“பாற்கடலும் தேவதையின் பூனைக்குட்டியும்” என்ற இத்தொகுப்பு, கவிதை உலகில் ஒரு புதிய அதிர்வையும், பரவலான சிந்தனையையும் நமக்கு அள்ளித் தருகிறது. பாரதி கவிதைகளின் முன்னோடி வடிவம் போல, இந்த எளிய கவிதை வடிவத்தின் முன்னோடியாக சுதே கண்ணன் திகழ்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது.
இந்நூலில் சுதே கண்ணன் அவர்கள் கவிதைகளைச் சிறுகதை வடிவிலும், வாசிப்பாரை மயக்கும் எளிய நடையிலும் தந்துள்ளார். இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு எந்தவொரு ஐயமும் இன்றி, கதையைப் போல மனதை நெகிழச் செய்து, நிறுத்தி நிதானமாகப் படித்தால் அதன் முழுப் பொருளும் மிக அழகாகப் புரியும் வண்ணம் படைத்துள்ளார்.
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் சில இடங்களில் வரலாற்றையும், சில இடங்களில் காதலையும், சில இடங்களில் ஆன்மீகத்தையும், சில இடங்களில் சமகால வாழ்வியலையும் பேசுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு சூட்சுமம் மறைந்திருப்பதை நாம் வாசிக்கும்போது உணர முடிகிறது.
கவிதை வாசிப்பில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும், குறிப்பாக எளிய வடிவில் ஆழமான கருத்துக்களைத் தேடும் வாசகர்கள் அனைவரும் தங்களது நூலகத்தில் சேர்க்க வேண்டிய ஒரு உன்னதமான படைப்பு இத்தொகுப்பாகும்.
விலை 200 பக்கங்கள் : 196
நூல் தொடர்புக்கு
குமரி பிரசுரம் – குமரி மீடியா
2-60/1, ஓம் முருகா இல்லம்
கொல்லம்விளை, குற்றக்கரை
தக்கலை- 629175.
அலைபேசி: 9943767666, 9942118989
Leave a Reply