– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
வெவ்வேறு விதமான விவாகரத்து மனு
இந்தியாவில் பலவிதமான மதங்கள் இருக்கையில் ஒவ்வொரு மதத்தையும் சார்ந்தவர்களுக்கு ஏற்றவாறு விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்து விவாகரத்து மனு (Hindu Marriage Original Petision (H.M.O.P)) இந்துக்களாலும், சீக்கியர்களாலும், பவுத்தர்களாலும், ஜெயினர்களாலும் தாக்கல் செய்யப்படுகிறது. சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், இந்துக்கள் என்று அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு இந்து விவாகரத்துச் சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சில தருணங்களில் கணவர் கிருஸ்தவராக இருந்து மனைவி இந்துவாக இருக்கும் நிலையில் இந்து முறைப்படியோ அல்லது கிறிஸ்தவ முறைப்படியோ திருமணம் நடைபெறுகிறது. இவர்களுக்கிடையே கிறிஸ்தவ முறையில் திருமணம் நடைபெற்றிருந்தால் இவர்களின் விவாகரத்து மனு இந்திய விவாகரத்துச் சட்டம் (தற்போது விவாகரத்துச் சட்டம்). இதன்படி விவாகரத்து வழக்கு பதிவு செய்ய முடியும். மாறாக இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடந்திருந்தால் இவர்களின் விவாகரத்து மனு உரிமையியல் வழக்கின் (Original suit) அடிப்படையில் தான் பதிவு செய்ய முடியும்.
முஸ்லீம் மதத்தைச் சார்ந்த கணவன்- மனைவியர் உரிமையியல் வழக்கின் அடிப்படையில் தான் விவாகரத்து மனு தாக்கல் செய்ய முடியும்.
சிறப்புத் திருமணச்சட்டம் (Special Marriage Act)) என்று ஒன்று உண்டு. இங்கு இருவேறு மதத்தவர், இருவேறு ஜாதியினர் திருமணம் செய்வதை அங்கீகரிக்கும் சட்டம் இது. இங்கு ஜாதி – மதத்திற்கு இடமில்லை. இச்சட்டப்படி திருமணம் செய்பவர்கள் கண்டிப்பாக பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தாக வேண்டும்.
இச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்தவர்கள் விவாகரத்து சட்டப்படியோ (DOP) அல்லது உரிமையியல் சட்டப்படியோ (Original suit) விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். விவாகரத்து மனுக்கள் அனைத்துமே அந்தந்த மாவட்டத்திலுள்ள குடும்ப நலநீதிமன்றம் (Family court) முன்பு மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
Leave a Reply