சில மூலிகை பழமொழிகள்

சில மூலிகை பழமொழிகள்

  • By Magazine
  • |

– கஸ்தூரிபா ஜாண்ஸன்

உணவு மருந்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும். சில மூலிகை பழமொழிகள் பற்றி பார்ப்போம்.

  1. அழிஞ்சில் ஐந்தும் செய்யும் ஆவிரை அழகு செய்யும்’
  2. அப்படா நீலி அவுரியடா அறுபத்து நான்கு பெயரைக் கொன்றவளடா!

அங்காரிக் காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை என்று தான் பாடுவாள்.

  • அத்திப்பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு.
  • அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா?
  • அவசர சோறு ஆபத்து!
  • ஆவாரைப் பூத்திருக்க…சாவாரைக் கண்டதுண்டோ?
  • ஆடாதோடாவுக்கும் ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும்.
  • ஆடிப்பயிர் காட்டும் ஆவாரை நெல் காட்டும்.
  • ஆடிப்பட்டம் தேடி விதை
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
  • ஆனை மதத்தால் வாழைத்தண்டு…ஆண் மதத்தால் கீரைத்தண்டு.
  • இஞ்சிக்கு கஞ்சி துணை…கஞ்சிக்கு இஞ்சி துணை.
  • இளைத்தவனுக்கு எள்ளு…கொழுத்தவனுக்கு கொள்ளு.
  • இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
  • இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை
  • இருமலைப் போக்கும் வெந்தயக்கீரை.
  • எட்டி பழுத்தாலும் இனிக்காது நெட்டி பருத்தாலும் கணக்காது!
  • எள்ளும் தினையும் எழுபது நாள்.
  • எள்ளையும், கரும்பையும் கசக்கினால் தான் பலன் உண்டு.
  • உமி போன அரிசி முளைக்காது.
  • கடுக்காய் நூறு தாய்க்கு சமம்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
  • கண்ணுக்குத் தெளிவு பொன்னாங்கண்ணி.
  • ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
  • கல்லீரல் பலம் பெற கொய்யாப்பழம்
  • கொலஸ்டிரால் குறைக்க பன்னீர் திராட்சை.
  • காமாலை போக்க கரிசலாங்கண்ணி.
  • கொக்கில் இளம் குஞ்சு கண்டவனுமில்லை. கோணாத தென்னை மரம் பார்த்தவனுமில்லை.
  • கீரைதோட்டம் நமது மருந்துப் பெட்டி
  • சீந்தில் இருக்க காய்ச்சல் ஏது
  • சீரகம் இல்லா உணவும், சிறுபிள்ளைகள் இல்லா வீடும் சிறக்காது.
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியர் இல்லை!
  • சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி…சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு
  • சித்தம் தெளிக்கும் வில்வம்…பித்தம் தணிக்கும் நெல்லிக்காய்
  • சுக்கு வீட்டில் இருந்தால் சுகம் உடம்பில் இருக்கும்.
  • தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு
  • தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை
  • பொன்னை எறிந்தாலும் பொடி கீரையை எறியாதே
  • பொன்னாங்கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம்.
  • ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
  • பளபள பார்வைக்கு பப்பாளி, தள தள மேனிக்கு தக்காளி
  • பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
  • பனையை வளர்த்தவன் பார்த்துட்டு சாவான். தென்னை வளர்த்தவன் தின்னுட்டு சாவான்
  • வல்லாரை வெல்ல வல்லாரை சாப்பிடு
  • வாய்ப்புண் நீங்க மணத்தக்காளி! வயிற்றுப்புண் நீங்க சோற்றுக் கற்றாழை.
  • வாழை வாழ வைக்கும்
  • வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
  • வாதநோய் தடுக்க அரைக்கீரை
  • வாய் துர்நாற்றம் நீங்கும் ஏலக்காய்
  • வெந்தால் தெரியும் வெங்காயத்தின் மகிமை.
  • வீட்டுக்கு ஒரு முருங்கை ஊருக்கு ஒரு அவரை.
  • மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்.
  • மல்லிகை கடைக்கு மணமே விளம்பரம்.
  • மிஞ்சும் நோயெல்லாம் வஞ்சகம் இல்லாமல் தடுக்கும் இஞ்சி.
  • மூட்டுவலி போக்க முடக்கற்றான்
  • மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு
  • மாதுளை, தூதுளை வளர்த்த வீடு வயிற்றிலே, நெஞ்சிலே களங்கமில்லை.
  • மேனி துலங்க குப்பைமேனி.
  • வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் கீரை.
  • பருமன் குறைய முட்டைகோஸ்
  • நன்னாரி விரும்ப  பொன்னாகும் மேனி.
  • நித்திய கல்யாணியாம் புற்றினை போக்கும் கண் அவளாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *