– சிவ. விஜயபாரதி
அதீத குரலெடுத்து கத்தி
பாய்கின்றன கணைகள்
விழுந்து வெடிக்கின்றன குண்டுகள்.
வீடுகளுக்குள்ளேயும்
பதுங்கு குழிகளுக்குள்ளேயும்
இருக்கச்சொல்லி
எச்சரிக்கை செய்கின்றன
சைரன் ஒலிகள்.
எதற்காகவும் யாருக்கும்
அஞ்சவும் அடிபணியவும் மாட்டோமென எதிர்ப்புக் குரலை
அதன் சகாக்களுடன்
குண்டுகள் பொழிந்து நசுக்கியது.
எதிர் குரல் சூளுரைத்த
காணொளிகளை
மறுபடி மறுபடி
ஒளிபரப்புச் செய்கின்றன
தொலைக்காட்சிகள்.
இடிபாடுகளில் சிக்கிய உடல்கள்
இரத்தத்தில் தோய்ந்திருந்தது.
Leave a Reply