– இரா.அர்ச்சனாதேவி
ஆமாத்தியன்விளை. ஈத்தாமொழி அஞ்சல்.
அடுத்தடுத்து
வாடகை வீட்டிற்குச்
சென்ற போதும்
வசதியில்லா குளியலறை,
இடிந்த கழிப்பறை,
தொந்தரவு தரும் பக்கத்து வீடு,
வீட்டைச்சுற்றி வரும் வீட்டுக்காரர்
“இது உங்கள் வீடல்ல”
அழுத்தமாய் சொல்லும்… மனது
கனவு நனவாகிய போது….
என் வீடு என்ற நினைப்பே சுகம்!
போனது பல வருடங்கள்,
என் வீடு அம்மா வீடானது,
நான் புகுந்தது மாமியார் வீடானது,
மீண்டும் ஒரு தேடல்,
வந்தது மனதோடு மழைச்சாரல்,
எங்கள் உழைப்பில் உருவாகிய,
ஒரு கூடு சொந்த வீடு!
வீட்டு முற்றத்தில் ஒரு பிச்சி …
சில பல பழ மரங்கள்,
ஆசையோடு செடி கொடிகள்,
இந்த வாழ்க்கைக்குச் சொந்தமாய்
ஒரு வீடு,
வீடுகள் சுவர்களால் மட்டும்
ஆனவையா என்ன?
அருமையாய்… அன்னியோன்யமாய் …..
ஆத்மார்த்தமாய்…..
பிச்சி மலர்ந்தது. வாசம் பரவியது,
நேசம் வளர்ந்தது,
Leave a Reply