கவிதை
- By Magazine
- |
-
– பைசல். தக்கலை
ஒரு கவிஞன்
விவசாயிகளைப் போல
மொழியை
உழுது பயிரிடுகிறான்
களையெடுக்கிறான்
அறுவடையின் போது
எந்த லாபமும் இல்லை
செய்வதறியாது
திகைக்கும் நிமிடங்களில்
அவனால்
ஒரு முழு கவிதைத்
தொகுப்பினுள்
தற்கொலை செய்யமுடியாது
அந்தத் தொகுப்பில்
மரம் ,கயிறு ,விஷம்
குறித்த எந்த
கவிதையும்
அவன் எழுதவில்லை
Leave a Reply