கவிதை

  • By Magazine
  • |

இரா.சிவானந்தம்

நலம்

நலம் என்பது ஒரு

ஊட்டச்சத்து சொல்

நலமே ஒருவர்

என்றே கடிதம் தொடர்கிறது

சந்திக்கும் போது முதலில்

கேட்பது நலமா?

எத்தனை சொத்து- வசதி

இருந்தாலும் நலமே முக்கியமானது

நலம் தருவதற்கென்றே

நாட்டில் எத்தனை மருத்துவமனைகள்?

உறவு- நட்பென ஒருவர்க்கு நலமில்லை

என்றால் என்ன பாடுபடுகிறோம்

உழைப்பதற்கும்

நலம் வேண்டும்

தொண்டு செய்வதற்கும்

நலமே வேண்டும்

அரசு நலமாய் இருந்தால்

நாடு நலமாய் இருக்கும்

மக்கள் நலமாய் இருந்தால்

நாடு செழிப்பாய் இருக்கும்

நலம் தரும் உணவுகளை உண்டு

நலமாய் இருக்கணும்

நலம் பேணுவோம் நலமாய் வாழ்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *