புத்திசாலிகளின் பொருட்களின் மீதான காதல்!

புத்திசாலிகளின் பொருட்களின் மீதான காதல்!

  • By Magazine
  • |

– ஓஷோ

ஒருமுறை என் பக்கத்து வீட்டில் ஒரு பேராசிரியர் இருந்தார். வார்த்தைகள் அடங்கிய மனிதர். அவர் ஒரு கார் வாங்கினார். தினமும் காலையில் அதை சுத்தம் செய்வார். அது எப்போதுமே கடையில் இருப்பது போல் புத்தம் புதிதாக, காட்சி¢ பொருளாகவே தானிருக்கும். ஒரு போதும் அவர் அதை சாலைக்கு எடுத்துச் சென்றதேயில்லை. வருடக்கணக்காக நான் அதை கவனித்தேன். தினமும் காலையில் அதைத் துடைத்து சுத்தம் செய்ய அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.

ஒருமுறை நாங்கள் இருவரும் ஒரே இரயில் பெட்டியில் பயணம் செய்தோம். அதனால் நான் கேட்டேன். காரில் ஏதாவது பிரச்சினையா? ஒரு போதும் அதை வெளியில் எடுத்து வருவதேயில்லையே? அது எப்போதும் உங்கள் கார் நிறுத்துமிடத்திலேயே உள்ளதே.

கார், வார்த்தை, தூண்டில் இவை வழிதான் முடிவில்லை. நீங்கள் அவற்றைக் காதலிக்கத் தொடங்கி விட்டால், அதை ஒரு போதும் பயன்படுத்தவே மாட்டீர்கள்.

நான் ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுப் பெண்மணியிடம் மூன்னூறு சேலைகள் இருந்தன. ஆனால் அவள் எப்போதுமே இரண்டே இரண்டு சேலைகளை மட்டுமே பயன்படுத்துவாள். மற்ற சேலைகளை விழாக்களுக்காகப் பாதுகாத்து வைத்திருப்பாள். எப்போது விழாக்கள் வரும்? எனக்குத் தெரிந்தவரை அவளை பதினைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிறப்புத் தருணமோ, விழாக்களோ அவளுக்கு இன்னும் வரவில்லை. இனி வரபோவதும் இல்லை. ஏனெனில் நாளுக்கு நாள் அவளுக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறது. மிக விரைவில் அல்லது கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவள் இறந்து விடுவாள்.

என்ன நடந்தது? சேலைகளை காதலித்தாளா? நீங்கள் பொருட்கள் மேல் காதல் கொள்ள முடியும். மனிதர்கள் மேல் காதல் கொள்வது கடினம். பொருட்களுடன் காதல் கொள்வது எளிது. ஏனெனில் பொருட்கள் இறந்து போனவை. நீங்கள் அவற்றை கையாள முடியும். சேலைகள் ஒரு போதும் சொல்லாது. நீங்கள் எங்களை அணிந்து கொள்ளுங்கள்! நாங்கள் வெளியே வந்து சுற்றிப் பார்க்க விரும்புகிறோம். கார் ஒரு போதும் சொல்லாது. என்னை ஓட்டிச் செல், எனக்கு மிகவும் அலுப்பாயிருக்கிறது.

மனிதர்களுடன் இது கடினம். அவர்கள் வலியுறுத்துவார்கள், கேட்பார்கள், வெளியே செல்ல விரும்புவார்கள். நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய பல ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் மனிதர்களுடன் காதலில் ஈடுபடும் போது அங்கு எப்போதுமே கலவரம் ஏற்படுகிறது. அதனால் புத்திசாலிகள் எப்போதுமே மனிதர்களை காதலிக்க மாட்டார்கள். பொருட்கள் மேல்தான் காதல் வசப்படுவார்கள். கையாள முடியவை. நீங்கள் தான் எப்போதுமே எஜமானாக இருப்பீர்கள். அவை ஒரு போதும் உங்களுக்கு தொந்தரவு கொடுக்காது அல்லது நீங்கள் மனிதனைக் காதலித்தால் உடனே அவனை ஒரு பொருளாக உயிரேயில்லாத பொருளாக மாற்றி விட முயற்சிப்பீர்கள். மனைவி ஒரு இறந்த பொருள், கணவன் ஒரு இறந்த பொருள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சித்ரவதை செய்கின்றனர். ஏன் அவர்கள் ஒருவரையொருவர் சித்ரவதை செய்ய வேண்டும்? அதில் என்ன இருக்கிறது? சித்ரவதையின் மூலம் அடுத்தவரை இறந்து போனதாக மாற்றி விடுவீர்கள். மற்றவர் ஒரு பொருளாக கையாளப்பட கூடியதாக ஆகி விடுகிறார். பிறகு அவர்கள் கவலைப்படுவதில்லை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *