நேற்று திங்கள் நகர் சென்றபோது 150 ரூபாய்க்கு ஒரு சிறிய  வேளா மீன் துண்டு வாங்கி வந்தேன். எப்படியும் நமக்கு மீன் குழம்பு இருந்தால்தான் நோன்பு காலங்களில் சகருக்கு சோறு உள்ளே கொஞ்சம் அதிகமாக செல்லும். வாங்கி வந்து நானே தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி அதனை கழுவி பொரி ப்பதற்கானதை  உப்பு, மிளகு, மஞ்சள், மற்றும் பெருஞ்சீரகம்  பொடி சேர்த்து கலந்து வைத்தேன், குழம்பு வைப்பதற்கான மீன் துண்டுகளை தனியாக […]
Read More
கன்னியாகுமரியில் தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச்சங்க 4-ஆம் ஆண்டு விழா
  • By Magazine
  • |
டாக்டர் த. இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு மலரைப் பெற்றுக்கொண்டார் சமூகத்தின் கண்களாகச் செயல்படும் பத்திரிகையாளர்கள், தங்களின் பணி ஓய்வுக்காலத்திலும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நிறுவப்பட்ட ‘தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின்’ நான்காம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா, உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் பிப்ரவரி 24-ஆம் தேதி  நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. பி.ஆர். சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கி, சங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார். […]
Read More
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியவரைபடத்தில் ஒருபுள்ளிபோலத் தென்கோடியில்தீவாகக் காட்சியளிக்கும் குட்டிநாடு, இலங்கை. இதன் மொத்தப் பரப்பளவு 62,610.2 சதுரகிலோமீட்டர் மட்டுமே. தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 சதுரகிலோமீட்டர் ஆகும். தமிழ்நாட்டில் பாதிதான் இலங்கை. இக்குட்டி நாட்டில்தான் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிக்கல்கள் காலந்தோறும் வரிசை கட்டி நிற்கின்றன. ஈழத் தமிழர்களை அரசியல் சார்ந்தும் ஆயுதவழியில் உளவியல் தொல்லைகள் கொடுத்தும் ஒடுக்கும் பணியைச் சிங்களப் பேரினவாத அரசுகள் காலந்தோறும் செய்து வருகின்றன. அந்த வகையில், அண்மைக் காலமாக அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின் மூலம் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் முஸ்லீம் கணவரது இரண்டாவது திருமணம் பதிவு செய்யப்படமாட்டாது! முஸ்லீம் மத வழக்கப்படி கணவர் நான்கு மனைவி வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வரைமுறை உள்ளது. இருப்பினும் தற்போது கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தில் கணவர் இரண்டாவது திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிய செல்லும் போது சார்பதிவாளர் அலுவலகம் மறுத்து விட்டது. முதல் மனைவியை இங்கு கூட்டி வந்து அவர் ஒப்புதல் தந்தால் மட்டுமே இரண்டாவது திருமணம் பதிவு செய்யப்படும் என கணவரையும், […]
Read More
குவாண்டம் தொழில்நுட்பமும் கணினிகளும்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் உலகம் தட்டையானது, பூமியை சூரியன் சுற்றி வருகிறது, நிலவு பூமியை விட பெரிதானது. நட்சத்திரங்கள் நிலையாக இருக்கக்கூடியவை. ஐந்து கிரகங்கள் மட்டுமே இருக்கின்றன என்பன போன்ற பல்வேறு விதமான அனுமானங்கள், அறிவியல் கருத்துக்கள் தோன்றுவதற்கு முன்பு உலகம் எங்கிலும் நிலைத்து இருந்தது. கலிலியோ தொலைநோக்கியை கண்டறிந்ததோடு, பல்வேறு விதமான பௌதிகவியல் கருத்துக்களையும் முன்வைத்தார். அவருடைய காலத்தில் முற்போக்கான பல அறிவியல் கருத்துக்களை முன் வைத்ததற்காகவே பல இன்னல்களையும் அவர் சந்தித்திருக்கிறார். இதெல்லாம் நாம் வரலாற்றின் […]
Read More