கேள்வி பதில்

கேள்வி பதில்

  • By Magazine
  • |

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

1. பழைய குண்டு பல்புகள் எரியும்போது வெப்பமாக இருக்கிறது! ஆனால் எல்.இ.டி விளக்குகள் சூடாக இருப்பதில்லையே! ஏன்?

இயற்பியல் விதி: Black-body Radiation vs. Electroluminescence.

விளக்கம்: குண்டு பல்புகளில் உள்ள டங்ஸ்டன் இழை மிக அதிக மின்தடை (Resistance) கொண்டது. மின்சாரம் பாயும்போது பி = I^2Rt என்ற விதியின்படி அதிக வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பம் சுமார் 2500 கு சி எட்டும்போதுதான் ஒளி கிடைக்கிறது. இதனால் வெப்ப வெளியேற்றமும் மிகவும் அதிகமாக இருக்கும்

ஆனால், எல்.இ.டி (LED) என்பது ஒரு குறை கடத்தி அடிப்படையிலான மின்விளக்கு ஆகும். இதில் எலக்ட்ரான்கள் ‘Electron holes’-உடன் இணையும்போது ஆற்றலை நேரடியாக ஃபோட்டான்களாக (Photons) வெளியிடுகின்றன. இங்கு வெப்பம் பெரிதாக வெளியேறுவது கிடையாது. எனவே சாதாரண மின் விளக்குகளோடு ஒப்பிடும் போது இதில் வெப்பம் குறைவாகவே உள்ளே இருக்கிறது.

2. பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிக்கின்றன! சில நேரம் வேரோடு சாய்கின்றன! ஏன்?

இயற்பியல் விதி: Torque & Elastic Limit.

விளக்கம்: காற்றின் விசை மரத்தின் மீது ஒரு திருப்புவிசையை (Torque) ஏற்படுத்துகிறது.

முறிதல்: மரத்தின் தண்டுப்பகுதி அதன் ‘Elastic Limit’-ஐ தாண்டி வளையும்போது முறிந்துவிடும். அதாவது மரத்தின் கிளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளைந்து கொடுக்காது.

சாய்தல்: மரம் உயரமாக இருந்தால் அதன் ‘Lever arm’ நீளம் அதிகம், அதனால் அதிக திருப்புவிசை உருவாகும். வேர் மற்றும் மண்ணுக்கு இடையிலான நிலை உராய்வு (Static friction) மற்றும் பிணைப்பு விசையை விட இந்த விசை அதிகமாகும்போது மரம் வேரோடு சாய்கிறது. அதேபோல மரத்தில் இருக்கக்கூடிய அடர்த்தியான கிளைகளும் காற்றின் ஓட்டத்தை மட்டுப்படுத்தி சில நேரங்களில் மரம் வேரோடு சரிவதற்கு காரணமாக அமைகிறது.

3. லாரிகளுக்கு பின்னால் மஞ்சள் (அ) சிவப்பு நிறத்தில் மட்டும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள்? வேறு நிறத்தை பயன்படுத்த கூடாதா?

இயற்பியல் விதி: Rayleigh Scattering.

விளக்கம்: ஒளியின் சிதறல் அதன் அலைநீளத்திற்கு (ambda)  எதிர்விகிதத்தில் இருக்கும் . ஊதா, நீலம் போன்ற நிறங்களுக்கு அலைநீளம் குறைவு என்பதால் அவை காற்றில் எளிதில் சிதறிவிடும். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களுக்கு அலைநீளம் அதிகம். எனவே இவை மூடுபனி அல்லது மழையிலும் சிதறாமல் நீண்ட தூரம் பயணித்து நம் கண்ணை அடையும். பொதுவாக அவசரகால வாகனங்களில் சிவப்பு நிறத்தை பயன்படுத்துகிறார்கள். பிரதிபலிப்பான்களுக்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்துகிறார்கள்.

4. 720 ஜீ, 4ளீ, 2ளீ, 8ளீ – இவற்றில் என்ன தான் வித்தியாசம்?

இயற்பியல் விதி: Pixel Density & Resolution.

விளக்கம்: இவை திரையில் உள்ள பிக்சல்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. 4K என்பது கிடையாக 3840 பிக்சல்களையும், செங்குத்தாக 2160 பிக்சல்களையும் கொண்டது. பிக்சல்கள் அதிகரிக்க அதிகரிக்க ‘Spatial resolution’ கூடுகிறது. அதாவது, ஒரு சிறிய பரப்பிற்குள் அதிகப்படியான தகவல்கள் (Data)அடர்த்தியாக இருப்பதால் பிம்பம் மிகவும் துல்லியமாகத் தெரிகிறது. அதாவது, குறைந்த பரப்பில் அதிகப்படியான ஒளி வழங்கும் led கள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் படங்களை  மிகவும் துல்லியமாக பார்க்க முடியும்.

5. டியூப் லைட்டை உடைக்கும் போது, உள்ளிலிருந்து வெள்ளை புகை வருகிறது! அதில் என்ன உள்ளது?

இயற்பியல் விதி: Gas-discharge & Fluorescence..விளக்கம்: டியூப்லைட்டின் உட்புறம் Phosphor’ என்ற தூள் பூசப்பட்டிருக்கும். இது புற ஊதாக்கதிர்களைப் புலப்படும் ஒளியாக மாற்றும். டியூப்லைட் ஒரு பகுதி வெற்றிடமாக (Partial vacuum) இருப்பதால், அதை உடைக்கும்போது அழுத்த வேறுபாட்டின் காரணமாக வெளிக்காற்று அதிவேகமாக உள்ளே பாய்கிறது. அப்போது உள்ளே இருந்த பாஸ்பர் துகள்கள் காற்றோடு கலந்து சிதறுவதுதான் வெள்ளை புகையாகத் தெரிகிறது. இதில் நச்சுத்தன்மையுள்ள பாதரச ஆவியும் (Mercury vapor) கலந்திருக்கும். எனவே இதை உடைப்பதை முயற்சித்துப் பார்க்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *