பற்காரை பொய் சொல்லுவதில்லை
  • By Magazine
  • |
(ஆதிமக்களின் உணவைப் பேசும் பற்காரை) – முனைவர் மோகனா, பழனி நண்பர்களே. நீங்கள் இன்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால்  யார் பதில் சொல்லுவார்கள்..உடனே சொல்லி விடலாம், நீங்கள் சொல்லலாம். நீங்கள்  சொல்லாவிடில், உங்களின் வயிறு அல்லது குடலுக்குள் உள்ள பொருட்கள் நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என்று சாப்பிட்ட உணவு பற்றிய பேட்டியை /பட்டியலைத் தரலாம். அதனை நாம் புரிந்து கொள்ள முடியும். சாப்பிட்ட உணவைக் கூறும் பற்காரை ஆனால் போன வாரம் வியாழக்கிழமை என்ன […]
Read More
பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு
  • By Magazine
  • |
மக்கள் சமுதாயத்தில் கருத்துப் பரிமாற்றத்துக்கு நூல்களும் செய்திப் பரிமாற்றத்துக்கு நாளிதழ்களும் துணை புரிகின்றன. வானொலி, தொலைக்காட்சி, மடிக்கணிணி, கைபேசி போன்ற ஊடகச் சாதனங்கள் மிகுதியாக இருந்தாலும், செய்தி பத்திரிக்கைகளின் பரவலாக வளர்ச்சியை அவை தடுக்க முடியவில்லை. ஏராளமான நாட்டு நடப்புச் செய்திகளையும், வணிகம், தொழில் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் அரசியல் கருத்துக்களையும் நாளிதழ் தருவதால் அவற்றின் முக்கியத்துவம் குறையவில்லை. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, யுனைட்டெட் பிரஸ் போன்ற பெரும் செய்தி நிறுவனங்கள் கொடுக்கும் செய்திகளைத் […]
Read More
குமரிமாவட்ட பாரம்பரிய  மருத்துவம்’- ஒரு பார்வை
  • By Magazine
  • |
இந்தியாவின் தென் எல்லையாக விளங்கும் கன்னியாகுமரி பல கலைகள் சிறப்புற்று காணப்படும் மாவட்டமாகும். இங்கு மன்னர்கள் ஆட்சி செலுத்தி உள்ளனர். நீர்வளம், நிலவளம் மட்டுமின்றி தொன்று தொட்டே கல்வி வளமும், கலை வளமும் மிக்க பகுதியாகவே விளங்கிய இம்மாவட்டம், மருத்துவகலையில் ஓர் ஒப்பற்ற இடத்தைப் பெற்றுள்ளது. தொன்றுதொட்டே குருமுறை கல்வியாக மருத்துவம், களரி போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 7- ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களால் இங்கு […]
Read More
தை பிறந்தால் வழிபிறக்கும்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனை கட்டி போரடித்த மருத நிலம் எங்க நிலம்…” என்றப் பாடலை தமிழ்மண்ணில் எங்கு வில்லிசை நடந்தாலும் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் தலை நிமிர்ந்து நின்றது நம்நாடு. உணவில் நாவுக்கு சுவை பார்த்து உண்டு மகிழ்ந்தவன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும், சுட்டும், வெறுமையாய் அவித்தும் உண்டு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான வாறிளகி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தும்மிக்காலம் பற்றி அறிவோம். “ஈடழியும் பித்துக்காய் அதன் பின்பக்கம் தும்மி என்ற வர்மம்”.                                                                                – வர்ம குருநூல் “வளமான வன்னெல்லு ஒட்டையின் கீழ் தும்மிக்காலம்”. – வர்ம அகஸ்தியசாரி “பண்பான தும்மியதன் காலம் கேள் தொடரான பித்துக்காய் பிறமேதானே”.                                                                                                – கால வர்மநூல் மேலும், போமப்பா காறயஸ்தி பூணெல்லின் கீழ்                                 […]
Read More
புத்தாண்டு  வாழ்த்துக்கள்!
  • By Magazine
  • |
உலகெலாம் ஏத்தும் இயற்கை அன்னையின் இதயத்தில் வாழும் அனைத்துயிரிகளும் இனிமையுற்று, இன்புற்று வாழ புதியதென்றலின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…                 ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஏழைப்பணக்காரன் என்றாகியிருக்கின்றது இவ்வுலகம்.  உள்ளார் இல்லாரை உருக்குலைக்கும் இன்னல் நிலை இந்நிலத்தில் இல்லாமல் ஆகட்டும்.                 சாதி-மதம், இனம்-நிறம், நாடு-தேசம் எனப் பகுத்துப் பேசும் பகுத்தறிவில்லா பண்புகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் எனும் மனிதநேயம் மலரட்டும்…                 அறியாமைச் சுழிக்குள்ளே அறிவுக்கொவ்வா கதை சொல்லி மக்களை மடையராக்கும் மகத்தான பேதைமை ஒழியட்டும்…                 சொல்லும் […]
Read More
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
  • By Magazine
  • |
பூ.வ. தமிழ்க்கனல் அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார். சிறைத்தண்டனை                 சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.                 […]
Read More
குலியானாவிடமிருந்து ஒரு கடிதம்
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: அம்ருதா ப்ரீதம் தமிழில்: நாணற்காடன் கிளைகளெங்கும் இலைகள் நிரம்பியிருந்தன. ஆனால் அவற்றில் பூக்கள் எதுவுமில்லை. நான் தினமும் இலைகளின் முகத்தைப் பார்ப்பேன். சம்பா எப்போது பூக்கும் என்று யோசிப்பேன். ‘எவ்வளவு பெரிய பூந்தொட்டியில் வைத்தாலும் சம்பா பூக்காது. இந்தச் செடியின் வேர்களுக்கு நிலத்து மண் தான் தேவை’ என்று ஒரு தோட்டக்காரர் என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் பூந்தொட்டியிலிருந்து செடியை எடுத்து நிலத்தில் நட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெண் என்னைச் சந்திக்க வந்தாள். “நான் உன்னைப் பல […]
Read More
எம்.ஜி.ஆர் படம் பார்த்து சிலம்பம் கற்றுக்  கொண்டேன்
  • By Magazine
  • |
85 வயது சிலம்ப ஆசான் இன்பதாஸ் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் உள்ள சிலம்ப சண்டை காட்சிகளை பார்த்த வியந்து சிலம்பம் கற்றுக் கொண்டேன் என்கிறார் 85 வயதான சிலம்ப ஆசான் இன்பதாஸ் அவர்கள. புதிய தென்றலுக்காக மூலச்சலில் உள்ள சிலம்ப பயிற்சி களத்தில் அவரை சந்தித்தோம். அப்போது அவர் தனது சிலம்பாட்ட அனுபவங்களை புதிய தென்றலுக்காக பகிர்ந்து கொண்டார். நான் 1963- ஆம் ஆண்டு முதல் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறேன். நான் சிறுவயதில் எம்ஜிஆர் நடித்த தாயை […]
Read More
மூலரோக நிவாரணி “துத்தி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் துத்திமூலநோய்களுக்கு  மிகவும் பிரபலமானது. இது 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. சாலையோரங்களில் அதிகமாக காணப்படும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் வளர்கிறது.  மேலும், இலங்கை, மலேசியா, அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.                 இலை வெல்வெட் போன்று மென்மையாக, சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இதயவடிவில் காணப்படும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் கம்மல் போன்று காணப்படும்.                 துத்தியின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. தாவரவியல் பெயர் […]
Read More