மூலச்சலில் இலவச கண்மருத்துவ முகாம்

மூலச்சலில் இலவச கண்மருத்துவ முகாம்

  • By Magazine
  • |

மூலச்சல் பவர் டிரஸ்ட் இந்தியா மற்றும் மார்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் மூலச்சல் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடந்தது. முகாமை இராஜேந்திரா மருத்துவமனை தலைமை டாக்டர்.த.இராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்மருத்துவர் கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்நோய் சம்மந்தமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *