கமல. அருள் குமார்
இளகும் மனம்
சிலருக்கு – அன்பை
விலக்கும் குணம்
சிலருக்கு…
பழகும் மனம்
சிலருக்கு – நட்பை
பகைக்கும் குணம்
சிலருக்கு…
உதவும் மனம்
சிலருக்கு – உறவை
உடைக்கும் குணம்
சிலருக்கு…
உழைக்கும் மனம்
சிலருக்கு – தீங்கு
இழைக்கும் குணம்
சிலருக்கு…
திறக்கும் மனம்
சிலருக்கு – கதவை
அடைக்கும் குணம்
சிலருக்கு…
இணைக்கும் மனம்
சிலருக்கு – காதலைப்
பிரிக்கும் குணம்
சிலருக்கு…
காக்கும் மனம்
சிலருக்கு – உயிரைப்
போக்கும் குணம்
சிலருக்கு…
வாழ்த்தும் மனம்
சிலருக்கு – வாழ்வை
வசைபாடும் குணம்
சிலருக்கு…
எத்தனை எத்தனை
முகங்கள் – எல்லாம்
வளர்ப்பின் அகங்கள்…
Leave a Reply