கவிதை
  • By Magazine
  • |
யானையொன்றை விழுங்குவதுபோல் நான் கண்ட கனவு விடிகாலையின் பாயில் சுருட்ட முடியாமலிருந்தது. யானையாகக் கண்டது எனது காலத்தையா கற்பனையையா என்னையா நானொரு கோயில் யானையிடம் நாலைந்து நாள் பேசிப்பார்த்தேன் யானை என்னிடம் பேசிய மொழி தமிழைப்போல் எனக்குப் புரிந்தது சாலையோரத்தில் வாகனங்களின் சக்கரங்கள் காறித்துப்பும் மழை வெளியில் எனது முகம் போய் அலைகிறது. யானை போல்  ஊர்திகள் சாலையை நிரப்புகின்றன எதுவும் சொல்வதற்கில்லை அனாதைக் கனவாய் திசைகளில் அடித்துச் செல்லப்படுகிறது பெருஞ்செவிகள். ஒருமுறை வானவில்லில் எனது நிறத்தையும் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
கரிசனையோடு உச்சுகொட்டும் சிலரும் கண்டும் காணாமல் பலருமாயிருக்கும் ஒரு மத்தியான வெய்யிலின் உக்கிரத்தில் மாரெலும்பு தெந்நிய ரோட்டோரச் சிறுமி நெருப்பைக் கடப்பதுபோல ரோட்டைக் கடக்கிறாள் பட்டுப்போன மர இலைகளுக்கு நன்றியோடு நானெழுதிக்கொண்டிருக்கும் இந்த கவிதை என்னை அருவருப்பாய் பார்க்கிறது. – டாக்டர் கி. பாபு
Read More
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி குவளையில் மதுவென மரணத்தை நிரப்பியிருக்கிறது காலம். பருகுகிறான் நீரோ சோடாவோ தேவைக்கு சேர்க்கப்படாத அதன் கசப்பு தொண்டையை இறுக்குகிறது விழிகளை மூடி பின் திறந்து உச்சுக்கொட்டியபடி துரோகத்தைச் சுவைக்கும் அவன் கண்களால் ஒருமுறை யாவரையும் அளக்கிறான் உலர்ந்த சொற்களோடு நான் இந்தக் கவிதையுடன் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.
Read More