நம் வாழ்க்கையை பார்க்கும் விதம்

  • By Magazine
  • |

– ஓஷோ

தன்னுடைய வகுப்பில் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எதையோ விளக்கிக் கொண்டிருந்தார். தனக்கு பின்னாலிருந்த கரும்பலகையில் ஒரு பெரிய துண்டு வெள்ளைத்தாளை தன் மாணவர்களிடம் இந்தக் கரும்பலகையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

எல்லோரும் கையைத் தூக்கினார்கள், அதனால் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும் தனித்தனியாக அவன் கரும்பலகையில் என்ன பார்த்தான் என்று கேட்டார்.

எல்லா மாணவர்களும் சொன்னார்கள், நாங்கள் ஒரு கரும்புள்ளியை பார்க்க முடிகிறது.

வகுப்பு முழுவதும் கேட்டுவிட்டு, அவர் உரக்க சிரித்தபடி சொன்னார், அங்கே ஒரு பெரிய வெள்ளைத்தாள் இருப்பதை நீங்கள் யாரும் பார்க்கவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. எல்லோருமே அந்த தாளில் உள்ள சின்ன கறுப்பு புள்ளியைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது. ஆனால் யாராலும் அந்த கரும்பலகையில் உள்ள பெரிய வெள்ளைத்தாளை பார்க்க முடியவில்லை. அந்த வகுப்பிலிருந்த ஒரு மாணவனால் கூட நான் அந்த கரும்பலகையில் ஒரு வெள்ளைத்தாளை கண்டேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லோராலும் அந்த வெள்ளைத்தாளிலிருந்த கரும்புள்ளியைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது.

நாமும் வாழ்க்கையை அப்படித்தான் பார்க்கிறோம். நம் வாழ்க்கையின் மலர்களை பார்ப்பதில்லை, முட்களைத்தான் பார்க்கிறோம். நாம் பிரகாசத்தை பார்க்கவில்லை, நாம் கருமையை தான் பார்க்கிறோம். நாம் அதை அன்பாக பார்ப்பதில்லை, வெறுப்பாகத் தான் பார்கிறோம். நாம் பேரின்பத்தை பார்க்கவில்லை. நம் அதிலிருக்கும் துன்பத்தையே பார்க்கிறோம். பிறகு நாம் இதை எல்லாவற்றையும் சேர்த்து வைக்கிறோம். நமது முழு மனநிலையும் நாம் துன்பங்களை, துயரங்களை மட்டுமே பார்க்க முடியும் என்றாகிறது. பிறகு நமது வாழ்க்கை என்பது நரகமாகிறது, அது மிகவும் வியப்பானது?

ஆனால் வாழ்க்கையை சொர்க்கமாக்க கூட முடியும். சொர்க்கமும், நரகமும் வாழ்க்கையை மனிதன் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. கீழே ஒரு நரகமும் இல்லை, மேலே ஒரு சொர்க்கமும் இல்லை. இவையெல்லாம் ஒவ்வொருவரின் புரிந்து கொள்ளுதலும், அவர் விஷயங்கள் பார்க்கும் கோணத்திலும் ஒளிந்திருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியற்ற பிறகு நீங்கள் வாழ்க்கையின் இருண்ட இரவுகளைப் பார்க்கலாம். நீங்கள் உங்கள் கண்களை பேரின்பத்தின் பக்கம் திரும்ப விரும்பினால், பிறகு நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அதன்மீது நீங்கள் ஒரு வெளிப்பார்வையை அமைத்துக் கொள்வீர்கள். உங்களுடைய பார்க்கும் கோணம் பேரின்பத்தை பற்றி எண்ணத்தை அமைக்கும். இன்றைக்கு பகல் முழுவதும் மலர்களை மட்டுமே பார்த்தால் நாளைக்குள் நீங்கள் மலர்களை மட்டுமே பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். நாள் முழுவதும் முட்களையே பார்த்துக் கொண்டிருந்தால், பிறகு நாளை நீங்கள் முட்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும் நாம் வாழ்கிறோம். நாம் எங்கெல்லாம் வாழ்க்கையில் ஒளி இருக்கிறது என்பதை தேட வாழ வேண்டும், எங்கெல்லாம் பேரின்பம் இருக்கிறதோ அதைத் தேட வாழ வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *