– சிவ. விஜயபாரதி
குவளையில் மதுவென
மரணத்தை
நிரப்பியிருக்கிறது
காலம்.
பருகுகிறான்
நீரோ சோடாவோ
தேவைக்கு சேர்க்கப்படாத
அதன் கசப்பு
தொண்டையை இறுக்குகிறது
விழிகளை மூடி
பின் திறந்து
உச்சுக்கொட்டியபடி
துரோகத்தைச் சுவைக்கும் அவன்
கண்களால் ஒருமுறை
யாவரையும் அளக்கிறான்
உலர்ந்த சொற்களோடு
நான் இந்தக் கவிதையுடன்
மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.
Leave a Reply