பெண்ணடிமை கொள்ளோம்

பெண்ணடிமை கொள்ளோம்

  • By Magazine
  • |

வீரமென்ன வீரமடா

பெண்டிரைப் போட்டுதைக்கும்

வீரமென்ன வீரமடா

தீரன் என்று நீயிருந்தால்

திறமையொன்று கொள்ளடா

ஆருமின்றி ஆட்டினைப்போல்

அடிமையாக்கிப் பெண்களை

கூட்டிலிட்டுக் குதறும்

கொடிய மிருகம்போல

கூடும் புத்தி மாற்றடா

தேடும் சொத்து சுகமெல்லாம்

சுற்றி நின்று அழுமடா

செத்த சவம்மீதிலே

மெத்தசுகம் ஏதடா?

பெற்ற தாயும் பெண்ணடா

சற்று நின்று கேளடா

உற்றுணர்ந்து பார்த்தால்

உன்னுயிரும் தானடா?

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…                          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *