சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA -வின் 300 வது மாதக் கருத்தாய்வு கூட்டமும், 25-வது ஆண்டு வெள்ளிவிழா விருது வழங்கும் நிகழ்ச்சியும் திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் டாக்டர்.அக்ரி.ஒய்.இராஜகுமார், திரு.முழங்குழிலாசர், திரு.கே.செல்வநாதன், வர்ம மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 06.06.2026 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் திரு. கே.செல்வநாதன் 25-வது ஆண்டு வெள்ளிவிழா 30.05.2026 அன்று மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் சிறந்த சித்த மருத்துவ வல்லுநர்களுக்கும், களரி, சிலம்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதை குறித்தும், களரிப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் பேசினார்.

அடுத்ததாக டாக்டர்.ஷேக் முகமது மேகநோய்க்கு எளிய மருந்துகளைக் கூறினார்.

மரு.கமலகண்ணன் கர்ப்பம் தரிக்க எளிய மருந்து முறையினை கூறினார்.

திரு. அருள்தாஸ் ஆசான் இடுப்புவலி மற்றும் தேய்வுகளுக்கு கசாயம் செய்முறையைக் கூறினார்.

டாக்டர். D. சுரேஷ்குமார் வாதநோய்களுக்கான மூலிகை மருந்துகள் குறித்தும் தெளிவாக விளக்கிப் பேசினார்.

வர்ம மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.இராஜேந்திரன் மூட்டுத்தேய்வுக்கு சூரணம் மற்றும் மாத்திரை செய்முறையும், சிறுமொழி வாதத்துக்கு எளிய கசாயம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக சிறந்த சித்த மருத்துவ வல்லுநர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி டாக்டர்.அக்ரி.ஒய். இராஜகுமார் தலைமையில் டாக்டர்.த. இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன், திரு.அசரி ஆசான், திரு.அருள்தாஸ் ஆசான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மருத்துவர் G. பிரபு, மருத்துவர்.ஜாண், மருத்துவர்.கே.செல்வநாதன், மருத்துவர்.ஜெஸ்டின், மருத்துவர்.பொன்.கருணாநிதி, மருத்துவர்.ஜெகஜீவன், மருத்துவர்.ஜெபமணி, மருத்துவர்.கமலக்கண்ணன் ஆகியோருக்கு டாக்டர்.அக்ரி.ஒய். இராஜகுமார் சித்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்.

கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *