விஜயபாரதி
விளக்கு அணைக்கப்பட்ட அறைக்குள்
பூச்சிகளின் சத்தங்கள் கேட்காதபடிக்கு
இரைச்சலூடே சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி
சாளரத்தின் வழி வரும்
ஈரக்காற்று சொல்கிறது
எங்கோ பெய்யும் மழையை
மீன்கள் பூக்காது
அடர் இருளைப்
பூசியிருக்கிற வானம்
இங்கேயும் பொழியலாம்
புழுக்கத்துடன் நகர்கின்ற இவ்விரவில் பூனையொன்று பாத்திரத்தை தள்ளி
பாலைச் சப்புக்கொட்டியபடி தாவுகிறது
அடுத்தடுத்தாய் உதிர்கிறது பூ
ஆயிரம் களிறுகள்
நெஞ்சில் மிதிக்கும் இரணத்துடன்
அழுது கொண்டிருக்கிறது செடி
புரண்டு புரண்டு
நீண்டு கொண்டே இருக்கிறது.
செத்த மூங்கில்
உயிர்த்தெழுகிறது
புல்லாங்குழல்…
Leave a Reply