அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளிவிழா

அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளிவிழா

  • By Magazine
  • |

அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளி விழா, மருத்துவ நூல்கள் வெளியீடு, மூத்த ஆசான்களுக்கு விருது வழங்குதல் மற்றும் வர்ம மருத்துவச் செயலாலரங்கம் உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள் கன்னியாகுமரி மாவட்டம்  மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடநதது.

துவக்க விழாவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்

வர்ம மறுமலர்ச்சியின் தந்தை Dr.T. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் Agri.Y. இராஜகுமார் மற்றும்  மரு. வ. பஞ்சாட்சி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் விழா தொடங்கியது.

திரு. ஜெயகர்ணன் (இணை ஆசிரியர் (புதியதென்றல்) அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘மூலிகை கண்காட்சி மற்றும் வேளாண் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை’ மூலிகை அறிவியல் ஆய்வறிஞர் முனைவர் Dr.லோகநாதன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 அறிவியல் அறிஞர், வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் Prof.Dr.ரிச்சர்ட் கென்னடி அவர்கள் வேளாண் விழிப்புணர்வு உரையாற்றினார். Dr.கமலக்கண்ணன், Dr.சுந்தரம், Mr.ஸ்டீபன் மற்றும் Dr.M. அஜீத் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து  ஷாக்ஷா மற்றும் ரிதி ஆகியோரின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நூல்கள் வெளியீடு

விழாவில் வர்ம மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த மூன்று முக்கிய நூல்கள் வெளியிடப்பட்டன:

 1. ஆட்டிசம் மற்றும் சிறப்பு குறைபாடுகளுக்கு வர்ம மருத்துவம்- (ஆசிரியர் வர்ம மறுமலர்ச்சியின் தந்தை Dr.T. இராஜேந்திரன் அவர்கள் நூலினை  Dr. அலெக்ஸ் பெர்ஜின்பெலோ MD வெளியிட, திருமதி. N.K.கலாராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்).

2. தமிழர் வேதியியல் விஞ்ஞானம் – பாகம் 1 – (ஆசிரியர்: முனைவர். T. மைக்கேல் ஆசான், நூலினை பேரா. Dr.ரிச்சர்ட் கென்னடி வெளியிட,  Dr. ஆனந்தராஜ் பெற்றுக் கொண்டார்).

 3. அருள்தரும் அனுபவ தைலமுறைகள்…– ஆசிரியர். முனைவர். அருள்தாஸ் ஆசான், நூலினை விலவூர் பேரூராட்சி தலைவர் திரு. பில்கான் வெளியிட, கவுன்சிலர் திரு. ஜீட்ஸ் பெர்லின் பெற்றுக் கொண்டார்.

யோகா செயலாலரங்கம் மற்றும் மூத்த ஆசான்கள் கௌரவிப்பு

தொடர்ந்து, மதுரை விஜி வேதா ஆயுஷ் நல்வாழ்வு மையம் மற்றும் திருச்சி யோகா வாழ்க்கை கலை மாணவ மாணவிகள் பங்கேற்ற ‘யோகா செயலாலரங்கம்’ திரு.  முத்துமணி மற்றும் திரு. கண்ணன் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

மதிய அமர்வில் மூத்த ஆசான்களை கௌரவிக்கும்  நிகழ்வு Dr. சுரேஷ்குமார்,   Mr.  பிரபாகரன், திரு. பொன். கருணாநிதி மற்றும் திரு. அருள்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 இதில் சித்த மருத்துவச் செம்மல், வர்மச் செம்மல், களரி திலகம், ஆயுர்வேத ஆச்சார்யா போன்ற உயரிய விருதுகள் தகுதியான ஆன்மீக மற்றும் மருத்துவ ஆசான்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

வர்ம மருத்துவச் செயலரங்கம் & களரிப்போட்டி

பிற்பகலில் நடைபெற்ற ‘வர்ம மருத்துவச் செயலாலரங்கில்’ வர்ம மறுமலர்ச்சியின் தந்தை Dr.T.இராஜேந்திரன்  விரிவான விளக்கவுரை  வழங்கினார்.

அதன் பின் நடைபெற்ற விறுவிறுப்பான ‘களரிப்போட்டியை’ அட்வகேட் திரு. ஐசக்சேம்ராஜ்  தொடங்கி வைத்தார். இதில் வர்ம ஆசான்கள் முன்னிலை வகித்தனர்.

நிறைவு விழா

மாலை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் இந்த பிரமாண்ட வெள்ளி விழா  நிறைவடைந்தது.

SAVKIA அமைப்பின் தலைவர் திரு. கே. செல்வநாதன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நமது பாரம்பரிய கலைகளையும், மருத்துவ முறைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பொதுமக்களும், மருத்துவ ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *