SAVKIA – வின் 201-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கருணாநிதி ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன், திரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.07.2026 அன்று சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில், திரு.வடமலை நாராயணன் அக்குபஞ்சர் மருத்துவம் குறித்து உரையாற்றினார்.
அடுத்ததாக திரு.இராஜேந்திர பிரசாத் முத்திரை, யோகா குறித்து பேசினார்.
மரு.கமலகண்ணன் ஆசான் ஒற்றைதலைவலி, பீனிசத்துக்கு தைலம் செய்முறையைக் கூறினார். மேலும் நடுக்குவாத சூரணம் செய்முறையையும் கூறினார்.
அடுத்ததாக திரு.கருணாநிதி ஆசான் அடிபட்ட வீக்கம், வலி மாற எளிய மருந்து செய்முறையைக் கூறினார்.
திரு. சுப்பிரமணியம் ஆசான் வலி குணமாக எளிய தைலம் செய்முறை, இளைப்பு, இருமல் குணமாக மருந்து, ஒற்றைத் தலைவலி, பார்வைக்குறைவு இவற்றுக்கு எளிய மருந்துகளையும், புற்றுநோய்க்கு மஞ்சள் செந்தூரம் செய்முறையையும் கூறினார்.
திரு.மைக்கேல் ஆசான் காதுவலி, நரம்பு வலிகளுக்கு எளிய மருந்தினையும், ஆஸ்துமா குறித்து உரையாற்றியதோடு, அதற்கான எளிய மருந்தினையும் கூறினார்.
அடுத்ததாக மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆஸ்துமா (சுவாசகாசம்) குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கிப் பேசி, அதற்கான மருந்துகளையும் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு. கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply