சமூகம் தான் மனோவசியம் செய்கிறது

  • By Magazine
  • |

ஓஷோ

இதைத்தான் உங்கள் சமூகம் உங்களுக்குப் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறது. ஆனால் மிகவும் இயல்பாக மென்மையாகச் செய்து வருகிறது. உங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, இது சரி, அது தவறு என்று உங்களைக் கட்டுப்படுத்துகிறது. இதை திரும்ப திரும்பச் சொல்லும் பொழுது, உங்களை அது மனோவசியம் செய்கிறது. உங்களை அறியாமலேயே அதற்குக் கட்டுப்படுகிறீர்கள். தவறாக செய்யும் பொழுது தண்டிக்கப்படுகறீர்கள். எல்லாம் உங்கள் நன்மைக்கே என்று பாடம் வேறு புகட்டப்படுகிறது.

இந்த முறையில் தான், உங்கள் சமூகம் தன் மின்கருவியை உங்கள் மூளைக்குள் பதித்து வைத்துள்ளது. உங்கள் சமூகம், நீங்கள் காய்கறி உணவைத்தான் சாப்பிட வேண்டுமென்று கருதினால், உங்களால் மாமிசம் சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு உங்கள் சமூகம் உங்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஆகவே நீங்கள் மாமிசத்தை பார்த்ததுமே வாந்தி எடுக்கும் உணர்வு தோன்றும். உங்கள் மனம் அந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நீங்களாக வாந்தி எடுக்க முயலவில்லை. உங்களுடைய சமூகத்தின் கட்டுப்பாடுதான், அந்த வாந்தியை உண்டு பண்ணுகிறது.

ஆகவே, ஒரு சமூகத்தில் வாழ்ந்தவர்கள், வேறு பழக்கத்தில் உள்ள சமூகத்தில் வாழ கஷ்டப்படுகிறார்கள். இதைப் போலத்தான் வேற்று நாட்டில் வாழ்வதும், அவர்களுடைய கலாச்சாரத்தை எளிதில் நம்மோடு சேர்த்துக் கொள்ள முடியாது. இதைப் போலத்தான் ஒழுக்க விதிகளும், எல்லா விதிகளும், சமூகம் ஏற்படுத்தியவை தான். ஆகவே ஒருவன் உண்மையை நோக்கி, சுதந்திரத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் பொழுது, முதலில் அவன் சமூக சட்ட திட்டங்களைத்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *