ஆசனவாய் வெடிப்பு

ஆசனவாய் வெடிப்பு

  • By Magazine
  • |

டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)

ஆசனவாயின் உட்புறம் சிறிய கீறல் ஏற்பட்டு தாங்க முடியாத வலியையும், அதிலிருந்து சில சொட்டுகள் இரத்தம் கசிந்து துன்பத்தை கொடுக்கும் ஒரு வியாதி தான் ஆசனவாய் வெடிப்பு என்பது.

இந்நோயில் பொதுவாக 20 வயது முதல் 40 வயதுள்ள நபர்கள், குறிப்பாக அதிக அளவில் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலத்தில் இந்நோயை  Fissure in Ano என்றழைப்பார்கள்.

ஆசனவாய் பகுதியின் உட்புறம் சற்று மேலாக உள் ஆசன சுருக்கு தசை ((Internal anal sphincter  muscle)) உள்ளது. இது தானியங்கி நரம்பு மண்டலத்தில் இயங்க கூடியது. நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

ஆசனவாய் வெளிப்புறமாக கீழ்பகுதியில் இருப்பது. வெளி ஆசன சுருக்குதசை (External anal sphincter  muscle) இதனை நம்மால் கட்டுப்படுத்த இயலும்.

ஆசனவாய் மேல்பகுதியிலுள்ள உள் ஆசன சுருக்குதசை பகுதியில் (Internal anal sphincter  muscle) வறண்ட மலம் அதிக அளவில் வேகமாக உரசி கொண்டு வரும் போது கீறல் உண்டாகி விடுகிறது. இதனையே ஆசனவாய் வெடிப்பு (Fissure in Ano) என்கிறோம்.

ஆசனவாய் வெடிப்பு வருவதற்கான காரணங்கள்

  • மலச்சிக்கல் மற்றும் முக்கி மலம் கழிப்பது.
  • மலத்தை அடக்கி வைப்பதால், மலத்திலுள்ள ஈரத்தன்மை உறிஞ்சப்பட்டு வறட்சி அடைகிறது. மேலும் அதிக அளவில் மலம் சேர்வதால், மலம் கழிக்கும் போது தொடர் உராய்வு ஏற்பட்டு ஆசனவாய் வெடிப்பு ஏற்படுகிறது.
  • அடிக்கடி மலம் கழிப்பது மற்றும் நாட்பட்ட கழிச்சல் வியாதி.
  • கர்ப்பிணிக்கு மற்றும் குழந்தை பிறக்கும் போதும் உண்டாகலாம்.
  • எய்ட்ஸ் நோயாளர்கள் (பிமிக்ஷி), சய நோயாளர்கள் (ஜிஙி), தைராய்டு நோயாளர்களுக்கும் ஆசனவாய் வெடிப்பு உண்டாகலாம்.

ஆசனவாய் வெடிப்பு நோயின் குறிகுணங்கள்

  • மலம் கழிக்கும் போதும் மலம் கழித்த பின்னும் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை தாங்க முடியாத வலி காணப்படும். இதனால் மலம் கழிப்பதற்கு பயம் உண்டாகும்.
  • வலியின் தன்மையானது எரிச்சல் மற்றும் வெட்டுபட்டது போன்ற வலியாக காணப்படும்.
  • மலத்துடன் சிவப்புநிற இரத்தக்கோடுகள் காணப்படலாம். மலம் கழித்த பின் இரத்தம் சொட்டு சொட்டாக பாயலாம்.
  • சிலருக்கு வலி முதுகுபகுதி, புட்டிபகுதி மற்றும் தொடை பகுதியில் பரவலாம்.
  • நாட்பட்ட ஆசனவாய் வெடிப்பு நோயால் சிறிய தசை நீட்சி காணப்படலாம்.

ஆசனவாய் வெடிப்பு நோய்க்கும், மூலநோய்க்கும் உள்ள வேறுபாடுகள்

வரிசை எண்             ஆசனவாய் வெடிப்பு நோய்                       மூலநோய்

1.             ஆசனவாய் பகுதியில் கீறல்கள்                இரத்த நாளங்கள் வீங்கி

    உண்டாகி வருவது.                                             உண்டாவது.

2.          தாங்கமுடியாத வலி மலம் கழிக்கும்        அதிக அளவில் வலி 

  போதும் கழித்த பின்னும் இருக்கும்.             இருப்பதில்லை           

3.          மலத்தில் சிவப்புநிற கோடு மற்றும்           அதிக அளவில் இரத்தம்

சில சொட்டு இரத்தம் வடியலாம்.             வடியும் அல்லது இரத்தம்  பீச்சி அடிக்கும்                        

4.         ஊறல் அதிக அளவில்  இருப்பதில்லை.                 ஊறல் அதிகம் காணப்படும்.

5.            நாட்பட்ட நோயால் மட்டும்                           வெளிமூலத்தில் – வெளிப்

           சிலருக்கு சிறிய தசை நீட்சி  தெரியலாம்                புறமாக திறட்சி தெரியும்.

         

ஆசனவாய் வெடிப்புநோய் வராமல் தடுக்கும் முறைகள்

  • நார்ச்சத்துள்ள காய்கறி, உணவுப்பொருள்கள், பழங்கள் அதிகமாக உண்பது.
  • அதிக அளவில் தண்ணீர் குடிப்பது
  • மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்வது
  • தொடர்ந்து யோகா பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது.
  • தைராய்டு, நாட்பட்ட கழிச்சல் வியாதி, சய வியாதி மற்றும் எய்ட்ஸ் நோய் இருப்பின் அதற்கான உரிய வைத்தியம் மேற்கொள்வது.

ஆசனவாய் வெடிப்பு நோய்க்கான மருத்துவக்குறிப்புகள்

  1. தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கெண்ணெய் மலம் கழிக்கும் முன்னும் மலம் கழித்த பின்னும் ஆசனவாயின் உட்புறம் விரலில் தேய்த்து போட்டு விடவும்.
  2. கடுக்காய் பிஞ்சு (குருவில்லா கடுக்காய்) 25 கிராம், ஆமணக்கெண்ணெய் 100 கிராம். கடுக்காய் பிஞ்சை சிறிது ஆமணக்கெண்ணெயை விட்டு சிறு தீயில் வறுக்க வேண்டும். சற்று அது உப்பியதும், நன்கு பொடித்து மீதி உள்ள ஆமணக்கெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து கூழாக்கி கொள்ள வேண்டும். இதுவே மூலக்குடார தைலம் ஆகும். இதில் ஒரு கரண்டி அளவு மருந்தை இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும் (அல்லது)
  3. புதிதாக பறித்த குப்பைமேனி இலை 100 கிராம், ஆமணக்கெண்ணெய் 400 கிராம். குப்பைமேனி இலையை ஆமணக்கெண்ணெயில் போட்டு சிறு தீயில் காய்த்து, பொரிந்து வந்ததும் மேற்படி குப்பைமேனி இலையை மட்டும் எடுத்து நன்கு அரைத்து வடித்த ஆமணக்கெண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இதுவே மேனித்தைலம் ஆகும்.

இதில் ஒரு கரண்டி அளவு மருந்தை இரவு ஆகாரத்திற்கு பின் குடித்து பின் வெந்நீரில் அருந்தவும். (அல்லது)

புதிதாக பறித்த நாயுருவி இலை 20 எண்ணம், புதிதாக பறித்த குப்பைமேனி இலை 20 எண்ணம். இவைகளை பசு வெண்ணெயில் வதக்கி ஆகாரத்திற்கு முன் தினமும் காலையில் 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

  • 50 கிராம் அளவு சிறிய வெங்காயத்தை நல்லெண்ணெயில் வதக்கி தினம் இருவேளை சாப்பிடலாம்.
  • இடுப்பு அமர்வு குளியல்

வாய்விரிந்த பாத்திரத்தில் 3 முதல் 4 அங்குலம் வரை வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொண்டு, அதில் இரு கரண்டி திரிபலா சூரணத்தை கலந்து 15 நிமிடங்கள் காலை பாத்திரத்தின் வெளியே இட்டு, ஆசனவாய் பகுதி கீழ் இடுப்புபகுதி நனையுமாறு உட்கார வேண்டும். இவ்வாறு தினம் இருவேளை செய்ய வேண்டும். இதனால் வலிகுறையும். ஆசனவாய் உள்சுருக்கு தசைபகுதி இறுக்கம் குறையும். இதனால் இரத்தஓட்டடத்தை அதிகரிக்க செய்து புண் விரைவாக குணமாகும்.

  • யோகாசன பயிற்சிகள்

வஜ்ராசனம், பாலாசனம், பவனமுத்தாசனம், பாதகோணாசனம், மலாசனம் போன்ற பல ஆசனங்கள் ஆசனவாய் உள் சுருக்குதசை பகுதியை தளர்வடைய செய்து அதன் இறுக்கத்தை குறைத்து புண் ஆறுவதற்கு உதவி செய்கிறது.

கவனிக்க வேண்டியவைகள் ஆசனவாயு வெடிப்பிற்கான வீட்டு வைத்தியம் மற்றும் மலச்சிக்கலுக்கான நிவாரணம் செய்து 10 நாட்களுக்குள் சரியாகவில்லை எனில் அருகில் உள்ள மருத்துவ நிபுணரை அணுகி உரிய மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *