சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA-302-வது கருத்தாய்வுக் கூட்டமானது மரு. கமலக்கண்ணன் தலைமையில் மரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த. இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆகியோர் முன்னிலையில் 01.08.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் மரு.வடமலை நாராயணன் நீரிழிவு மற்றும் புரதம் கசிவு குறித்து விளக்கிப் பேசியதோடு சிறுநீரில் புரதம் வெளியாவதை கட்டுப்படுத்தும் மருந்து செய்முறையையும் கூறினார்.

அடுத்ததாக மரு. கமலக்கண்ணன் இடுப்புக்கு கீழ் செயலிழப்பு ஏற்படுவதை குணப்படுத்தும் வெளிப்பூச்சு தைலம் மற்றும் ஆண்மைக்குறைவுக்கு அனுபவ மருந்து செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் நீரிழிவு குறைபாடு குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கிப் பேசியதோடு அதற்கான மருந்துகளையும் கூறினார்.

அடுத்ததாக, திரு.மைக்கேல் ஆசான் மூலிகைகள் குறித்துப் பேசியதோடு, சில மருந்துப்பொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் பேசினார்.

அடுத்ததாக திரு.ஜெகஜீவன் ஆசான் ஆஸ்துமாவுக்கு  சில எளிய மருந்து முறைகளையும் கூறினார்.

அடுத்ததாக, திரு.ஜேசுபாஸ்கர் ஆசான் மூலநோய் குணமாக வெளிப்பூச்சு மருந்தினையும் அதற்கான சூரணம் செய்முறையையும் கூறினார்.

திரு.ஸ்டீபன் ஆசான் படபடப்பு, தளர்ச்சை, அஸ்திச்சூடு, மேகம், மஞ்சள்காமாலை, பார்வை மங்கல், இவற்றுக்கு தலைக்கு பயன்படுத்தும் தைலம் செய்முறையை கூறினார்.

திரு.அருள்செல்வன் ஆசான் வாதநோய்க்கு தைலம் செய்முறையைக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *