ஆவாரம் பூவின் மகிமை

ஆவாரம் பூவின் மகிமை

  • By Magazine
  • |

கஸ்தூரிபா   ஜாண்ஸன்

ஆவாரம் பூ என்பது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் ஒரு மருத்துவ குணமுள்ள செடியின் பூ. இதன் அறிவியல் பெயர் அல்லது தாவரவியல் பெயர் : Cassia auriculala . இதன் தமிழ்பெயர் ஆவாரம் பூ. ஆங்கிலத்தில்  Tanners cassia இதன் குடும்பம் Caesalapiniaceaise  (செஸ்ஸால்பினேஸியே) என்பது ஆகும்.

இதில் அடங்கியுள்ள வேதிப் பொருள்கள்

ஆரிக்குலா கேசடினின், கோரோ டென்சிடின் போன்றவை. பட்டையில் அதிக அளவு டானின் என்னும் சத்து உள்ளது.

பயன்படும் பாகங்கள்

இதன் இலை, பூ, விதைகள், பட்டை, வேர் போன்ற பாகங்களை தனிதனியாகவோ, ஒன்றாகவோ சேர்த்து கசாயம் செய்து பயன்படுத்தலாம்.

இலைகளின் பயன்கள்

இலைகள், பட்டைகள், பூக்கள் போன்றவற்றை நசுக்கி காய்த்து குடித்து வர நீரிழிவு நோய்கள், ஆறாத புண்கள், எலும்புக்கு பலம் போன்றவை கிடைக்கும். இலை மற்றும் பூவை பச்சையாக அரைத்து தேய்த்து குளிக்க வெப்பம் தணிந்து நோய்கள் குறையும்.

அம்மை நோய் உள்ளவர்களுக்கு இலைகளை அரைத்து தேய்த்து குளிக்க நமைச்சல் குறையும். இதன் பட்டையை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் போன்றவை குறையும். பற்கள் பலப்படும்.

இலைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர கருமைநிறம் உண்டாகும். சொறி, சிரங்குகளுக்கு இதன் இலைகளை அரைத்து தேய்த்தால் நல்ல பலன் உண்டாகும்.

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பது பழமொழி. இதயத்தில் ஆரம்பத்தில் ஏற்படும் ஓட்டையை துவக்க நிலையில் இருந்தால் அதை சரி பண்ணும் தன்மை கொண்டது.

சித்த மருத்துவத்தில் ஆவாரம் பூ முக்கிய மூலிகையாக கருதப்படுகிறது. சில இடங்களிலும், சாலை ஓரங்களிலும், தோட்டங்களிலும் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூக்களுடன் காணப்படுகிறது. பயறு குடும்பத்தை சார்ந்தது. ஆவாரம் பூவை தொடர்ந்து பயன்படுத்தி வர உடல் பொன்னிறமாக மாறும் தன்மை கொண்டது. நீர் எரிச்சல், உடல்நோய்கள் போன்றவைகள் சரியாகும்.

உடல் உஷ்ணம், மயக்கம், மூச்சுத்திணறல் போன்றவை குணமாகும். இலை, பூ, காய் போன்றவைகளை போட்டு வேகவைத்து தொடர்ந்து நீரை குடித்து வர சர்க்கரை நோய் சரியாகும். கனத்த உடல் மெலியும். இலை, பூ அரைத்து தேய்த்துக் குளிக்க சருமநோய்கள் குணமாகும். பூவை அரைத்து கொப்பளிக்க பற்கள் பலப்படும். உடலுக்கு குளிர்ச்சி தரும் முக்கிய மூலிகையாக கருதப்படுகிறது. தினம் 5 ஆவாரம் பூ சாப்பிடும் போது சர்க்கரை நோய் குறையும். இதன் விதைகளை பசும்பாலில் அரைத்துக் கொடுத்தால் கக்குவான் இருமல் குணமாகும். பொண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையை சரிபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவாரம் பூ, பட்டை தொடர்ந்து சாப்பிட உடல் உஷ்ணம் போன்ற நோய்கள் சரியாகும்.

ஆவாரம் பூ சர்பத் செய்யும் விதம்

உலர்ந்த ஆவாரம் பூ            – 1 கப்

தண்ணீர்                                – 4 கப்

பனங்கற்கண்டு                    – 1 முதல் 1 ½ கப்

எலுமிச்சைசாறு                   – 2 மேஜைக்கரண்டி வரை

நன்னாரி சாறு                      – 2 மேஜை கரண்டி

செய்முறை

ஆவாரம் பூவை சுத்தமாகக் கழுவவும். 4 கப் தண்ணீரில் 15 நிமிடம் கொதிக்க வைக்கவும். பாதி அளவாக குறைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு சேர்த்து கரைய விடவும். ஆறிய பின் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும். இதனால் உடல்சூடு, சிறுநீர் எரிச்சல், உடல் சோர்வு, வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சோர்வு போன்றவை சரியாகும்.

முடிக்கு பயன்படும் ஹேர்பேக்

ஆவாரம் பூ பொடி, கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி, தேங்காய் பால் தேவைக்கு இவற்றை 30 நிமிடம் தலைக்கு தேய்த்து கழுவ பொடுகு, தலைச்சூடு போன்றவையும் சரியாகும். முடியும் மென்மையாகும். ஒரு நாளுக்கு ஒன்று முதல் 2 தேக்கரண்டி தலைக்கு தேய்த்து கழுவலாம்.

ஆவாரம் பொடி வீட்டில் செய்யத் தேவையானவை

ஆவாரம் பூ                   – 500 கிராம்

புதிய பூக்கள்               – 5 அல்லது நாட்கள் உலர்த்தவும். நிழலில் உலர்ந்த பின் மிக்ஸியில் பொடித்து சல்லடையில் சலிக்கவும். காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும்.

சிறிது ஆவாரம் பூ பொடி, வெதுவெதுப்பான நீர், பால் சிறிது, பனங்கற்கண்டு கலந்து பயன்படுத்தவும்.

முகப்பூச்சுக்கு

ஒரு தேக்கரண்டி பொடியில் தயிர் அல்லது ரோஜா நீர் சேர்த்து கலக்கி முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவவும்.

சித்தமருத்துவத்தில் ஆவாரம் பூ

ஆவாரம் பூ 1 தேக்கரண்டி, அதன் இலைகள் 5 தேக்கரண்டி, வெந்தயம் ¼, தண்ணீர் 200 மில்லி காய்ச்சி 100 மில்லியாக வற்றவைத்து வடிகட்டி அருந்தவும்.

தவிர்க்க வேண்டியவர்கள் கர்ப்பிணிகள், இரத்த அழுத்தம் குறைந்தவர்கள், 5 வயதுக்குட்ட குழந்தைகள் இவற்றை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *