உள்ளத்தின் ஓசைகள் என்னும் நூலிலிருந்து
பூமியில் கல் பதித்து
எல்லையிட்ட காலம் முதல்
வந்தபெரும்
தொல்லைகளால்
எல்லையில்லா
துன்பம்…
ஏணிக்கும் எட்டாத
ஏற்றத்தாழ்வுகள்…
எடுத்தாள இயலா
பிரிவினைகள்…
உள்ளங்கள்
கோணலாய் போனதால்
தேடிவந்த மின்னலும்
கோணலாகி
பன்னல் வேர்கள் முதல்…
பாதைகளும் கோணலாகி
ஆறுகள்…
நதிகளெல்லாம் ஆங்காங்கே
அழுதுபுரண்டு
அடியோடு வற்றிவிட்டதோ….
மாறுபட்ட சிந்தனைகள்
வேறுபட்ட நினைவலைகள்…
இத்தனையும் இறைவன்
கொடுத்த வரம் அல்ல…
இவனே….
தொடுத்த வரம்
ஹார்மோன்கள் கர்மங்கள்
இரண்டுமே இலக்கணம்
புரியாத இடைவெளிகள்
இதை சீர்செய்ய
விஞ்ஞானிகள்…
மெய்ஞானிகள்…
போராட்டம்…
இங்கும் வழக்காடுமன்றங்கள்…
இதற்குள்ளும்
அலங்கோலம்!
அரங்கேறமுடியாத மக்கள்…
அடிமாடு போலாகி
அடிமையான வரலாறு
தொடரட்டும்
தொடர்கதையாய்…
விடை கிடைக்கும்
நாள் வரைக்கும்!
விதை கட்டும்…
கருவுகளை…
விடிவு வரும்
ஒருநாள்…
வீதியெலாம்
ஒன்றாகும்…
வீடின்றி….
நிலமின்றி…
விண்குருவிபோல் வாழ…
வழிபெருகும்
அந்நாளில்
எல்லார்க்கும்
எல்லாம்
என்றாகும்
இறை மடியில்.
Leave a Reply